உலக சதுரங்க வாகை

சதுரங்கத்தில் அடைவு

உலக சதுரங்க வாகை (World Chess Championship) என்பது சதுரங்கத்தில் உலக வாகையாளரைத் தெரிவு செய்ய நிகழ்த்தப்படும் ஒரு தொடர் ஆகும். நடப்பு உலக வாகையாளர் சீனாவைச் சேர்ந்த திங் லிரேன் ஆவார். இவர் 2023 உலக சதுரங்க வாகைப் போட்டியில் இயான் நிப்போம்னிசியை வென்று வாகையாளர் ஆனார். முந்தைய வாகையாளர் மாக்னசு கார்ல்சன், தனது பட்டத்தைத் தக்கவைக்க மறுத்துவிட்டார்.

நடப்பு (2023) உலக வாகையாளர் திங் லிரேன் (சீனா)

உலக வாகைக்காக அங்கீகரிக்கப்பட்ட முதல் நிகழ்வு 1886 ஆம் ஆண்டில் உலகின் இரண்டு முன்னணி வீரர்களான வில்கெம் இசுட்டைனிட்சு, யொகான்னசு சூக்கர்டோர்ட் ஆகியோருக்கிடையேயான போட்டியாகும். இசுட்டைனிட்சு வெற்றி பெற்று முதல் உலக வாகையாளரானார்.[1] 1886 முதல் 1946 வரை, வாகையாளர் தேவையான விதிமுறைகளை அமைத்து, புதிய உலக வாகையாளராவதற்கு எந்தவொரு சவாலிலும் கணிசமான பங்களிப்புகளை உயர்த்தி, இறுதிப் போட்டியில் வாகையாளரைத் தோற்கடிக்க வேண்டும்.[2] 1946-இல் அன்றைய உலக வாகையாளரான அலெக்சாண்டர் அலேகின் இறந்ததைத் தொடர்ந்து, பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (பிடே) உலக வாகையாளருக்கான நிர்வாகத்தை எடுத்துக் கொண்டது. இது 1948 உலக வாகையாளர் போட்டியுடன் தொடங்கியது.[3] 1948 முதல் 1993 வரை, பிடே அமைப்பு ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒரு புதிய போட்டியாளரைத் தேர்வு செய்ய போட்டிகளின் தொகுப்பை ஏற்பாடு செய்தது. 1993-ஆம் ஆண்டில், நடப்பு சாம்பியனான காரி காஸ்பரொவ் பிடே-யில் இருந்து பிரிந்தார். உலக வாகைப் பட்டத்திற்குப் போட்டியாக காசுபரோவ் "தொழில்முறை சதுரங்க சங்கத்தை" (PCA) தொடங்கி அடுத்த 13 ஆண்டுகளுக்கு அச்சங்கத்தின் மூலமாக ஒரு "போட்டி வாகையாளர்" தெரிவானார். இறுதியில் 2006 ஆம் ஆண்டில் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு அடுத்தடுத்த போட்டிகள் பிடே-ஆல் நடத்தப்பட்டு வருகின்றன.

2014 முதல், வாகைப் போட்டிகள் இரண்டு ஆண்டு சுழற்சியில் நிலைபெற்றது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2020, 2022 போட்டிகள் முறையே 2021, 2023 க்கு ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டன.[4] அடுத்த போட்டி வழக்கமான அட்டவணைப்படி 2024 நவம்பரில் நடைபெறும்.

உலக வாகைப் போட்டிகளில் அனைத்து வீரர்களும் பங்குபற்றக் கூடியதாக இருந்தாலும், பெண்கள், 20 வயதுக்குட்பட்டவர்கள், குறைந்த வயதுக் குழுக்கள், மூத்தவர்கள் ஆகியோருக்குத் தனித்தனி வாகைப் போட்டிகள் உள்ளன. விரைவு, மின்னல், கணினி சதுரங்கம் ஆகியவற்றிலும் உலக சதுரங்க வாகைப் போட்டிகள் நடைபெறுகின்றன.

உலக வாகையாளர்கள்

பிடே-இற்கு முன்னர் (1886–1946)

#பெயர்நாடுஆண்டுகள்
1வில்கெம் இசுட்டைனிட்சு  ஆத்திரியா-அங்கேரி
 ஐக்கிய அமெரிக்கா
1886–1894
2இமானுவேல் லாசுக்கர் 1894–1921
3ஒசே ரவூல் கப்பபிளாங்கா  கியூபா1921–1927
4அலெக்சாந்தர் அலேகின் பிரான்சு1927–1935
5மாக்சு இயூவி  நெதர்லாந்து1935–1937
(4)அலெக்சாந்தர் அலேகின் பிரான்சு1937–1946

பிடே உலக வாகையாளர்கள் (1948–1993)

#பெயர்நாடுஆண்டுகள்
6மிகைல் பொத்வின்னிக்  சோவியத் ஒன்றியம்1948–1957
7வசீலி சிமிசுலோவ்1957–1958
(6)மிகைல் பொத்வின்னிக்1958–1960
8மிகைல் தால்1960–1961
(6)மிகைல் பொத்வின்னிக்1961–1963
9திக்ரான் பெத்ரசியான்1963–1969
10போரிசு சுபாசுகி1969–1972
11பாபி ஃபிஷர்  ஐக்கிய அமெரிக்கா1972–1975
12அனத்தோலி கார்ப்பொவ்  சோவியத் ஒன்றியம்1975–1985
13காரி காஸ்பரொவ்  சோவியத் ஒன்றியம்
 உருசியா
1985–1993

மரபு-சார் (PCA) உலக வாகையாளர்கள் (1993–2006)

#பெயர்நாடுஆண்டுகள்
13காரி காஸ்பரொவ்  உருசியா1993–2000
14விளாதிமிர் கிராம்னிக்2000–2006

பிடே உலக வாகையாளர்கள் (1993–2006)

#பெயர்நாடுஆண்டுகள்
அனத்தோலி கார்ப்பொவ்  உருசியா1993–1999
அலெக்சாந்தர் காலிஃப்மேன்1999–2000
விசுவநாதன் ஆனந்த்  இந்தியா2000–2002
உருசுலான் பனமரியோவ்  உக்ரைன்2002–2004
உருசுத்தாம் காசிம்சானொவ்  உஸ்பெகிஸ்தான்2004–2005
வெசிலின் தோப்பலோவ்  பல்கேரியா2005–2006

பிடே (இணைந்த) உலக வாகையாளர்கள் (2006–இன்று)

#பெயர்நாடுஆண்டுகள்
14விளாதிமிர் கிராம்னிக்  உருசியா2006–2007
15விசுவநாதன் ஆனந்த்  இந்தியா2007–2013
16மாக்னசு கார்ல்சன்  நோர்வே2013–2023
17திங் லிரேன்  சீனா2023–இன்று

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உலக_சதுரங்க_வாகை&oldid=3938770" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்