இலித்தியம் தாண்டலேட்டு

வேதிச் சேர்மம்

இலித்தியம் தாண்டலேட்டு (Lithium tantalate) என்பது LiTaO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் காணப்படும் இந்த உப்பு எதிரிணைக் காந்தப்பண்பு கொண்டதாகவும் நீரில் கரையாத பண்பையும் கொண்டுள்ளது. இலித்தியம் தாண்டலேட்டு பெரோவ்சிகைட்டு கட்டமைப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. ஒளியியல் பண்புகளை கொண்டுள்ள இலித்தியம் தாண்டலேட்டு அழுத்தமின் விளைவு மற்றும் வெப்பமின் விளைவு பண்புகளையும் கொண்டிருப்பதால், நேரியல் அல்லாத ஒளியியல், செயலற்ற அகச்சிவப்பு உணரிகள் போன்ற இயக்கக் காணிகள், டெட்ரா எர்ட்சு மின்காந்த அலைகள் உருவாக்கம் மற்றும் கண்டறிதல், மேற்பரப்பு ஒலி அலை பயன்பாடுகள், கைபேசிகள் ஆகியவற்றிற்கு இச்சேர்மம் மதிப்புமிக்கதாக அமைகிறது. மேலும் இந்த சேர்மம் பற்றி வணிக ஆதாரங்களில் இருந்து கணிசமான தகவல்கள் கிடைக்கின்றன.

இலித்தியம் தாண்டலேட்டு
Lithium tantalate

__ Li+     __ Ta5+     __ O2−
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் தாண்டலேட்டு
வேறு பெயர்கள்
இலித்தியம் மெட்டாதாண்டலேட்டு
இனங்காட்டிகள்
12031-66-2 Y
பப்கெம்159405
வே.ந.வி.ப எண்WW55470000
பண்புகள்
LiTaO3
வாய்ப்பாட்டு எடை235.887 கி/மோல்
அடர்த்தி7.46 கி/செ.மீ3, திண்மம்
உருகுநிலை 1,650 °C (3,000 °F; 1,920 K)
நீரில் கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்புஇடக்குழு R3c
Lattice constanta = 515.43 பைக்கோமீட்டர், c = 1378.35 பைக்கோமீட்டர்[1]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள்கடுமையான நச்சு: வாய்வழி, தோல், உள்ளிழுப்பு
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்http://www.samaterials.com/pdf/Lithium-Tantalate-Wafers-(LiTaO3-Wafers)-sds.pdf
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள்இலித்தியம் நையோபேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்

இலித்தியம் தாண்டலேட்டு சேர்மம் அகச்சிவப்பு நிறமாலை ஒளிமானிகளில் ஒரு நிலையான கண்டறிதல் உறுப்பு ஆகும்.[2]ஓர் இலித்தியம் தாண்டலேட்டு படிகத்தைப் பயன்படுத்தி வெப்பமின் விளைவு உருகுதல் பிணைவு நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிர வெப்பம் அல்லது அழுத்தம் இல்லாமல் அணுக்கரு இணைவு மூலம் ஈலியம்-3 மற்றும் நியூட்ரான்களின் ஒரு சிறிய இளக்கி உற்பத்தியின் விளைவாக இது டியூட்டீரியம் அணுக்கருக்களின் கற்றைகளை உருவாக்கி முடுக்கிவிடுவதற்கு போதுமான அளவு மின்னூட்டத்தை உருவாக்குகிறது.[3]

வெப்பமின் விளைவு கொண்ட LiTaO3 படிகங்களின் நேர்மின் மற்றும் எதிர்மின் சுமைகளுக்கு இடையே நீர் உறையும் போது வேறுபாடு காணப்பட்டது.[4]

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்