இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010


2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் ஆறாவது அரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க இடம்பெற்ற தேர்தல் ஆகும். இலங்கையின் தற்போதைய அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் முதலாவது ஆட்சிக் காலம் 2011 இல் நிறைவடைவதற்கு முன்னதாகவே புதிய தேர்தலுக்கான அறிவிப்பு 2009 நவம்பர் 23 ம் நாள் அறிவிக்கப்பட்டது[1]. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் டிசம்பர் 17, 2009 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டன, தேர்தல்கள் 2010, சனவரி 26 இல் இடம்பெற்றது[2].

இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010

← 2005சனவரி 26, 2010 (2010-01-26)2015 →
 
வேட்பாளர்மகிந்த ராஜபக்சசரத் பொன்சேகா
கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சிபுதிய ஜனநாயக முன்னணி
கூட்டணிஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி
சொந்த மாநிலம்தென் மாகாணம்தென் மாகாணம்
வென்ற மாநிலங்கள்166
மொத்த வாக்குகள்6,015,9344,173,185
விழுக்காடு57.88%40.15%

அரசுத் தேர்தல் முடிவுகளைக் காட்டும் வரைபடம். நீலம் - ராஜபக்ச வென்ற மாவட்டங்கள், பச்சை - பொன்சேகா வென்ற மாவட்டங்கள்.

முந்தைய அரசுத் தலைவர்

மகிந்த ராஜபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

அரசுத் தலைவர் -தெரிவு

மகிந்த ராஜபக்ச
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி

2005 அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். இவருக்கு எதிராக முன்னாள் இலங்கை இராணுவத் தலைவர், ஜெனரல் சரத் பொன்சேகா முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி உட்படப் பல எதிர்க்கட்சிகள் இவருக்கு ஆதரவு தெரிவித்தன.

57.88 விழுக்காடுகள் வாக்குகளைப் பெற்று அதிபர் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார்[3][4]. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் 16 மாவட்டங்களில் ராஜபக்ச முன்னணி பெற்றார். பொன்சேகா 40% வாக்குகளைப் பெற்றார். இவர் முன்னணி பெற்ற மாவட்டங்கள் அனைத்தும் தமிழர்கள், மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்கள் ஆகும். ஏனைய 20 போட்டியாளர்களும் 2.0% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றனர்.

வேட்பாளர்கள்

முடிவுகள்

மாவட்ட முடிவுகள்

மாவட்ட ரீதியாக அதிகாரபூர்வமான முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன[5].

ராஜபக்ச வெற்றி பெற்ற மாவட்டங்கள்
பொன்சேகா வெற்றி பெற்ற மாவட்டங்கள்
மாவட்டம்மாகாணம்ராஜபக்ச%பொன்சேகா%ஏனையோர்%வாக்களித்தோர்
கொழும்புமேற்கு614,74052.93%533,02245.90%13,6201.17%77.06%
கம்பஹாமேற்கு718,71661.66%434,50637.28%12,4261.07%79.66%
களுத்துறைமேற்கு412,56263.06%231,80735.43%9,8801.51%81.01%
கண்டிமத்திய406,63654.16%329,49243.89%14,6581.95%78.26%
மாத்தளைமத்திய157,95359.74%100,51338.01%5,9532.25%77.94%
நுவரேலியாமத்திய151,60443.77%180,60452.14%14,1744.09%77.19%
காலிதெற்கு386,97163.69%211,63334.83%9,0171.48%80.25%
மாத்தறைதெற்கு296,15565.53%148,51032.86%7,2641.61%78.60%
அம்பாந்தோட்டைதெற்கு226,88767.21%105,33631.20%5,3411.58%80.67%
யாழ்ப்பாணம்வடக்கு44,15424.75%113,87763.84%20,33811.40%25.66%
வன்னிவடக்கு28,74027.31%70,36766.86%6,1455.84%40.33%
மட்டக்களப்புகிழக்கு55,66326.27%146,05768.93%10,1714.80%64.83%
அம்பாறைகிழக்கு146,91247.92%153,10549.94%10,1714.80%73.54%
திருகோணமலைகிழக்கு69,75243.04%87,66154.09%4,6592.87%68.22%
குருநாகல்வட மேற்கு582,78463.08%327,59435.46%13,5151.46%78.62%
புத்தளம்வட மேற்கு201,98158.70%136,23339.59%5,8991.71%70.02%
அனுராதபுரம்வட மத்திய298,44866.32%143,76131.94%7,8291.74%78.35%
பொலனறுவைவட மத்திய144,88964.92%75,02633.62%3,2601.46%80.13%
பதுளைஊவா237,57953.23%198,83544.55%9,8802.21%78.70%
மொனராகலைஊவா158,43569.01%66,80329.10%4,3461.89%77.12%
இரத்தினபுரிசபரகமுவா377,73463.76%203,56634.36%11,1261.88%81.24%
கேகாலைசபரகமுவா296,63961.80%174,87736.44%8,4481.76%78.76%

தேசிய மட்ட முடிவுகள்

[உரை] – [தொகு]
26 சனவரி 2010 இலங்கை அரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள்
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
மகிந்த ராஜபக்சஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி6,015,93457.88%
சரத் பொன்சேகாபுதிய ஜனநாயக முன்னணி4,173,18540.15%
முகமது காசிம் முகமது இஸ்மைல்ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி39,2260.38%
அச்சல அசோக சுரவீரஜாதிக சங்கவர்தன பெரமுன26,2660.25%
சன்ன ஜானக சுகத்சிரி கமகேஐக்கிய ஜனநாயக முன்னணி23,2900.22%
மகிமன் ரஞ்சித்சுயேட்சை18,7470.18%
ஏ.எஸ்.பி.லியனகேசிறீ லங்கா தொழிற் கட்சி14,2200.14%
சரத் மனமேந்திராநவ சிகல உருமய9,6840.09%
எம். கே. சிவாஜிலிங்கம்சுயேட்சை9,6620.09%
உக்குபண்டா விஜேக்கூன்சுயேட்சை9,3810.09%
லால் பெரேராஎமது தேசிய முன்னணி9,3530.09%
சிரிதுங்க ஜெயசூரியஐக்கிய சோசலிசக் கட்சி8,3520.08%
விக்கிரபாகு கருணாரத்தினஇடது முன்னணி7,0550.07%
இதுரூஸ் முகமது இலியாஸ்சுயேட்சை6,1310.06%
விஜே தாஸ்சோசலிச ஈக்குவாலிட்டி கட்சி4,1950.04%
சனத் பின்னாதுவதேசியக் கூட்டமைப்பு3,5230.03%
முகமது முஸ்தபாசுயேட்சை3,1340.03%
பத்தரமுல்ல சீலாரதன தேரோஜன சேதா பெரமுன2,7700.03%
சேனரத்ன டி சில்வாPatriotic National Front2,6200.03%
அருணா டி சொய்சாருகுணு ஜனதா கட்சி2,6180.03%
உபாலி சரத் கொங்கஹகேஐக்கிய தேசிய மாற்று முன்னணி2,2600.02%
முத்து பண்டார தெமினிமுல்லஒக்கொம வெசியோ2,0070.02%
மொத்தம்10,393,613 
பதிவுசெய்த வாக்காளர்கள்14,088,500
மொத்த வாக்குகள்10,495,451 (74.50%)
பழுதான வாக்குகள்101,838
செல்லுபடியான வாக்குகள்10,393,613

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்