இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறித்தவ தேவாலயம்

பாகோடு இயேசுவின் திரு இருதய ஆலயம் மார்த்தாண்டம் மற்றும் பாகோடு சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பழமையான கோவில் ஆகும். இக்கோவிலானது 1933 ல் துவங்கப்பட்டது.

வரலாறு

கிபி 1930 ம் ஆண்டு கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து பிரிந்து கோட்டார் மறை மாவட்டம் உதயமான காலத்தில், பாகோடு பகுதியில் உள்ள சில நல்லுள்ளங்களின் முயற்சியால், இப்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை வளரத் தொடங்கியது. 1933 ம் ஆண்டு திரித்துவபுரம் பங்குத்தந்தை அருட்பணி தனிஸ்லாஸ் மரியா தலைமையில் பங்கின் சில நல்லுங்களின் துணையுடன் மறைபரப்புப் பணி தீவிரமடைந்தது. [1]

1937 ல் ஆயர் மேதகு லாரன்ஸ் அவர்கள் கோட்டார் ஆயராக இருந்த போது [2] மாதிக்காவிளை என்ற இடத்தில் ஓலைக் கொட்டகை அமைக்கப்பட்டு, திரித்துவபுரத்தின் கிளைப் பங்கு என்ற தகுதியைப் பெற்றது. பின்னர் இவ்வாலயம் தற்போதைய ஆலயத்தின் வடக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு பொற்றை கோயில் என மக்களால் அழைக்கப்பட்டது.

குருகுல முதல்வர் அருட்பணி வின்சென்ட் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நிறுவப்பட்டு 1939 ம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, புதிய ஆயர் மேதகு T. R ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

தற்ப்போது குழித்துறை மறைமாவட்டம் த்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு


சான்றுகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்