எசுப்பானியா தேசிய காற்பந்து அணி

ஸ்பெயினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆண்கள் தேசிய சங்க கால்பந்து அணி

எசுப்பானியத் தேசிய கால்பந்து அணி (எசுப்பானியம்: Selección de fútbol de España) பன்னாட்டு கால்பந்துப் போட்டிகளில் எசுப்பானியாவின் சார்பாக விளையாடும் அணி ஆகும். இதனை எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகித்து வருகிறது. தற்போதைய பயிற்றுனராக வின்சென்ட் டெல் பாஸ்க் இருக்கிறார். இந்த எசுப்பானிய அணியை பொதுவழக்கில் La Roja ("சிவப்பு"), La Furia Roja ("சிவப்பு வெறி"), La Furia Española ("எசுப்பானிய வெறி") எனக் குறிப்பிடுகின்றனர்.[3][4] 1904இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. இதுவரை நடைபெற்ற 19 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பதின்மூன்றிலும் 14 ஐரோப்பியப் போட்டிகளில் ஒன்பதிலும் பங்கேற்றுள்ளது. மூத்த மற்றும் இளைய அணிகள் மொத்தம் 73 பன்னாட்டு கோப்பைகளை வென்றுள்ளன.

எசுப்பானியா
Shirt badge/Association crest
அடைபெயர்
  • La Furia Roja (சிவப்பு வெறி)[1][2]
  • La Furia (வெறியர்கள்)
  • La Furia Española (எசுப்பானிய வெறி)
  • La Roja (சிவப்பு)
கூட்டமைப்புரியல் பெடரேசியோன் எசுப்பானோலா டெ புட்பால் (RFEF)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தலைமைப் பயிற்சியாளர்வின்சென்ட் டெல் பாஸ்க்
அணித் தலைவர்ஐக்கர் காசில்லாசு
Most capsஐக்கர் காசில்லாசு (152)
அதிகபட்ச கோல் அடித்தவர்டேவிட் வில்லா (56)
பீஃபா குறியீடுESP
பீஃபா தரவரிசை1
அதிகபட்ச பிஃபா தரவரிசை1 (சூலை 2008 – சூன் 2009, அக்டோபர் 2009 – மார்ச் 2010, சூலை 2010 – சூலை 2011, அக்டோபர் 2011 – நடப்பு)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை25 (மார்ச் 1998)
எலோ தரவரிசை2
அதிகபட்ச எலோ1 (செப் 1920 – மே 1924, செப் – திச 1925, சூன் 2002, சூன் 2008 – சூன் 2009, சூலை 2010- சூன் 2013, செப்டம்பர் 2013)
குறைந்தபட்ச எலோ20 (சூன் 1969, சூன் 1981, நவம்பர் 1991)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 எசுப்பானியா 1–0 டென்மார்க் 
(பிரசெல்சு, பெல்ஜியம்; 28 ஆகத்து 1920)
பெரும் வெற்றி
 எசுப்பானியா 13–0 பல்கேரியா 
(மத்ரித், எசுப்பானியா; 21 மே 1933)
பெரும் தோல்வி
 இத்தாலி 7–1 எசுப்பானியா 
(ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து; 4 சூன் 1928)
 இங்கிலாந்து 7–1 எசுப்பானியா 
(இலண்டன், இங்கிலாந்து; 9 திசம்பர் 1931)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்14 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 2010
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்9 (முதற்தடவையாக 1964 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1964, 2008 மற்றும் 2012
கோடை ஒலிம்பிக்சு
பங்கேற்புகள்10 (முதற்தடவையாக 1920 இல்)
சிறந்த முடிவுவாகையாளர்கள், 1992
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2009 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 2013 பிபா கூட்டமைப்பு கோப்பைப் போட்டி
Honours
வென்ற பதக்கங்கள்
ஆடவர் காற்பந்து
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1920 அன்ட்வர்ப் Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 பார்செலோனா Team
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2000 சிட்னி Team

எசுப்பானியா 2010 உலகக்கோப்பை மற்றும் யூரோ 2012 கோப்பைகளை வென்று உலகக்கோப்பை மற்றும் ஐரோப்பியக் கோப்பைகளின் நடப்பு வாகையாளராவர். உலக எலோ தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளனர்.[5] பிபா உலகத் தரவரிசையில் முதலாமிடத்தில் உள்ளனர். மேலும் யூரோ 2008இல் வென்றமையால் தொடர்ந்து மூன்று பன்னாட்டுக் கோப்பைகளை வென்ற ஒரே தேசிய அணியாக விளங்குகின்றனர். 29 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடையாத அணியாக உள்ளனர். இவற்றால் காற்பந்து விமரிசகர்களும், வல்லுனர்களும் முன்னாள் விளையாட்டாளர்களும் தற்போதைய எசுப்பானிய அணியை எக்காலத்திலும் உலகக் கால்பந்து வரலாற்றிலேயே மிகச்சிறந்த அணியாக மதிப்பிடுகின்றனர்.[6][7][8][9][10]

மேற்சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்