இராபர்ட் ஆர். கில்ருத்

இராபர்ட் ரோவ் கில்ரூத் (அக்டோபர் 8, 1913 - ஆகஸ்ட் 17, 2000) ஒரு அமெரிக்க விண்வெளிப் பொறியாளர் மற்றும் விமானப் போக்குவரத்து-விண்வெளி முன்னோடி ஆவார், இவர் நாசாவின் மனிதர்கள் கொண்ட விண்வெளி மையத்தின் முதல் இயக்குநராக இருந்தார், பின்னர் இது லிண்டன் பி. ஜான்சன் விண்வெளி மையம் எனப் பெயர் மாற்றப்பட்து. [1]

இராபர்ட் ஆர். கில்ருத்
நாசாவில் கில்ருத், 1965
பிறப்புஇராபர்ட் ரோவ் கில்ரூத்
(1913-10-08)அக்டோபர் 8, 1913
நாஷ்வாக், மின்னசொட்டா, U.S.
இறப்புஆகத்து 17, 2000(2000-08-17) (அகவை 86)
சார்லோட்டஸ்வில், வர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்மின்னசொட்டா பல்கலைக்கழகம், B.S. 1935, M.S. 1936
பணிநாசாவின் இயக்குநர்-மனிதர்கள் கொன்ட விண்வெளி மையம், தற்பொழுது லின்டன் பி, ஜான்சன் விண்வெளி மையம்
விருதுகள் சிறப்புமிக்க கூட்டாட்சி குடிமைச் சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது(1962)
அமெரிக்கன் சொசைட்டியின் இயந்திரப் பொறியியல் பதக்கம்(1970)

அவர் 1937 முதல் 1958 வரை வானூர்திக்கான தேசிய ஆலோசனைக் குழு (NACA) மற்றும் அதன் மற்றொரு அமைப்பான நாசாவில் 1973 இல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார். அவர் அதிமீயொலி வேக விமானம் மற்றும் ஏவுகணை-இயங்கும் விமானம் பற்றிய தொடக்க ஆராய்ச்சியில் ஈடுபட்டார், பின்னர் மெர்குரி, ஜெமினி மற்றும் அப்பல்லோ திட்டங்கள் உட்பட அமெரிக்காவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்தில் ஈடுபட்டார்.

வரலாறு

ஆரம்ப கால வாழ்க்கை

கில்ருத் 1913 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி மின்னசோட்டா உள்ள நாஷ்வாக்கில் பிறந்தார், மேலும் அவருக்கு ஒன்பது வயதாக இருந்தபோது துலூத்துக்கு குடிபெயர்ந்தார். அவர் 1931 இல் துலுத் மத்திய உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். இளமையில் கில்ருத் விண்வெளி அறிவியலில் ஈர்க்கப்பட்டார். எனவே மாதிரி விமானங்களை உருவாக்க நேரத்தை செலவிட்டார். வர்ஜீனியாவில் உள்ள NACA இன் லாங்க்லி நினைவு வான்வெளிப் பொறியியல் ஆய்வகம் பற்றி படித்த பிறகு அவர் அத்துறையில் ஒரு தொழிலைத் தொடர உத்வேகம் பெற்றார். [2] கில்ருத் 1935 இல் மினசோட்டா பல்கலைக்கழகத்தில் வான்வெளிப் பொறியியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், மேலும் 1936 இல் முதுகலை பட்டம் பெற்றார். அங்கு அவர் தொழில்நிலைப் பொறிஞர் அமைப்பான தீட்டா டவுவில் உறுப்பினராக இருந்தார், அதில் பின்னர் புகழ் மன்றத்தின் முன்னாள் மாணவராக சேர்க்கப்பட்டார்.

விமான சோதனை வாழ்க்கை

ஜனவரி 1937 இல், கில்ருத் தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவின் லாங்லி நினைவு வான்வெளிப் பொறியியல் ஆய்வகத்தில் பணியமர்த்தப்பட்டார், அங்கு அவர் விமான ஆராய்ச்சியை மேற்கொண்டார். அவரது ஆராய்ச்சி 1941 இல் வெளியிடப்பட்ட தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு அறிக்கை R755, ஒரு விமானத்தின் திருப்திகரமான பறக்கும் தரத்திற்கான தேவைகள், ஒரு விமானத்தின் கையாளுதல் பண்புகளுக்கான தேவைகளின் தொகுப்பை வரையறுத்தது. அதுவரை, விமானிகள் மற்றும் விமான வடிவமைப்பாளர்களுக்கான வழிகாட்டுதல்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. [2]

கில்ருத் விமான சோதனையின் போது கருவிகளில் இருந்து தரவை பதிவு செய்வதிலும் முன்னோடியாக இருந்தார், பின்னர் விமானியின் அனுபவத்துடன் அது தொடர்புபடுத்தப்பட்டது. [3]

நாசா வாழ்க்கை

NASA விமான இயக்குனர் கிறிஸ் கிராஃப்ட் (இடது) மற்றும் கில்ருத் 1965 இல் ஜெமினி 5 திட்டத்ஹ்டில்

கில்ருத் தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழு இன் விமானி இல்லாத விமான ஆராய்ச்சிப் பிரிவின் உதவி இயக்குநராக அதிமீயொலிவேக ஏவுகணைகளில் பணிபுரிந்து வந்தார். அவரும் அவரது குழுவும் தங்கள் மேலதிகாரிகளை விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தைத் தொடரத் தூண்டினர், ஆனால் அவர் நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டார். சோவியத் ரஷ்யா ஸ்புட்னிக் ஏவுவதில் வெற்றி பெற்ற பிறகு டைனமிக் விரைவாக மாறியது, மேலும் கில்ருத் தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவை நாசாவாக மாற்றுவதில் ஈடுபட்டார்.

