உண்மை

உண்மை () (Truth) என்னும் சொல் வாய்மை, நேர்மை[1] போன்ற பல பொருள்களில் அறியப்பட்டு, ஆளப்பட்டு வருகின்றது. மெய்யியலாளர்களும், பிற அறிஞர்களும் "உண்மை" என்பதன் வரைவிலக்கணம் சார்ந்து ஒத்த கருத்து உடையவர்கள் அல்லர். உண்மை தொடர்பான பல கோட்பாடுகள் இன்னும் சர்ச்சைக்கு உரியனவாகவே உள்ளன.

உண்மையைப் பொய்மை மற்றும் பொறாமையிலிருந்து காப்பாற்றும் நேரம். -பிரான்கோயிஸ் லெமோய்னெ (François Lemoyne) 1737
வாஷிங்டன், டி.சி.யில் (Washington, D.C.), தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson) கட்டிடத்தில் உள்ள, ஓலின் லெவி வார்னர் (Olin Levi Warner), காங்கிரஸ் நூலகத்தில் ஒரு கண்ணாடியுடன் ஒரு பாம்பை வைத்திருக்கும் உண்மை. (1896)

வாய்மை என்பது சொல் வழுவாமையைக் குறிக்கும். அதாவது உள்ளத்தில் உள்ளது மாறாமல் அதனை வாய் வழியாகப் பேசுவது வாய்மை எனப்படும். வாய்மையைப் பற்றி திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது

வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாத சொலல்.

கருத்து: வாய்மை எனப்படுவது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் இல்லாத சொற்களைச் சொல்வது ஆகும்.

வரையறையும் சொற்பிறப்பியலும்

உண்மை என்ற தமிழ் வார்த்தைக்குச் சமமான ஆங்கில வார்த்தை truth இது பண்டைய ஆங்கில மொழியில் tríewþ, tréowþ, trýwþ, என்றும், மத்திம கால ஆங்கில மொழியில் trewþe,என்றும் அழைக்கப்படுகிறது.

பிற மொழி இணைச்சொற்கள்:

பண்டைய உயர் ஜெர்மானிய மொழி: triuwida,

பண்டைய நோர்ஸ் மொழி: tryggð.

பண்டைய ஆங்கில மொழி: tréowe

பெரும்பான்மைக் கோட்பாடுகள்

ரோஸ்லின் (Roslin), மிட்லோதியான் (Midlothian) செதுக்கிய "உண்மை" எனும் பதாகையுடன் ஒரு தேவதை

வார்த்தைகள், குறியீடுகள், கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை ஒழுங்கான உண்மை எவ்வாறு கருதப்படலாம் என்று நிர்ணயிப்பது கடினமானது.

ஒரு நபர் அல்லது ஒரு முழு சமூகம் எவ்வாறு கோட்பாடுகளின் அடிப்படையில் "உண்மை" என்ற கருத்தைத் தீர்மானிக்க முடியும் என்பது ஒரு சிக்கலான செயல். "உண்மை" பற்றிய ஒவ்வொரு கண்ணோட்டமும் அறிஞர்களால் வெளியிடப்பட்டு அனைவராலும் பரவலாக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.[2][3][4]

உண்மை பற்றிய பெரும்பாலான கோட்பாடுகள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் சமீபத்தில் தோன்றிய உண்மை சார்ந்த "பணவிறக்கம்" அல்லது "தற்காலிகமாகக் குத அளவை ஏற்றுக்கொள்ள இணங்குபவர்" எனும் கோட்பாடுகள் பழைய நிலையான கோட்பாடுகளுக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளன. உண்மை என்ற கருத்தைப் பற்றி குறிப்பிடத்தக்க எதையும் உறுதியாகவோ அல்லது ஒரு அறிக்கையாகவோ கூற இயலாது என்று குறைந்தபட்ச காரண மையங்களை சார்ந்தவர்கள் கருதுகிறார்கள். இக்கோட்பாட்டினர், உண்மையின் இயல்பு பற்றி எதுவும் கூற இயலாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர்.

