இந்தோர் அரசு

மன்னாள் அரசு

இந்தோர் அரசு அல்லது ஹோல்கர் அரசு (Indore State or Holkar State),[1]பிரித்தானிய இந்தியாவுக்கு கட்டுப்பட்ட மராத்திய ஓல்கர் வம்சத்தவர்கள் கி பி 1818 முதல் இந்தூர் அரசை ஆண்ட மன்னர் அரசாகும்.

இந்தோர் அரசு
इंदौर रियासत
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா

1818–1948
கொடிசின்னம்
கொடிசின்னம்
Location of இந்தோர்
Location of இந்தோர்
குவாலியர் அரசு மற்றும் போபால் இராச்சியங்களுடன் இந்தூர் அரசின் வரைபடம்
வரலாறு
 • பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழ்1818
 • இந்திய விடுதலை15 சூன் 1948 1948
பரப்பு
 • 193124,605 km2 (9,500 sq mi)
Population
 • 193113,25,089 
மக்கள்தொகை அடர்த்தி53.9 /km2  (139.5 /sq mi)
தற்காலத்தில் அங்கம்மத்தியப் பிரதேசம், இந்தியா
Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
இந்தூர் அரசின் பழைய அரண்மனை
இந்தூர் மகாராஜா துக்கோஜிராவ் ஹோல்கர்

தற்கால மத்தியப் பிரதேசத்தில் அமைந்த இந்தூர் அரசு, 1931-இல் மொத்தப் பரப்பளவு 24,605 சதுர கிலோ மீட்டரும், 3,368 கிராமங்களும்[2], 1,325,089 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இந்தூர் அரசின் முதல் தலைநகராக மஹேஷ்வர் நகரம் விளங்கியது. பின்னர் இந்தூருக்கு மாற்றப்பட்டது. பிற முக்கிய நகரங்கள் கார்கோன், பர்வாஹா மற்றும் பான்புரா ஆகும்.

இந்தூர் நகரம் மத்திய இந்தியாவின் முக்கிய வணிக மையமாகவும், படைகளின் பாசறையாகவும் விளங்கியது.

வரலாறு

ஓல்கர் வம்சத்தின் நிறுவனரும், மராத்தியப் படைத்தலைவரும் ஆன மல்ஹர் ராவ் ஓல்கருக்கு, மராத்தியப் பேரரசின் பேஷ்வா வழங்கிய இந்தூர் மற்றும் 28 சிறு நிலப்பரப்புகளைக் கொண்டு, 29 சூலை 1732-இல் இந்தூர் அரசை நிறுவினார். இவரது மருமகள் அகில்யாபாய் ஓல்கர் ஆவார். மூன்றாம் ஆங்கிலேய மராட்டியப் போரில் மராத்திய ஓல்கர் தோல்வி கண்ட பின்னர், பிரித்தானிய இந்தியாவுடன் மராத்திய இந்தூர் அரசு 6 சனவரி 1818-இல் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி, பிரித்தானிய இந்திய அரசின் பாதுக்காப்பிற்குட்பட்ட, சுதேச சமஸ்தானமாக விளங்கியது. இந்தூர் அரசின் தலைநகர் மஹேஷ்வர் நகரத்திலிருந்து இந்தூர் நகரத்திற்கு 3 நவம்பர் 1818-இல் மாற்றப்பட்டது.

இந்திய விடுதலைக்கு பின்னர்

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்தூர் அரசு சுதேச சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கும் உடன்படிக்கையில், இந்தூர் அரசின் இறுதி மன்னர் யஷ்வந்த்ராவ் ஓல்கர் 1 சனவரி 1950-இல் கையொப்பமிட்டார்.

இந்தூர் அரசின் ஆட்சியாளர்கள்

பிரித்தானிய இந்தியாவின் அரச நிர்வாகம், இந்தூர் மன்னர்களுக்கு 19 பீரங்கி குண்டுகள் முழங்கி மரியாதை செய்தனர்.[3]

பெயர்பிறப்புஇறப்புஆட்சிக் காலம்
மல்ஹர் ராவ் ஓல்கர்169417661731 – 20 மே 1766
இரண்டாம் மாலே ராவ் ஓல்கர்1745176720 மே 1766 – 5 ஏப்ரல் 1767
அகில்யாபாய் ஓல்கர்17251795ஏப்ரல் 1767 – 13 ஆகஸ்டு 1795
முதலாம் துகோசி ராவ் ஓல்கர்1723179713 ஆகஸ்டு 1795 – 29 சனவரி 1797
காசி ராவ் ஓல்கர்?180829 சனவரி 1797 – சனவரி 1799
காந்தே ராவ் ஓல்கர்17981806சனவரி 1799 – 1806
யஷ்வந்த் ராவ் ஓல்கர்177618111806 – 27 அக்டோபர் 1811
மூன்றாம் மல்ஹர் ராவ் ஓல்கர்18011833நவம்பர் 1811 – 27 அக்டோபர் 1833
துளசி பாய் (பெண்), (காப்பாளர்)?1817நவம்பர் 1811 – 20 டிசம்பர் 1817
மார்த்தாண்ட ராவ் ஓல்கர்1830184927 அக்டோபர் 1833 – 2 பிப்ரவரி 1834
ஹரி ராவ் ஓல்கர்179518432 பிப்ரவரி 1834 – 24 அக்டோபர் 1843
இரண்டாம் காந்தே ராவ் ஓல்கர்1828184424 அக்டோபர் 1843 – 17 பிப்ரவரி 1844
மகாராணி மஜ்ஜி?184924 அக்டோபர் 1843 – 17 பிப்ரவரி 1844
இரண்டாம் துக்கோஜி ராவ் ஓல்கர்1835188627 சூன் 1844 – 17 சூன் 1886
மகாராணி மஜ்ஜி?184927 சூன் 1844 – செப்டம்பர் 1849
சிவாஜி ராவ் ஓல்கர்1859190817 சூன் 1886 – 31 சனவரி 1903
மூன்றாம் துக்கோஜி ராவ் ஓல்கர்1890197831 சனவரி 1903 – 26 பிப்ரவரி 1926
இரண்டாம் யஷ்வந்த் ராவ் ஓல்கர்1908196126 பிப்ரவரி 1926 – 15 ஆகஸ்டு 1947
உஷா தேவி ஓல்கர்1961தற்போது வரை

இதனையும் காண்க

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Indore State
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இந்தோர்_அரசு&oldid=3996987" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்