இலங்கை மாகாண சபைத் தேர்தல்கள், 2013

2013 மாகாணசபைத் தேர்தல்கள் (2013 Provincial Council elections) இலங்கையின் வடக்கு, மத்திய, மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாண சபைகளுக்கு 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்றன.[1] இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் இரண்டு மாகாண சபைகள் 2012 சூலை மாதத்தில் கலைக்கப்பட்டன. வடக்கு மாகாண சபைக்கு இம்முறையே முதற் தடவையாகத் தேர்தல் இடம்பெற்றது.[2]

இலங்கையின் 7வது மாகாண சபைத் தேர்தல்

← 2012செப்டம்பர் 21, 20132014 →

3 மாகாணசபைகளுக்கு 148 உறுப்பினர்கள்
வாக்களித்தோர்65.85%
 First partySecond partyThird party
 
தலைவர்மகிந்த ராசபக்சரணில் விக்கிரமசிங்கஇரா. சம்பந்தன்
கட்சிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிஐக்கிய தேசியக் கட்சிஇலங்கை தமிழரசுக் கட்சி
கூட்டணிதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மொத்த வாக்குகள்1,504,273590,888353,595
விழுக்காடு55.66%21.86%13.08%
உறுப்பினர்கள்772830
சபைகள்201

மாகாண வாரியாக வெற்றியாளர்கள். ஐமசுகூ: நீலம், ததேகூ: மஞ்சள், ஐதேக: பச்சை.

3 மாகாணசபைகளுக்கும் 148 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் வடக்கிலிருந்து 38 உறுப்பினர்களும், மத்திய மாகாணத்திலிருந்து 58 பேரும், வடமேல் மாகாணத்திலிருந்து 52 பேரும் தெரிவாகினர். வட மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது.[3] மத்திய,[4] வடமேல்[5] மாகாண சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கைப்பற்றியது.

பின்புலம்

ஈழப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தம் 1987 அக்டோபர் 29 இல் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் இலங்கை அரசு அதன் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாகும்.[6] இதன்படி 1987 நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[7][8] 1988 பெப்ரவரி 3 ஆம் நாள் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன[9]. வடமேல் மாகாண சபைக்கு முதலாவது தேர்தல் 1988 ஏப்ரல் 28 இல் இடம்பெற்றது.[10] 1988 சூன் 2 இல் மத்திய மாகாணத் தேர்தல் இடம்பெற்றது. இரண்டிலும் இலங்கையின் ஆளும் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஆட்சியைக் கைப்பற்றியது.

இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனாலும், இந்த பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்க இலங்கை அரசுத்தலைவருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.[6] 1988 செப்டம்பர் 2 இல் அரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா இரு மாகாணங்களையும் இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரு மாகாணசபையாக நிருவகிக்க உத்தரவு பிறப்பித்தார்.[9] இந்த இணைந்த மாகாணசபைக்கான தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தினார்.[11] இதனை அடுத்து அரசுத்தலைவர் பிரேமதாசா மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதுமே இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.[12] இலங்கையின் சிங்களத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவர்களின் நீண்ட கால எதிர்ப்பினை அடுத்து, 2006 சூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[9] இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[9] இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபைக்கு 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. வட மாகாண சபை தேர்தல்கள் இடம்பெறவில்லை.

வேட்பு மனுக்கள்

மாகாணசபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 2013 சூலை 25 முதல் ஆகத்து 1 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன.[13] 210 வேட்புமனுக்கள் (பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் இருந்து 131 மனுக்களும், சுயேட்சைக் குழுக்களிடம் இருந்து 79 மனுக்களும்) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 201 மனுக்கள் (அரசியல் கட்சிகளின் 126 உம், சுயேட்சைக் குழுக்களின் 75 உம்) ஏற்றுக் கொள்ளப்பட்டன.[14] ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன அனைத்துப் 10 மாவட்டங்களிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடுகின்றன. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு ஏழு மாவட்டங்களில் தனித்தும் ஏனையவற்றில் ஐமசுகூ இல் இணைந்தும் போட்டியிடுகிறது.[15][16]

3 மாகாணசபைகளுக்கும் 148 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் படி வடக்கில் 7,14,488 பேரும், வடமேல் மாகாணத்தில் 17,54,218 பேரும், மத்திய மாகாணத்தில் 18,89,557 பேரும் தகுதி பெற்றனர். யாழ் மாவட்டத்தில் 426,703 பேரும், கிளிநொச்சியில் 68,589 பேரும், மன்னாரில் 72,420 பேரும், வவுனியாவில் 94,367 பேரும், முல்லைத்தீவில் 52,409 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.