ஒப்பந்தத்தை வெளிப்படுத்தவும், கூற்றுக்கள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்திக் கூறவும், பொது ஊகங்கள் அமைக்கவும் உண்மை அவசியமாகிறது. அச்சமயங்களில் அது சொற்பொழிவுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொது முத்திரைத் தகவல் போன்று பயன்படுத்தப்படுவதாக குறைந்தபட்ச காரணக்காரர்கள் கருதுகிறார்கள்.[5][6]

உண்மை பற்றிய கோட்பாடுகளின் பட்டியல்

தன்னிலையான அல்லது தற்சார்பியலான கோட்பாடுகள் (Substantive theories)

  • தொடர்புக் கோட்பாடு (Correspondence theory)
  • ஒத்திணக்கமான கோட்பாடு (Coherence theory)
  • அகவிருத்திவாத கோட்பாடு (Constructivist theory)
  • கருத்தொற்றுமைக் கோட்பாடு (Consensus theory)
  • நடைமுறைக்கேற்ற கோட்பாடு (Pragmatic theory)

பணவிறக்கக் கோட்பாடு (Minimalist (deflationary) theories)

  • முன்கூட்டி உருவாகிற கோட்பாடு (Performative theory)

மிகைமை மற்றும் தொடர்புடைய கோட்பாடுகள் (Redundancy and related theories)

கூட்டு எண்ணக் கோட்பாடு (Pluralist theories)

மிக நம்பப்படுகிறது கோட்பாடுகள் (Most believed theories)

  • முறையான கோட்பாடுகள் (Formal theories)
  • தர்க்கம் உண்மை (Truth in logic)
  • கணிதத்தில் உண்மை (Truth in mathematics)
  • பொருள் கோட்பாடு (Semantic theory)
  • கிரிப்கெயும் கோட்பாடு (Kripke's theory)
  • மறுபார்வைக் கோட்பாடு (Revision theory)

தொடர்புக் கோட்பாடு

வால்டர் சீமோர் ஆல்வார்டு (Walter Seymour Allward) செதுக்கிய உண்மை எனும் பொருளுடைய 'வெரிட்டாஸ்' சிலை. இடம்: கனடா உச்ச நீதிமன்றம் ஒண்டாரியோ, ஒட்டாவா, கனடா

உண்மையான நம்பிக்கைகள், உண்மையான வாசகங்கள் ஆகியவை நடைமுறை விவகாரக் கையாளுகையுடன் தொடர்புடையவை என்று தொடர்புக் கோட்பாட்டுக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.[7]

  • இந்தக் கொள்கை ஒரு புறம் எண்ணங்களுக்கும் அறிக்கைகளுக்கும் இடையே உள்ள உறவை வலியுறுத்துகிறது.
  • மறு புறம் காட்சிப் பொருள்களுக்கும் எண்ணங்களுக்கும் இடையே உள்ள உறவை வலியுறுத்துகிறது.

இது சாக்ரடீஸ் (Socrates), பிளேட்டோ (Plato), அரிஸ்டாட்டில் (Aristotle) போன்ற கிரேக்க மெய்விளக்கவியல் ஆய்வாளர்களால் தொடங்கப்பட்ட ஒரு பாரம்பரிய மாதிரி ஆகும்.[8]

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தத்துவ அறிஞர் தாமஸ் அக்வினாஸின் (Thomas Aquinas) அறிக்கையானது, தொடர்புக் கோட்பாட்டு மாதிரிக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். "உண்மை என்பது பொருள்களுக்கும், அறிவுக்கும் இடையேயுள்ள ஒரு சமன்பாடு" அல்லது "உண்மை என்பது பொருள்களுக்கும், அறிவுக்கும் இடையேயுள்ள ஒரு போதுமான பொருத்தப்பாட்டு நிலைமை ஆகும்" என்று தாமஸ் அக்வினாஸ் தன்னுடய வெரிடாஸ் எஸ்ட் அடிகுவேஷியொ ரீ எட் இன்டெல்லெக்டஸ் (Veritas est adaequatio rei et intellectus) என்ற அறிக்கையில் கூறுகிறார். இது பிளேட்டோவின் அறிவுரையைப் பின்பற்றும், ஒன்பதாம் நூற்றாண்டின் ஐசக் இஸ்ரேலிக்கு (Isaac Israeli) அக்வினாஸால் வழங்கப்பட்டதாகும்.[9][10][11] அக்வினாஸ் இக்கோட்பாட்டை முன்னிலும் திட்பமாக, "ஒரு தீர்ப்பு வெளிப்புற யதார்த்தத்துடன் ஒத்துப்போகும்போது அது உண்மை என்று கூறப்படுகிறது" என்று மீண்டும் எடுத்துக்கூறுகிறார்.[12]

