என் புருசன் குழந்தை மாதிரி

எஸ். பி. இராஜ்குமார் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் புருசன் குழந்தை மாதிரி (En Purushan Kuzhandhai Maadhiri) என்பது 2001 ஆவது ஆண்டில் எஸ். பி. இராஜ்குமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்தது.[1][2][3] இத்திரைப்படம் சிவாஜி, மீரா ஜாஸ்மின், சங்கீதா ஆகியோரின் நடிப்பில் மா அயநா சண்டி பில்லாடு எனும் பெயரில் தெலுங்கில் மறுஆக்கம் செய்யப் பட்டது.

என் புருசன் குழந்தை மாதிரி
இயக்கம்எஸ். பி. இராஜ்குமார்
இசைதேவா
நடிப்புலிவிங்ஸ்டன்
தேவயானி
விந்தியா
வடிவேலு
வெளியீடு2001
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

முருகேசன் (லிவிங்ஸ்டன்), தனது மாமன் மகளான மகேஸ்வரியையே (தேவயானி) தனது உலகமென நினைத்து வாழ்கிறார். அவருடைய காதலுக்கு மகேஷ்வரியும் சம்மதம் தரவே இருவருக்கும் திருமணம் நடக்கிறது. இந்நிலையில் சாந்தமூர்த்தியிடம் நடனக் கலைஞரான சிந்தாமணி (விந்தியா) மாட்டிக் கொள்ளும் போது அவரை முருகேசன் காப்பாற்றி தனது தோட்டத்தில் தங்க வைக்கிறார். எதிர்பாராத விதமாக சிந்தாமணி கர்ப்பமாக முருகேசன் காரணமாகிறார். இதே நேரத்தில் முருகேசனின் மனைவியான மகேஷ்வரியும் கர்ப்பமாகிறார். இந்த பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதே இப்படத்தின் இறுதிக் காட்சியாகும்.

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.[4][5]

எண்பாடல்பாடியவர்(கள்)
1ஆடிய ஆட்டம்தேவா
2சித்திரையேஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம்
3நாலு அடி ஆறு அங்குலம்வடிவேலு
4பட்டாம்பூச்சிமனோ, அனுராதா ஸ்ரீராம்
5வாழ வைக்கும்சபேஷ், கிருஷ்ணராஜ்
6வெண்ணிலாஉன்னிகிருஷ்ணன், சத்யா

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்