ஊர்வன

ஊர்வன (Reptile) என்பவை முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை. பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.

ஊர்வன
புதைப்படிவ காலம்:Pennsylvanian - Holocene 312–0 Ma
PreЄ
Pg
N
வலப்பக்கமாக: பச்சை ஆமை (Chelonia mydas), பிடரிக்கோடன் (Sphenodon punctatus), நைல் முதலை (Crocodylus niloticus),மற்றும் Sinai Agama (Pseudotrapelus sinaitus).
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
Sauropsida
வகுப்பு:
{{{1}}}

Laurenti, 1768
Extant subgroups

For extinct orders, see text

ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்

ஆமைகள் அல்லது நில ஆமைகள் (Tortoises) என்பவை தெசுடுடினிடே (Testudinidae) என்னும் குடும்பத்தைச் சார்ந்த நிலத்தில் வாழும் ஊர்வன உயிரினமாகும். நில ஆமைகளின் மேலோடு அவற்றை ஒத்த கடல்வாழ் இனங்களைப் போல இரை தின்னிகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்கிறது. ஓட்டின் மேல் பாகம் பரிசைமூடியாகவும் கீழ் பாகம் மார்புப்பரிசமாகவும் விளங்குகிறது. இந்த இரண்டும் ஒரு பாலத்தின் மூலம் இணைந்துள்ளன. ஆமை அகவங்கூடு மற்றும் வெளிவங்கூடு இரண்டும் உடையது. ஆமைகளின் அளவானது சில சென்டிமீட்டரில் இருந்து இரண்டு மீட்டர் வரை வேறுபடுகிறது. தம்மைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலைகளைப் பொறுத்து ஆமைகள் பகலில் நடமாடும் விலங்குகளாகவும் மங்கிய ஒளியில் நடமாடுவதாகவும் இருக்கின்றன. ஆமை பொதுவாகத் தனிமையை விரும்பக்கூடிய உயிரினமாகும்.

பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். முதுகெலும்புள்ள நீளமான உடலும் சிறு தலையும் கொண்ட விலங்கு. இவை கால்கள் அற்றவை ஆனாலும் உடலால் நிலத்தை உந்தி வேகமாக நகரவல்லவை. சில பாம்புகள் நீரிலும் நன்றாக நகரவல்லவை. பாம்பு வகையில் 2,700க்கும் அதிகமான வகைகள் உண்டு. சில பாம்புகளே நச்சுப்பாம்புகள். நூற்றில் ஒரு விழுக்காடுக்கும் குறைவானவையே நச்சுப்பாம்புகள் (< 1% ). இந்தியாவிலுள்ள நல்ல பாம்பு (நாகப்பாம்பு), கட்டுவிரியன் போன்றவை நச்சுப்பாம்புகள். இவ்வகை நச்சுப் பாம்புகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி விலங்குளைப் பற்களால் கவ்விக் கடிக்கையிலே பாம்பின் பல்லுக்குப் பின்னே உள்ள நச்சுப்பையில் இருந்து நச்சுப்பொருளை எதிரி விலங்கின் உடலுள்ளே செலுத்துகின்றது. கடிபட்ட விலங்கு விரைவில் இறக்க நேரிடும்.

முதலை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது நீரிலும், நிலத்திலும் வாழ வல்லது. இது நான்கு கால்களையும் வலுவான வாலினையும் கொண்டது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களின் வெப்ப மண்டலங்களில் வாழ்கின்றது. ஊர்வனவற்றிலேயே முதலைகளே நன்கு படிவளர்ச்சி அடைந்த உடலமைப்பைப் பெற்றுள்ளன.[சான்று தேவை] மற்ற ஊர்வனவற்றைப் போல் அல்லாமல் இவை நான்கு இதய அறைகள், டயாஃப்ரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும் இவற்றின் நீரில் நீந்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. நீரின் எதிர்ப்பைக் குறைப்பதற்காக இவை நீந்தையில் கால்களை மடித்துக் கொள்கின்றன. மேலும் இவை இரையை வேட்டையாடுவதற்காக வலுவான தாடைகளையும் கூரான பற்களையும் கொண்டுள்ளன.