"புறநிலை தற்சார்பற்ற யதார்த்த உண்மை" என்பதை துல்லியமாக வெளிப்படுத்தும் ஒரு விஷயமே "உண்மை" என்று தொடர்புக் கோட்பாட்டு மையங்கள் வலியுறுத்துகின்றன. இவர்கள், உண்மையை, எண்ணங்கள், வார்த்தைகள், பிற சின்னங்கள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்திக் குறிக்கின்றனர்.[13] கூடுதல் காரணிகளைப் பகுப்பாய்வு செய்யாமல் இலட்சிய வரையறையை அடைய முடியாது என்று நவீன கோட்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.[14]

ஒத்திணக்கமான கோட்பாடு

ஒத்திணக்கமான தத்துவத்தின்படி உண்மை என்பது பொதுவாக ஒரு அமைப்பின் ஒட்டுமொத்த உட்கூறுகளுக்கு இடையே உள்ள பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. முழுமைப்படுத்தல் மற்றும் தொகுத்தல் ஆகியவற்றின் பின்புலத்தில் உள்ள கருத்துக்களை நுண்ணாய்வுடைய கண்ணோட்டத்தில் சீர்தூக்கிப் பார்த்து தீர்வு காண்பது ஒத்திணக்கமான  அமைப்பின் சிறப்புக் காரணியாகும்.[15]

ஒத்திணக்கமான தத்துவத்தின் சில மாறிகளில், தர்க்கம் மற்றும் கணிதக்கூறுகளை அடித்தளமாகக் கொண்டு அத்தியாவசியமானதும், உள்ளார்ந்ததுமான பண்புகளின் தாக்கம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளும்படி கோரப்பட்டுள்ளன.[16]

ஸ்பினோஸா (Spinoza), லீப்னிஸ் (Leibniz) ஜி.டபிள்யூ.எஃப். ஹெகல் (G.W.F. Hegel) பிரிட்டன் நாட்டு தத்துவ ஞானி எஃப்.ஹெச். பிராட்லி (F.H. Bradley) ஆகிய பகுத்தறிவுவாதிகளின் தத்துவ சிந்தனைகளிலிருந்து ஒத்திணக்கமான கோட்பாடுகள் முற்றிலும் வேறுபடுத்தி அறியக்கூடியதாக உள்ளன.[17]

அகவிருத்திவாத கோட்பாடு

தத்துவ ஞானி மார்க்ஸ் (Marx) புறநிலைத் தன்மை உடைய உண்மை இருப்பதை ஏற்கிறார். அவரது அகவிருத்திவாத கோட்பாடுகள்:

  • மற்றும் சக்தி அல்லது சித்தாந்தங்களால் சிதைக்கப்பட்ட அறிவுக்கும், இயல் அறிவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடுகள் உள்ளன.
  • இயல் அறிவையும், சிதைக்கப்பட்ட அறிவையும் பிரித்தறிந்து மேம்படுத்த முடியும்.
  • அறிவியல் மற்றும் உண்மை அறிவு என்பது, வரலாற்றின் தருக்கமுறைப்பட்ட, புலன்கடந்த மெய்ம்மை சார்ந்த விளக்கத்தின்பாற்பட்டது ஆகும்.
  • கொள்கைசார் அறிவு என்பது, உடல் உள்ளத் தத்துவ விளக்க வெளிப்பாட்டு முறைமை ஆகும்.
  • கருத்தியல் அறிவானது, குறிப்பிட்ட பொருளாதார ஏற்பாடுகளில் பொருள் வளங்களின் இருப்பு மற்றும் பயன்பாட்டு நிலை சார்ந்தது.[18]

கருத்தொற்றுமைக் கோட்பாடு

தத்துவவாதி ஜர்கன் ஹாபர்மாஸ் (Jürgen Habermas) கருத்தொற்றுமைக் கோட்பாட்டை ஆதரிக்கிறார். இவர் கூற்றுப்படி,

