இயக்க நரம்பணு

மூளை மற்றும் தண்டுவடத்தில் காணப்படும் நரம்பணுக்களின் ஒரு வகை.

இயக்க நரம்பணுக்கள் (ஆங்கிலம்: Motor neuron) மூளை மற்றும் தண்டுவடத்தில் காணப்படும் நரம்பணுக்களின் ஒரு வகையாகும். இவைகள் மூளை மற்றும் தண்டுவடம் பெற்ற உணர்வுகளுக்கு ஏற்றவாறு கட்டளைகளை வெளிக்காவும் நரம்பு மூலம் உடலின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறது.[1][2]

நுண்ணோக்கியின் மூலம் இயக்க நரம்பணு

இயக்க நரம்பணுக்கள் பெரு மூளையின் இயக்கு புறணி, முள்ளந்தண்டு வடம் மற்றும் மூளைத்தண்டு பகுதிகளில் அமைந்துள்ளது. இயக்க நரம்பணு வெளிக்காவும் நரம்புகள் மூலம் கட்டளைகளை கடத்துகிறது. வெளிக்காவும் நரம்பு (ஆங்கிலம்: Efferent nerve fiber) என்பது இயக்கு நரம்பு ஆகும். வெளிக்காவும் நரம்புகள் இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (ஆங்கிலம்: Motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.[3][4][5]

உட்காவும், வெளிக்காவும் நரம்புகளைக் காட்டும் படம்

வகைகள்

இயக்க நரம்பணு இரு வகையாக பிரிக்கப்படுகிறது அவைகள் முறையே மேல் இயக்க நரம்பணு, கீழ் இயக்க நரம்பணு ஆகும்.

மேல் இயக்க நரம்பணு

பெரு மூளையின் புறணியில் உள்ள இயக்க நரம்பணுக்களே மேல் இயக்க நரம்பணுக்கள் ஆகும். இவைகளின் நரம்பிழை இடை நரம்புகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முள்ளந்தண்டு வடத்தில் உள்ள கீழ் இயக்க நரம்பணுக்களுடன் இணைக்கப்படுகிறது.[1]

கீழ் இயக்க நரம்பணு

முள்ளந்தண்டு வடத்தில் உள்ள கீழ் இயக்க நரம்பணுக்கள் நரம்பிழைகள் மூலம்ஒரு செயலுக்கான சமிக்ஞையை தசை, சுரப்பி போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும். கீழ் இயக்க நரம்பணு ஆல்பா, பீட்டா, காமா என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.[1][2]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இயக்க_நரம்பணு&oldid=3581388" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்