பல்லிகளையும் ஓந்திகளையும் உள்ளடக்கிய பல்லியோந்திகள் (Lacertilia) என்ற இந்த துணைவரிசையில் தான், ஊர்வனவற்றின் அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் சிற்றினங்கள் பூமியில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பாக செதிலுடைய ஊர்வனவற்றில், இதுவரை 3800 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளது[1].

ஓணான் பல்லி வகையைச் சார்ந்தது. கரட்டாண்டி எனப்படும் இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். இது ஓந்தி அல்லது பச்சோந்தி போல் நிறம் மாறுவது அன்று. அதனைப் போன்று நீளமான நாக்கும் இல்லை. இது கண்களை 360° (பாகை) கோணத்தில் சுற்றாது. பெரும்பாலும் மரங்களிலும் செடிகளிலும் காணப்படும் இது சிறு பூச்சிகளை உண்ணும். வேகமாக ஓடும். பற்களை உடையது.

உடும்புகள் (Monitor lizard) பொதுவாகப் பெரிய ஊர்வன உயிரினங்களாகும், எனினும் 20 சென்டிமீட்டரளவில் நீளம் கொண்டுள்ள இனங்களும் உண்டு. இவை நீண்ட கழுத்து, வலுமிக்க வால் மற்றும் நகங்கள் மேலும் நன்கு வளர்ந்த அவயவங்கள் என்பனவற்றைக் கொண்டுள்ளது. பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் வசிப்பவை, ஆனால் மரங்களில் வாழ்வனவும் மற்றும் நீர்-நிலவாழ்வனவும் உள்ளன. கிட்டத்தட்ட அனைத்து உடும்பு இனங்களும் புல் உண்பனவாகும், எனினும் வரானசு பிட்டாட்டவா (Varanus bitatawa) , வரானசு மபிடாங் (Varanus mabitang) மற்றும் வரானசு ஒலிவாசியசு (Varanus olivaceus ) ஆகியவை பழம் சாப்பிடுவதாக அறியப்பட்டுள்ளது.[2][3] இவை முட்டையிடல் மூலம் இனம் பெருக்கும் உயிரினங்கள் ஆகும். 7 தொடக்கம் 37 வரையான முட்டைகள் இட்டு மண்ணுக்குள் அல்லது மரப் பொந்துக்குள் மறைத்துக் காக்கின்றன.[4] உயிரியல் வகைப்பாட்டில் உடும்பின் பேரினப்பெயர் வரானசு (Varanus) ஆகும்.

பிடரிக்கோடன் (Tuatara) நியூசிலாந்து நாட்டில் மட்டுமே வாழும் ஊர்வன வகுப்பு விலங்கு ஆகும். இது பார்ப்பதற்கு ஓணான், ஓந்தி முதலிய பல்லியோந்திகளைப் போலவே தோன்றினாலும், அவ்வினங்களில் இருந்து வேறுபடும் ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் எனும் வரிசையில் வரும் விலங்கு.[5][6] 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பல்கிச் செழித்திருந்த ஆப்புப்பல்வரிசையமைப்பிகள் வரிசையில் இரு பிடரிக்கோடன் இனங்கள் மட்டுமே இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவை.[6] இன்று வாழும் உயிர்களில் இவற்றின் அண்மிய மரபுவழி உறவு கொண்டவை பாம்புகளையும் பல்லியோந்திகளையும் உள்ளடக்கிய செதிலுடைய ஊர்வன (Squamata) மட்டுமே. இதனால் பல்லி பாம்பு இனங்களின் மரபுவழித் தோன்றலையும் படிவளர்ச்சியையும் ஆய்வதற்கும், அவற்றின் மூதாதைய இனங்களின் புறத்தோற்றம், வாழியல் முறைகள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும் பிடரிக்கோடன்களை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் நோக்குகின்றனர். பறவைகள், தொன்மாக்கள், முதலைகள் போன்ற மிகப்பழைய மரபில் வந்த உயிரினங்களின் மூதாதையரைப் பற்றி அறிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. இவ்விலங்கின் மண்டையோட்டை மட்டும் வைத்து வைத்து முதலில் பிடரிக்கோடன்களையும் பல்லிகளுடன் வகைப்படுத்தியிருந்தனர்.[7] பின்னர் ஆய்வின்போது இவற்றின் பல உடற்கூறுகள் ஊர்வனவற்றின் பொது மூதாதையருடையவை என்றும் வேறு ஊர்வனவற்றில் இல்லாதவை என்றும் அறிந்து தனியாக வகைப்படுத்தியுள்ளனர்.