முடிவுகள்

வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் 2013.
இலங்கையின் ஒன்பது மாகாணங்கள்

தேர்தல்கள் நடைபெற்ற மூன்று மாகாணசபைகளில் இரண்டை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும், ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கைப்பற்றின.

3 சபைகளுக்குமான கூட்டு முடிவுகள்

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்சபைகள்
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி1,504,27355.66%772
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு[22]353,59513.08%301
 ஐக்கிய தேசியக் கட்சி590,88821.86%280
சனநாயகக் கட்சி91,5233.39%50
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு[21]52,4091.94%40
 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்[17]29,2851.08%20
 மக்கள் விடுதலை முன்னணி33,7991.25%10
 மலையக மக்கள் முன்னணி24,9130.92%10
 சுயேட்சைக் குழுக்கள்7,4500.28%00
ஜன செத்த பெரமுன2,7830.10%00
இலங்கை மக்கள் கட்சி1,8420.07%00
நமது தேசிய முன்னணி1,4950.06%00
 ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்1,3960.05%00
ஐக்கிய இலங்கைப் பாரிய பேரவை1,0230.04%00
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி9120.03%00
 சனநாயக ஐக்கியக் கூட்டமைப்பு8260.03%00
தேசியத்துக்கான ஐக்கிய அமைப்பு7620.03%00
சோசலிசக் கூட்டணி7260.03%00
ஐக்கிய சோசலிசக் கட்சி7110.03%00
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி5540.02%00
புதிய ஜனநாயக முன்னணி5040.02%00
ருகுண மக்கள் கட்சி3000.01%00
இலங்கை தொழிற் கட்சி2530.01%00
புதிய சிங்கள மரபு1540.01%00
சோசலிச சமத்துவக் கட்சி1010.00%00
முசுலிம் விடுதலை முன்னணி920.00%00
செல்லுபடியான வாக்குகள்2,702,569100.00%1483
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்170,615
மொத்த வாக்குகள்2,873,184
பதிவு செய்த வாக்காளர்கள்4,363,252
வாக்காளர் வீதம்65.85%

வட மாகாண சபை

2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள்:[23]

கூட்டணிகளும்
கட்சிகளும்
யாழ்ப்பாணம்கிளிநொச்சிமன்னார்முல்லைத்தீவுவவுனியாகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு213,90784.37%1437,07981.57%333,11862.22%328,26678.56%441,22566.10%42353,59578.48%30
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி35,99514.20%27,89717.37%115,10428.38%17,20920.04%116,63326.67%2082,83818.38%7
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு4,5718.59%11990.55%01,9913.19%006,7611.50%1
 ஐக்கிய தேசியக் கட்சி8550.34%0540.12%01870.35%01970.55%01,7692.84%003,0620.68%0
 சுயேட்சைக் குழுக்கள்1,4450.57%0290.06%0490.09%0540.15%03270.52%001,9040.42%0
 சனநாயக ஐக்கிய கூட்டமைப்பு5250.21%0610.13%0700.13%01700.27%008260.18%0
 ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்3000.66%003000.07%0
இலங்கை மக்கள் கட்சி2920.12%002920.06%0
 மக்கள் விடுதலை முன்னணி560.02%0180.04%0110.02%0300.08%01730.28%002880.06%0
ஐக்கிய சோசலிசக் கட்சி1650.07%0230.04%001880.04%0
சனநாயகக் கட்சி1110.04%050.01%0110.02%020.01%0410.07%001700.04%0
சோசலிச சமத்துவக் கட்சி1010.04%001010.02%0
ஜன செத்த பெரமுன740.03%020.00%070.01%050.01%020.00%00900.02%0
நமது தேசிய முன்னணி870.16%00870.02%0
இலங்கை தொழிற் கட்சி160.01%040.01%070.01%020.01%030.00%00320.01%0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை60.01%010.00%060.02%020.00%00150.00%0
தேசிய ஐக்கிய அமைப்பு40.01%0100.03%00140.00%0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி20.01%060.01%0080.00%0
முசுலிம் விடுதலை முன்னணி30.01%0030.00%0
செல்லுபடியான வாக்குகள்253,542100.00%1645,459100.00%453,226100.00%535,982100.00%562,365100.00%62450,574100.00%38
நிராகரிக்கப்பட்டவை20,2794,7352,9892,8204,41635,239
மொத்த வாக்குகள்273,82150,19456,21538,80266,781485,813
பதிவு செய்த வாக்காளர்கள்426,81368,60075,73753,68394,644719,477
வாக்காளர் வீதம்64.15%73.17%74.22%72.28%70.56%67.52%

