இஷ்தர்

பண்டைய மெசபடோமிய பெண் கடவுள்

இன்னன்னா அல்லது இஷ்தர் (Inanna or Ishtar [a] மெசொப்பொத்தேமியாவின் பண்டைய சுமேரியப் பெண் கடவுள் ஆவார். உரூக் காலத்தில் இப்பெண் தெய்வத்தை இன்னன்னா என அழைத்தனர். பின்னர் புது பாபிலோனியப் பேரரசு காலத்தில் இப்பெண் கடவுளை இஷ்தர் என அழைத்தனர். அன்பு, காதல், அழகு, செழிப்பு, போர் மற்றும் வீரத்திற்கு இப்பெண் கடவுளே அதிபதி ஆவார். எஸ்தர் எனும் பெண் கடவுளுக்கு நிகராக இந்து சமயத்தில் துர்கையும், பண்டைய கிரேக்கத்தில் அப்ரோடிட்டும் குறிக்கப்படுகிறது.

இன்னன்னா (பின்னர்) இஷ்தர்
நிப்பூர் நகர அகழ்வாய்வுவின் போது கண்டெடுக்கப்பட்ட சுமேரியக் கடவுளான இன்னன்னா எனும் இஷ்தர் கடவுள், (கிமு 2500)
இடம்சொர்க்கம்
கிரகம்வெள்ளி
துணைதுமுசித் மற்றும் பலர்
பெற்றோர்கள்
சகோதரன்/சகோதரி
குழந்தைகள்இல்லை

சுமேரியர்கள் இன்னன்னா எனும் பெயரில் வணங்கிய எஸ்தர் எனும் இப்பெண் கடவுளை, சுமேரியர்களுக்குப் பின்னர் மெசொப்பொத்தேமியாவை ஆண்ட அக்காடியர்களும், பாபிலோனியர்களும், அசிரியர்களும், இஷ்தர் தெய்வத்திற்கு கோயில்கள் கட்டி வழிபட்டனர்.

இஸ்தர் எனும் பெண் கடவுள் சொர்க்கத்தின் அரசி என அழைக்கப்பட்டார். பண்டைய உரூக் நகரத்தில் எஸ்தர் வழிபாடு சிறப்புடன் விளங்கியது. எஸ்தர் கடவுள், வெள்ளி கோளுடன் தொடர்புறுத்தப்படுகிறார்.[4][5]

இஸ்தர் கடவுளின் சின்னங்களாக சிங்கம், எட்டு முனை நட்சத்திரம், சிங்கம் அறியப்படுகிறது. பெண் கடவுளான உஸ்தரின் கணவராக தம்முசும், மெய்காவலராக சுக்கலும் அறியப்படுகிறார்கள். மேலும் இஸ்தர் பெண் கடவுள் சொர்க்கத்தின் அரசி என்றும் நள்ளிரவின் இராணி என்றும் அறியப்படுகிறார்.

கிமு 4000 முதல் கிமு 3100 முடிய உரூக் காலத்தில் சுமேரியாவின் உரூக் நகரத்தில் இஷ்தர் தெய்வத்தை இன்னன்னா எனும் பெயரில் வணங்கினர். பின்னர் சுமேரியர்களை வென்ற அக்காடியப் பேரரசர் சர்கோன் ஆட்சிக் காலத்திலிருந்து, இன்னன்னா எனும் இப்பெண் கடவுளை இஸ்தர் எனும் பெயரில் பல கோயில்கள் மெசொப்பொத்தேமியா முழுவதும் எழுப்பபட்டது. மெசொப்பொத்தேமியா மக்கள் நீண்ட நேர உடல் உறவை வேண்டி இஸ்தர் கடவுளை பண்டைய அண்மைக் கிழக்கு நகரங்களில் சிறப்பாக வழிப்பட்டனர்.[6][7]

புதிய சமயங்களான கிறித்துவம் மற்றும் இசுலாம் வருகையால், சிறப்புடன் விளங்கிய இஸ்தர் வழிபாடு, கிபி மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை சிறிது சிறிதாக வீழ்ச்சியடைந்து, கிபி எட்டாம் நூற்றாண்டில் மெசொப்பொத்தேமியா முழுவதும் மறைந்து போயிற்று. இருப்பினும் கிபி 18-ஆம் நூற்றாண்டு வரை வடக்கு மெசொப்பொத்தேமியாவின் சில பகுதிகளில் இஸ்தர் வழிபாடு வழக்கில் இருந்தது.[8][9][10]

அருகில் சிங்கங்கள், ஆந்தைகள் மற்றும் சிறகுகுகளுடன் கூடிய இஷ்தர் கடவுளின் சிற்பம், பாபிலோன்

இஷ்தர் கடவுள் சிற்பங்களின் விளக்கம்

சின்னங்கள்

இஷ்தரின் நட்சத்திரம், சந்திரன் மற்றும் சூரியன்
பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர், கிமு 575ல் பாபிலோன் நகரத்தில் கட்டிய இஷ்தர் கோயிலுக்கு நுழைவாயில் எழுப்பினார். இந்நுழைவாயிலின் முன் சிங்கச் சிற்பம் நிறுவப்பட்டுள்ளது.[11]

பாபிலோனியச் சிற்பங்களில், இஸ்தர் கடவுளின் இருபுறமும் சிறகுகள், கையில் வில்லும், முதுகில் அம்புக்களும், ஆந்தைகள் சிங்கங்கள் மற்றும் எண்கோண நட்சத்திரத்துடன் காணப்படுகிறார்.

இஷ்தரின் கடவுளின் சிறப்புகள்

துர்கை போன்று காணப்படும், பெண் கடவுள் எஸ்தரின் உருவம் பொறிக்கப்பட்ட பண்டைய அக்காடிய உருளை வடிவ முத்திரை, (ஆண்டு கிமு 2334-2154)}

சுமேரியர்கள் இன்னான்னா எனும் இஷ்தர் பெண் கடவுளைத் போர்த் திறன் மற்றும் பாலியல் உணர்ச்சி மற்றும், மகப்பேறுக்காகவும் வழிபட்டனர். எஸ்தர் கடவுள் இளமையாகவும், உக்கிரமாகவும், சக்தி மிக்களாகவும் சித்தரிக்கப்பட்டார். இவர் சொர்க்கத்தின் அரசியாகவும், நள்ளிரவின் இராணியாக போற்றப்பட்டார். [13][14] இக்கடவுள், வெள்ளி கோளுடன் தொடர்புறுத்தப்படுகிறார்.

குடும்பம்

இன்னான்னா (இஸ்தர்) - துமுசித் திருமணம்

இன்னன்னா எனும் பெண் தெய்வமான இஷ்தரின் கணவராக துமுசித் என்ற ஆண் தெய்வமும், உது-சமாஷ் எனும் இரட்டைக் குழந்தைகளும், ஏரிஷ்கிகல் எனும் மூத்த சகோதிரியும், தேசு எனும் சகோதரனும் உள்ளனர். இவரின் இரட்டைக் குழந்தைகளில் ஒன்றான உது, நீதி மற்றும் சூரியக் கடவுளாகும். [15][16][17] எஸ்தரின் மெய்காவலராக சுக்கலும் அறியப்படுகிறார்.

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

மேலும் படிக்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இஷ்தர்&oldid=3851127" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்