இலைசோசோம்

விலங்கு உயிரணுக்களின் நுண்ணுறுப்புகளுள் ஒன்றான இலைசோசோம்கள் (lysosome) கழிவுப் பொருட்ளையும் தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளையும் செரிக்கும் இன்றியமையாத வேலையைச் செய்கின்றன. தாவரங்களிலும் பூஞ்சைகளிலும் இலைசோசோம்கள் இல்லை. இப்பணியை வெற்றிடப்பைகள் செய்கின்றன. இலைசோசோம் ஒரே ஒரு உறை மட்டுமே உடையது. இவ் உறைக்குள் பல வலிமையான நொதிகள் காணப்படும். இவை இந்த உறையை விட்டு வெளியே கசியுமாயின் அது செல்லையே அழித்து விடும். ஆகவே பாக்டீரியா போன்ற நோய்க்கிருமிகள் செல்லினுள் விழுங்கப்படும் போது தின்குழியங்கள் எனப்படும் அமைப்பினுள் அவை இருக்கும். அந்த தின்குழியங்களுடன் இலைசோசோம் சென்று இணைந்து இவ்விரண்டின் உறைகளும் இணையும். லைசோசோமில் உள்ள நொதிகள் நோய்க்கிருமியைச் செரிக்கும்.

லைசோசோமினுள் pH 4.5 ஆகும். குழியவுரு pH 7 ஆக இருக்கும். இந்த அமிலத்தன்மை செரிமானத்திற்கு உதவுகிறது.

நொதிகள்

கொழுப்பைச் செரிக்கும் லைபேசு (lipase)

காபோவைதரேட்டை (carbohydrate) செரிக்கும் நொதிகள்

புரதத்தைச் செரிக்கும் புரோட்டியேசு (protease)

உட்கரு அமிலங்களைச் செரிக்கும் நூக்ளியேசு (nuclease)

லைசோசைம் (lysozyme)


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இலைசோசோம்&oldid=2744532" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்