வடமேற்கு மாகாண சபை

2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 6வது வடமேல் மாகாணசபைக்கான தேர்தல் முடிவுகள்::[24]

கூட்டணிகளும் கட்சிகளும்குருநாகல்புத்தளம்கூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி540,51369.05%23164,67559.10%92705,18866.43%34
 ஐக்கிய தேசியக் கட்சி169,66821.67%787,34331.34%50257,01124.21%12
சனநாயகக் கட்சி36,0964.61%210,0183.60%1046,1144.34%3
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு17,1302.19%110,7303.85%1027,8602.62%2
 மக்கள் விடுதலை முன்னணி16,3112.08%13,3131.19%0019,6241.85%1
ஜன செத்த பெரமுன6270.08%01,1120.40%001,7390.16%0
 சுயேட்சைக் குழுக்கள்8500.11%04480.16%001,2980.12%0
தேசிய ஐக்கிய அமைப்பு2320.03%05160.19%007480.07%0
நமது தேசிய முன்னணி5410.07%02020.07%007430.07%0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி2770.04%0980.04%003750.04%0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை1920.02%01600.06%003520.03%0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி2910.04%002910.03%0
இலங்கை தொழிற் கட்சி510.01%0230.01%00740.01%0
ருகுண மக்கள் கட்சி530.01%0170.01%00700.01%0
செல்லுபடியான வாக்குகள்782,832100.00%34278,655100.00%1621,061,487100.00%52
நிராகரிக்கப்பட்டவை36,56216,65353,215
மொத்த வாக்குகள்819,394295,3081,114,702
பதிவு செய்த வாக்காளர்கள்1,227,810526,4081,754,218
வாக்காளித்தோர் வீதம்66.74%56.10%63.54%

மத்திய மாகாண சபை

2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற 6வது மத்திய மாகாணசபைக்கான தேர்தல் முடிவுகள்::[25]

Alliances and partiesகண்டிமாத்தளைநுவரெலியாகூடுதல்
இடங்கள்
மொத்தம்
வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்வாக்குகள்%இடங்கள்
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி355,81255.76%16135,12859.99%7225,30768.87%112716,24760.16%36
 ஐக்கிய தேசியக் கட்சி200,18731.37%963,36528.13%367,26320.56%40330,81527.79%16
சனநாயகக் கட்சி37,4315.87%24,4231.96%03,3851.03%0045,2393.80%2
 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்18,7872.94%110,4984.66%1029,2852.46%2
 மலையக மக்கள் முன்னணி1,4580.23%023,4557.17%1024,9132.09%1
 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு11,1371.75%16,6512.95%0017,7881.49%1
 மக்கள் விடுதலை முன்னணி7,6401.20%03,9371.75%02,3100.71%0013,8871.17%0
 சுயேட்சைக் குழுக்கள்9960.16%05780.26%02,6740.82%004,2480.36%0
இலங்கை மக்கள் கட்சி1,5500.24%001,5500.13%0
 ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்1,0960.34%001,0960.09%0
ஜன செத்த பெரமுன7560.12%01610.07%0370.01%009540.08%0
சோசலிசக் கூட்டணி7260.22%007260.06%0
நமது தேசிய முன்னணி4660.07%01990.09%006650.06%0
ஐக்கிய இலங்கை பாரிய பேரவை5440.09%0490.02%0630.02%006560.06%0
தேசப்பற்றுள்ள தேசிய முன்னணி3420.05%0660.03%01290.04%005370.05%0
ஐக்கிய சோசலிசக் கட்சி5230.16%005230.04%0
புதிய ஜனநாயக முன்னணி5040.08%005040.04%0
ஐக்கிய இலங்கை மக்கள் கட்சி1170.05%01380.04%002550.02%0
ருகுண மக்கல் கட்சி1670.03%0470.02%0160.00%002300.02%0
புதிய சிங்கள மரபு1540.02%001540.01%0
இலங்கை தொழிற் கட்சி770.01%0490.02%0210.01%001470.01%0
முசுலிம் விடுதலை முன்னணி890.01%00890.01%0
செல்லுபடியான வாக்குகள்638,097100.00%29225,268100.00%11327,143100.00%1621,190,508100.00%58
நிராகரிக்கப்பட்டவை39,14815,33627,67782,161
மொத்த வாக்குகள்677,245240,604354,8201,272,669
பதிவு செய்த வாக்காளர்கள்1,015,315366,549507,6931,889,557
வாக்களிப்பு வீதம்66.70%65.64%69.89%67.35%

மேற்கோள்கள்


🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்