தொன்மா (Dinosaur, டைனசோர் (கேட்க) என்பது ஏறத்தாழ 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியின் நிலத் தரையின் மீது முழு வல்லாண்மையுடன் வாழ்ந்து வந்த முதுகெலும்புள்ள விலங்கினங்களைக் குறிக்கும். இவை ஏறத்தாழ 65 மில்லியன் ஆண்டுகளுக்கும் முன் ஒரு பேரழிவு நிகழ்வு காரணமாக முற்றிலுமாய் அழிந்து போயின. இது ஊர்வன வகையைச் சேர்ந்தது ஆகும். தொன்மாக்கள் வாழத் தொடங்கிய காலத்திற்கு சற்று முன்னர்வரை நில உருண்டையில் ஒரேயொரு தொடர்ந்த நிலத்தரைப்பகுதிதான் பெரிய கண்டமாக இருந்ததென்றும், அதனை முற்றுமாய்ச் சூழ்ந்து ஒரேயொரு பெருங்கடல் மட்டும்தான் இருந்தென்றும் அறிஞர்கள் கருதுகின்றனர் (பார்க்க: ஒருநிலக் கொள்கை.) தொன்மாக்கள் வாழ்ந்த பொழுது தரைநிலப்பகுதிகள் கண்டங்களாக பிரிந்து நகரத் தொடங்கிய பொழுதும், இயற்கையாக அமைந்த நிலப்பாலங்கள் வழி தொன்மாக்கள் அன்றிருந்த தரைநிலம் முழுவதும் திரிந்தன.

உயிரியல் வகைப்பாடு

பச்சை கடல் ஆமை

கீழ்க்காணும் இனக்கிளை வரைபடம் ஊர்வனப்பிரிவின் கீழ் வரும் இனங்களின் மரபியல் தொடர்பைக் காட்டுகிறது. 1996-ல் அலாரினும் காத்தியரும் வெளியிட்ட உயிரியற் வகைப்பாட்டைப் பற்றி வரையப்பட்டது இது.[8]

சினைச்சவ்வுடையன (Amniota)

Synapsida

ஊர்வன (Reptilia)
unnamed
மண்டையோட்டுப் பக்கத்துளையிலிகள் Anapsida

Mesosauridae

unnamed

Millerettidae

unnamed

Lanthanosuchidae

unnamed

Nyctiphruretia

unnamed

Pareiasauria

Procolophonoidea

?ஆமை (turtles, tortoises, and terrapins)

Romeriida

Captorhinidae

unnamed

Protorothyrididae *

Diapsida

Araeoscelidia

unnamed

Younginiformes

Sauria

?Ichthyosauria

?Sauropterygia

Lepidosauromorpha (lizards, snakes, tuatara, and their extinct relatives)

Archosauromorpha (crocodiles, birds, and their extinct relatives)

ஊர்வன வகையைச் சார்ந்த ஒரு வகை உடும்பு

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஊர்வன&oldid=3928120" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்