உபைதுகள் காலம்

உபைதுகளின் காலம் (Ubaid period) (கிமு 6500 - கிமு 3800)[1] பண்டைய அண்மை கிழக்கின், மெசொப்பொத்தேமியாவில் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் கிமு 6,500 முதல் கிமு 3,800 முடிய ஏறத்தாழ 3,000 ஆண்டுகள் வாழ்ந்த இனக்குழுவினர் ஆவார்.

உபைதுகள் காலம்
புவியியல் பகுதிமெசொப்பொத்தேமியா
காலப்பகுதிசெப்புக் காலம்
காலம்கிமு 6500 — கிமு 3800
வகை களம்உபைது தொல்லியல் மேடு
முக்கிய களங்கள்எரிது
முந்தியதுஹலாப் - உபைதுகளின் இடைநிலைக் காலம், அசுன்னா பண்பாடு, சமார்ரா பண்பாடு
பிந்தியதுஉரூக் பண்பாடு
உபைதுகள் காலம் is located in ஈராக்
போர்சிப்பா
போர்சிப்பா
காபாஜா
காபாஜா
கிர்சு
கிர்சு
பாத்-திபிரா
பாத்-திபிரா
லாகாஷ்
லாகாஷ்
தில்பத்
தில்பத்
மராத்
மராத்
லாரக்
லாரக்
அக்ஷாக்
அக்ஷாக்
குதா
குதா
தற்கால ஈராக் நாட்டின் உபைது காலத்திய முக்கிய நகரங்கள்
பிந்தைய உபைது காலத்திய ஜாடி

பெயர்க் காரணம்

ஹென்றி ஹால் மற்றும் லியோர்னோ வுல்லி போன்ற தொல்லியளாலர்கள், மெசொப்பொத்தேமியாவின் தெற்கில், தற்கால தெற்கு ஈராக்கில் யூப்பிரடீஸ் - டைகிரிஸ் ஆறுகள் பாயும் டெல் அல் - உபைது பகுதியில் நடந்த தொல்லியல் அகழ்வாய்வில் கிமு 6500 - 3500 காலத்தில் வாழ்ந்த பண்டைய உபைது மக்களின் தொல்பொருட்களைக் கண்டெடுத்தனர். எனவே இதற்கு உபைதுகளின் காலம் எனப்பெயராயிற்று.[2][3]

தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கிமு 3,500ல், உபைதுகளின் இடத்தை உரூக் மக்கள் ஆக்கிரமித்ததால் உபைதுகளின் காலம் முடிவுற்றது.[4]

ஹலாப் காலத்திற்குப் பின், பிந்தைய செப்புக் காலத்தில் உபைதுகளின் காலம் துவங்கியது. வடக்கு மெசொப்பொத்தேமியாவில் உபைதுகளின் காலம் கிமு 5,300 முதல் கிமு 4,300 வரை நீடித்தது.[4]

தொல்லியல் ஆய்வின் வரலாறு

உபைதுகளின் காலம் எனும் சொல், 1930ல் பாக்தாத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வாளர்களின் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் அம்மாநாட்டில் உரூக் காலம் வரையறுக்கப்பட்டது.[5]

உபைதுகளின் காலம், விரிவாக்கம் மற்றும் கால வரிசை

உபைதுகளின் காலத்தை நான்கு அடிப்படை ஆதாரங்களுடன் பிரித்தறியப்படுகிறது:

  • உபைது காலம் 1: (கிமு 6500–5400), பண்டைய உபைதுகளின் காலகட்டம், முதலில் டெல் எல்-கியுலி எனும் தொல்லியல் களத்தை அகழ்வாய்வு முடிவுகளின் படி ஏற்கப்பட்டது.[6] இக்காலத்தில் மெசெப்பத்தோமியாவின் தெற்கில் பாரசீக வளைகுடாவில் எரிது நகரம் (கிமு 5400–4700) வளர்ச்சியடைத் துவங்கியது. உபைதுகள் காலத்தில் தெற்கு மெசொப்பொத்தேமியாவில் வேளாண்மைத் தொழில் வளர்ச்சியடைத் துவங்கியது.[7]
  • உபைது காலம் 2:[6] (கிமு 4800–4500), யூப்பிரடீஸ் ஆற்றிலிருந்து வேளாண்மைக்கு நீர் பாசானத்திற்கு கால்வாய்கள், வாய்க்கால்கள் வெட்டப்பட்டது. மேலும் மக்கள் குடியிருப்புகள் பெருகத் துவங்கியது.[8]
  • உபைது காலம் 3 - 4 (கிமு 4500–4000) : இக்காலத்தில் மக்கள் ஹலாப் பண்பாட்டை பின்பற்றியதுடன், தெற்கு மெசொப்பொத்தேமியாவில் எரிது போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சியடையத் துவங்கியது.[9][10] உபைதுகளின் வணிகம், மத்தியதரைக் கடல் முதல் ஓமன் வரை செழித்தது.[11][12]

விளக்கம்

உபைதுகள் காலத்தில் கோட்டைச் சுவர்கள் அற்ற, பல அறைகள் கொண்ட, செவ்வக வடிவ களிமண் செங்கற்களாலான வீடுகளுடன் கூடிய பெரிய கிராமக் குடியிருப்புகள், இரண்டு அடுக்குக் கோயிலுடன் அமைந்திருந்தது. இதுவே மொசபத்தோமியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கோயில் ஆகும். 10 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்த இப்பெரிய குடியிருப்பைச் சுற்றிலும் 1 ஹெக்டேர் பரப்பளவுகளுடன் சிறிய கிராமங்கள் இருந்தன.

கிமு 5000–4000களில் உபைதுகள் நகர நாகரீகத்தை நோக்கிச் செல்லத் துவங்கினர். இவர்கள் வேளாண்மை செய்ததுடன், காட்டு விலங்குகளைப் பழக்கப்படுத்தி வீட்டு விலங்களாக மாற்றி, வேளாண்மைத் தொழிலுக்கு பயன்படுத்தினர்.[13] நிலத்தை நன்கு உழுவதற்கு கலப்பை, ஏர் போன்ற உழவுக் கருவிகளை கண்டறிந்தனர்.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உபைதுகள்_காலம்&oldid=3732268" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்