என்சலடசு (துணைக்கோள்)

என்சலடசு (Enceladus) என்பது சனிக் கோளின் ஆறாவது பெரிய துணைக்கோள் (நிலா) ஆகும்[11]. இது 1789 ஆம் ஆண்டில் வில்லியம் ஹேர்ச்செல் என்ற பிரித்தானிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது[12]. வொயேஜர் விண்கலங்கள் இரண்டு 1980களின் ஆரம்பத்தில் இதற்கு அருகாமையில் செல்லும் மட்டும் இத்துணைக்கோள் பற்றிய அறிவு மிகவும் குறைவானதாகவே இருந்தது. ஆனாலும், இதன் மேற்பரப்பில் பனிக்கட்டி நீர் இருப்பது அறியப்பட்டிருந்தது. வொயேஜர் விண்கலங்கள் அனுப்பிய தகவல்களின்படி, இத்துணைக்கோளின் விட்டம் 500 கிமீ ஆகும். இது டைட்டான் என்ற சனியின் மிகப்பெரிய துணைக்கோளை விட 10 மடங்கு குறைவானதாகும். இதன் மேற்பரப்பில் விழும் சூரிய வெளிச்சம் அனைத்தையும் இது மீளத் தெறிக்கிறது.

என்சலடசு
Enceladus
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்) வில்லியம் ஹேர்ச்செல்
கண்டுபிடிப்பு நாள் ஆகத்து 28, 1789[1]
பெயர்க்குறிப்பினை
வேறு பெயர்கள்சனி II
அரைப்பேரச்சு 237,948 கிமீ
மையத்தொலைத்தகவு 0.004 7[2]
சுற்றுப்பாதை வேகம் 1.370 218 நாட்கள் அல்லது 118,386.82 செக்[3]
சாய்வு 0.019° (சனியின் நிலநடுக்கோடுக்கு)
இது எதன் துணைக்கோள் சனி (கோள்)
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 513.2×502.8×496.6 கிமீ[4]
சராசரி ஆரம் 252.1 ± 0.1 கிமீ (0.0395 பூமிகள்)[5]
நிறை (1.080 22 ± 0.001 01)×1020 கிகி[5] (1.8×10-5 பூமி)
அடர்த்தி 1.609 6 ± 0.002 4 கி/சமீ3[5]
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம்0.111 மீ/செ2 (0.011 3 g)
விடுபடு திசைவேகம்0.239 கிமீ/செ (860.4 கிமீ/ம)
சுழற்சிக் காலம் ஏககாலச் சுழற்சி
அச்சுவழிச் சாய்வு சுழியம்
மேற்பரப்பு வெப்பநிலை
   கெல்வின்[7]
சிறுமசராசரிபெரும
32.9 கெ75 கெ145 கெ
தோற்ற ஒளிர்மை 11.7 [6]
வளிமண்டலம்
பரப்பு அழுத்தம் trace, significant spatialvariability[8][9]
வளிமண்டல இயைபு 91% நீர் ஆவி
4% நைதரசன்
3.2% காபனீரொக்சைட்டு
1.7% மெத்தேன்[10]

2005 ஆம் ஆண்டில், நாசாவின் கசினி விண்கலம் என்சலடசுவை பல தடவைகள் அணுகி, அதன் மேற்பரப்பை விபரமாக ஆராய்ந்தது. குறிப்பாக, இத்துணைக்கோளின் முனைவுப் பகுதியில் நீர் செறிந்த புகை வெளியேறுவதைக் கண்டுபிடித்தது.

நிலவின் பனிக்கட்டி அடர்ந்த மேற்பரப்பிற்குக் கீழே பெருமளவு உப்புநீர் அடங்கிய தேக்கம் ஒன்று இருக்கக்கூடிய சான்றுகளை கசினி விண்ணுளவி கண்டுபிடித்துள்ளதாக 2011 சூன் மாதத்தில் நாசா அறிவியலாளர்கள் அறிவித்தனர்.[13]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்