உலூசியான்னி வால்கோவிச்

உலூசியான்னி வால்கோவிச் (Lucianne Walkowicz) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆடுலர் கோளரங்கத்தில் பணிபுரிகிறார். இவர் உடுக்கணக் காந்தச் செயல்பாடு ஆய்வுக்கும் தன் புறக்கோள் உயிரினங்களின் வாழ்தகவின்பாலான தாக்க ஆய்வுக்கும் பெயர்பெற்றவர்.[1] இவர் 2008 இல் இருந்து பேரியல் வானளக்கைத் தொலைநோக்கி, மாறும் விண்மீன் கூட்டிணைவுக்குத் தலைமை ஏற்றுவருகிறார் இவர் பேரியல் வானளக்கைத் தொலைநோக்கித் தரவு அறிவியல் ஆய்வுநல்கைத் திட்டத்தின் நிறுவன உறுப்பினரும் ஆவார்.[2][3][4] இவர் இருண்ட வான இயக்கப் பரப்புரைக்காக பன்னாட்டளவில் பெயர்பெற்றவர். இவர் 2011 ஆம் ஆண்டின் காவ்லி ஆய்வுறுப்பினராகவும் 2012 ஆம் ஆண்டின் TED முதுநிலை ஆய்வுறுப்பினராகவும் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தால் அறிவிக்கப்பட்டார்.[3][5]

உலூசியான்னி வால்கோவிச்
Lucianne Walkowicz
வாழிடம்சிகாகோ
குடியுரிமைஅமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி
பிரின்சுடன் பல்கலைக்கழகம்
ஆடுலர் கோளரங்கம்
கல்வி கற்ற இடங்கள்ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகம்
வாழ்சிங்டன் பல்கலைக்கழகம்
ஆய்வேடுM குறுமீன்களுக்கான தற்பொருத்தப் பொந்திகைப் படிம வளிமண்டலங்கள் (2008)
ஆய்வு நெறியாளர்சுசான்னி எல். காவ்லி
விருதுகள்
  • தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் காவ்லி ஆய்வுறுப்பினர் (2011)
  • TED முதுநிலை ஆய்வுறுப்பினர் (2012)

இவர் வெர்னர் கெர்சோகின் 2016 ஆம் ஆண்டு ஆவணமாகிய Lo and Behold இல் தோன்றியுள்ளார்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்