  • கருத்தொற்றுமைக் கோட்பாட்டின் அடிப்படையில் "உண்மை" என்பது, ஒரு பயனுள்ள கருத்து ஆகும்.[19]
  • உயர்ந்த சிந்தனையுடைய பேச்சுச் சூழ்நிலையில் எது ஒப்புக்கொள்ளக்கூடிய நிலையில் இருக்குமோ அதுவே உண்மை எனப்படும்.[20]

தற்போதைய கருத்தொற்றுமைக் கோட்பாட்டின் வலுவான விமர்சகர்களின் மத்தியில் தத்துவவாதி நிக்கோலஸ் ரெஸ்செர் (Nicholas Rescher) முக்கியமானவர்.[21]

இஸ்லாமிய பாரம்பரியத்தில், இந்த கொள்கை ஹதீஸ்கள் மூலம் நிரூபிக்கப்படுகிறது. ஹதீஸில் முகமது நபியின் வாக்கு: "என் சமூகத்தினர் ஒருபோதும் பிழைகளுக்கு உடன்படமாட்டார்கள்."[22]

நடைமுறைக்கேற்ற கோட்பாடு

20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சார்லஸ் சான்டர்ஸ் பியர்ஸ் (Charles Sanders Peirce), வில்லியம் ஜேம்ஸ் (William James), ஜான் டூயி (John Dewey), ஆகியோர், உண்மை பற்றிய செல்வாக்கான மூன்று நடைமுறைக்கேற்ற கோட்பாட்டு வடிவங்களை அறிமுகப்படுத்தினர். இந்த நடைமுறைக்கேற்ற கோட்பாட்டு வடிவங்களும், கூறுகளும், கண்ணோட்டங்களும் முற்றிலும் வேறுபட்டு இருந்தன. ஆனால் அவர்களின் கருத்துக்களில் பின்வரும் கூறுகள் ஒருமித்து இருந்தன: 1. உண்மை என்பது சரிபார்க்கப்பட்டது. 2. நடைமுறைப்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்ட ஒருவரது கருத்துக்கள் உண்மை எனப்படும்.[23]

ரிச்சர்ட் ஃபேய்ன்மேன் (Richard Feynman) நடைமுறைக்கேற்ற கோட்பாட்டை பின்வருமாறு சாட்டியுரைக்கிறார்: நாங்கள் நிச்சயமாக ஒருபோதும் சரியானவர்கள் அல்லர். நாங்கள் தவறானவர்கள் என்று எங்களால் உறுதிப்படுத்திகொள்ள முடியும்.[24]

மருத்துவம் மற்றும் மனநோய் சிகிச்சை

உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிடுமோ என்று மிகையச்சம் கொண்டவர்களும், ஏதிலாச் சோர்வுடையவர்களும், உடலில் பிணிக்கான எந்த அறிகுறியும் பெற்றிருக்கமாட்டார்கள். இருப்பினும் அவர்கள் தமக்குப் பிணி இருப்பதாகப் புகார் கூறுவார்கள். இந்நிலையில், அப்பிணியாளர், சுய ஏமாற்று வேலை செய்கின்றாரா? அல்லது தவறான நம்பிக்கையைப் பெற்றுள்ளாரா? என்பது போன்ற சர்ச்சை ஏற்படும்போது உண்மை பற்றிய ஆய்வுக் கருத்துரை அவசியமாகிறது.[25]

மதத்தில் உண்மை: முழுதுணரும் அறிவு

புத்த மதம் (Buddhism), கிறித்துவம் (Christianity), இஸ்லாமியம் (Islam), யூதம் (Judaism), ஆகிய மதங்களின், மதச் சூழலில், எல்லா பொருள்களையும் குறித்த சரியான அறிவைப் பெற்றிருக்கும் நிலை (முழுதுணரும் அறிவு) ஒரு தெய்வீகப் பண்பு இருப்பாகக் கருதப்படுகிறது.[26]

ஆபிரகாமிய மதப் பார்வையில், இறந்தவர்களின் வாழ்க்கை பற்றிய சரியான அறிவின் அடிப்படையில், கடவுள் மட்டுமே தெய்வீகத் தீர்ப்பு வழங்குவார்.[27][28]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=உண்மை&oldid=3235280" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்