நாசா உருவாக்கப்பட்டபோது, கில்ருத் விண்வெளிப் பணிக் குழுவின் தலைவரானார், சோவியத் ஒன்றியத்துக்கு முன்னால் ஒரு மனிதனை விண்வெளியில் நிறுத்தும்பணியை அமெரிக்காவுக்காக மேற்கொண்டார்.

1961 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி, அமெரிக்கா ஒரு மனிதனை பத்தாண்டுகள் முடிவதற்குள் (1960கள்) சந்திரனில் இறக்கி அவரைப் பத்திரமாக பூமிக்குக் கொண்டு வரும் என்று அறிவித்தபோது, கில்ரூத் "அதிர்ச்சியடைந்தார்" அதற்கான இலக்கை அடையமுடியாமல் இருந்தார். அவர் ஜெமினி திட்டத்தின் உருவாக்கத்தில் ஒருங்கிணைந்திருந்தார். சந்திரனில் தரையிறங்குவதற்கு முன் விண்வெளியில் செயல்படுவதைப் பற்றி மேலும் அறிய நாசாவுக்கு வழிகாட்டி உதவினார் [2]

1962 ஆம் ஆண்டில், ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி அவர்களால் சிறப்புமிக்க கூட்டாட்சி குடிமைச் சேவைக்கான குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றார். [4]

விரைவில் அப்பல்லோ திட்டம் பிறந்தது, மேலும் கில்ருத் அதை நடத்திய நாசா மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார், புதிய மனிதர்கள் கொண்ட விண்கல மையம் (எம்எஸ்சி) (இப்போது ஜான்சன் விண்வெளி மையம் ). அமைக்கப்பட்டது. கில்ருத் 1969 இல் தேசியப் புகழ் மன்றத்தில் சேர்க்கப்பட்டார். 1972 இல் ஓய்வு பெறும் வரைமனிதர்கள் கொண்ட விண்கல மையத்தின் இயக்குநராக பணியாற்றினார். அவர் 1976 இல் சர்வதேச விண்வெளிக்கான புகழ் மன்றத்தில் தொடக்க உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார் [5] அவர் மெர்குரி-ரெட்ஸ்டோன் 3 முதல் அப்பல்லோ 15 வரை மொத்தம் 25 குழு விண்வெளி விமானங்களை மேற்பார்வையிட்டார்.

1971 இல், கில்ருத்துக்கு, அப்பல்லோ 15 குழுவினருடன் சேர்ந்து, கோலியர் டிராபி வழங்கப்பட்டது. [6]

1992 இல், கில்ருத் சான் டியாகோ வின்வெளி அருங்காட்சியகத்தின் [7] தேசிய வின்வெளிக்கான புகழ் மன்றத்தில் சேர்க்கப்பட்டார்.[8] 2015 இல் மின்னசொட்டா வின்வெளிப் புகழ் மன்றத்தின் உறுப்பினராக இவரது மரணத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்டார் . [9]

இறப்பு

2000 ஆம் ஆண்டில், கில்ருத் தனது 86வது வயதில் வர்ஜீனியாவின் சார்லோட்டஸ்வில்லில் இறந்தார் [10]

நாடகங்களில் சித்தரிப்புகள்

  • 1996 ஆம் ஆண்டு தொலைக்காட்சி திரைப்படமான அப்பல்லோ 11 இல் கில்ருத் வில்லியம் மெஸ்னிக் நடித்தார்.
  • 1998 ஆம் ஆண்டு ஃபிரம் தி எர்த் டு தி மூன் என்ற குறுந்தொடர்களில் ஜான் கரோல் லிஞ்ச் நடித்தார். [11]
  • 2016 ஆம் ஆண்டு வெளியான ஹிடன் ஃபிகர்ஸ் திரைப்படத்தில், கெவின் காஸ்ட்னர் நடித்த அல் ஹாரிசன் கதாபாத்திரம் பெரும்பாலும் கில்ருத்தை அடிப்படையாகக் கொண்டது. [12]
  • 2018 ஆம் ஆண்டு வெளியான ஃபர்ஸ்ட் மேன் திரைப்படத்தில், கில்ருத் சியாரன் ஹிண்ட்ஸால் சித்தரிக்கப்படுகிறார்.
  • 2020 ஆம் ஆண்டின் தி ரைட் ஸ்டஃப் என்ற தொலைக்காட்சி தொடரில், கில்ருத் பேட்ரிக் பிஷ்லரால் சித்தரிக்கப்படுகிறார்.

குறிப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்