எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு
எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு (The Royal Spanish Football Federation, Spanish: Real Federación Española de Fútbol, RFEF) என்பது எசுப்பானிய நாட்டில் கால்பந்து நிர்வாகத்திற்கான அதிகாரபூர்வ கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் மாட்ரிட் நகரில் அமைந்துள்ளது.
யூஈஎஃப்ஏ | |
---|---|
[[File:|150px|Association crest]] | |
தோற்றம் | 1909 (as Federación Española de Clubs de Football)[1] 1913[2] |
ஃபிஃபா இணைவு | 1914 |
யூஈஎஃப்ஏ இணைவு | 1954 |
தலைவர் | ஏஞ்சல் மரியா வியார் |
இணையதளம் | rfef.es |
இது தேசிய அளவில் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவு, இரண்டாம் நிலை கால்பந்துக் கூட்டிணைவு மற்றும் பல கோப்பைக்கான போட்டிகளையும் நடத்துகிறது. மேலும் பிராந்திய கால்பந்துக் கூட்டமைப்புகளோடு இணைந்து இன்னும் அடிப்படையான கூட்டிணைவுத் தொடர்களையும் நடத்துகிறது.
ஆண்கள், பெண்கள் மற்றும் இளையோருக்கான எசுப்பானியா தேசிய காற்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பது இதன் பொறுப்பாகும்.
போட்டிகள்
எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்து நிர்வகிக்கிறது. அவை பின்வருமாறு:
- லா லீகா
- தேசிய கோப்பைகள்:
- கோபா டெல் ரே
- எசுப்பானிய உன்னதக் கோப்பை
- கூட்டமைப்புக் கோப்பை
- பெண்களுக்கான போட்டிகள்:
- முதல்நிலை கூட்டிணைவு - பெண்கள்
- இரண்டாம்நிலை கூட்டிணைவு - பெண்கள்
- டி ல ரெய்னா கோப்பை - Copa de la Reina
மற்றும்இளையோருக்கான பல்வேறு கால்பந்துப் போட்டிகள்.