இத்தாலி

ஐரோப்பிய நாடு
(இத்தாலியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது.

இத்தாலியக் குடியரசு
Repubblica Italiana
கொடி of இத்தாலி
கொடி
சின்னம் of இத்தாலி
சின்னம்
நாட்டுப்பண்: Il Canto degli Italiani
இத்தாலிஅமைவிடம்
தலைநகரம்ரோம்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)இத்தாலிய மொழி
மக்கள்இத்தாலியன்
அரசாங்கம்நாடாளுமன்றக் குடியரசு
• குடியரசுத் தலைவர்
செர்சியோ மத்தெரெல்லா
• தலைமை அமைச்சர்
ஜியோர்ஜியா மெலோனி
இத்தாலியக் கூட்டு
• இத்தாலியக் கூட்டு
மார்ச் 17 1861
• குடியரசு
ஜூன் 2 1946
பரப்பு
• மொத்தம்
301,318 km2 (116,340 sq mi) (71வது)
• நீர் (%)
2.4
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
59,131,287 [1] (23வது)
• அக்டோபர் 2001 கணக்கெடுப்பு
57,110,144
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2006 மதிப்பீடு
• மொத்தம்
$1.956 திரிலியன் [1] (8வது)
• தலைவிகிதம்
$31,200 [2] (20வது)
மொ.உ.உ. (பெயரளவு)2006 மதிப்பீடு
• மொத்தம்
$1.885 திரிலியன் [3] (7வது)
• தலைவிகிதம்
$33,680 [4] (21வது)
ஜினி (2000)36
மத்திமம்
மமேசு (2004)0.940
அதியுயர் · 17வது
நாணயம்யூரோ (€)1 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மஐநே)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மஐகோநே)
அழைப்புக்குறி39
ஐ.எசு.ஓ 3166 குறியீடுIT
இணையக் குறி.it2
  1. 2002ற்கு முன்னர்: இத்தாலிய லீரா.
  2. .euவும் பாவனையில் உள்ளது.

புவியியல்

இத்தாலி தெற்கு ஐரோப்பாவில் உள்ளது.

மொழிகள்

இத்தாலிய மொழியே இத்தாலியின் ஆட்சி மொழியாகும். ஐந்தரை கோடி மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுவதாக அறியப்படுகிறது. இருப்பினும் உலகளவில் 15 கோடி மக்கள் இம்மொழியை பேசுவதாக கணிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல வட்டார வழக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் மொழிகளும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, செருமன் மொழிகள் சில வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இத்தாலிய மொழியுடன் சிறுபான்மையினரின் மொழிகளிலும் கல்வி பயில வாய்ப்பு உள்ளது.

சமயம்

கிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்கக் கிறித்தவமே பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது.

விளையாட்டு

கால்பந்தாட்டமே பிரதான விளையாட்டாகும். உலகக் கால்பந்தாட்டக் கோப்பையிலும் இத்தாலி கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளது. கைப்பந்தும், கூடைப்பந்தும் முக்கியமான விளையாட்டுகளாகும்.

இத்தாலியின் சிறப்புகள்

இத்தாலி சார்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டிதீவு தவோலாரா. இத்தாலியால் அங்கிகரிக்கபட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு ஐந்து சதுர கி.மீ. இங்குள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான்.
பாறை ஓவியக் கீறல்கள் - கி.மு.8000(Neolithic)

இத்தாலியில் கி.மு.8000(Neolithic) ஆண்டு காலத்திலேயே, காமுனி(Camunni) நாகரீகம் இருந்துள்ளது. அதற்கானச் சான்று, இத்தாலியின் லோம்பார்டி மண்டலப் பகுதியிலுள்ள வால்கமோனிகா(Valcamonica)பள்ளத்தாக்குப் பகுதியின், பாறை ஓவியக் கீறல்களிலுள்ளன.[2].

இத்தாலி, ஐரோப்பியப் பண்பாடுகள் பலவற்றின் உறைவிடமாக விளங்கியது. மேற்குலக பண்பாட்டின் தலைநகராக ரோம் நகரம், பல நூற்றாண்டுகளாக இருந்தது. பரோக் என்றழைக்கப்படும் மேற்குலக கலாச்சாரம், 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமிலேயே ஆரம்பமானது. அத்துடன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கேயே இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில், இத்தாலி காலனித்துவப் பேரரசாக இருந்தது.

இன்று, இத்தாலி ஒரு மக்களாட்சிக் குடியரசாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் உலகின் 8ஆவது நாடாக இத்தாலி விளங்குகிறது[3]. இத்தாலி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகிய அமைப்புகளின் ஆரம்ப உறுப்பு நாடாகும். ஜி8 அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாடாகும்.

இத்தாலியின் தோற்றம்

கி.பி.1000

தற்போதுள்ள இத்தாலியக் குடியரசு நாடு 1946 ஜூன் 2 இல் உருவானது. அதற்குமுன், இத்தாலிய பேரரசாக (Kingdom of Italy) 1861, மார்ச் 17 முதல் இருந்தது.

இத்தாலிய இராச்சியம் உருவாவதற்கான விதைக்கரு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தோன்றியது. அவை வருமாறு;-

  • 14-17ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எலிக்கொள்ளை நோய் (Plague);
  • 65 ஆண்டுகள் நடந்த இத்தாலியப் போர்கள் – (14941559);
  • அப்போர்களுக்குப்பின், உருவான அரசுகளின் அமைதியான ஒருங்கிணைந்த ஆட்சிமுறைகள்;
  • 154 ஆண்டுகள் நடைபெற்ற எசுப்பானிய (Habsburg Spain) ஆட்சி முறை – (15591713).
  • 83ஆண்டுகள் நடைபெற்ற ஆஃசுதிரிய (Habsburg Austria) ஆட்சி முறை – (17131796);
  • 18ஆண்டுகள் நடைபெற்ற பிரென்'சு குடியரசின் ஆட்சி முறை – (17961814);
  • 1814ல் நடைபெற்ற வியன்னா பேராயத்தின் தீர்மானங்களும், செயலாக்கங்களும் ஆகும்.

இத்தாலியின் மண்டலங்கள்

இத்தாலிய மண்டலங்கள்- 20
இத்தாலியில் பேசப்படும் கிளைமொழிகள்

இத்தாலிய நாடானது, 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மண்டலங்களுக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை, சாதாரண அதிகாரங்களுள்ள மண்டலங்கள் ஆகும். அம்மண்டலங்கள் ஆட்சி நிர்வாகத்திற்காக, இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளன.அ'சுடாப் பள்ளத்தாக்கு(Valle d'Aosta) என்ற சிறப்பு மண்டலம், அங்ஙனம் பிரிக்கப்படாத மண்டலமாகும்.

மண்டலங்கள்தலைநகரம்பரப்பளவு (km²)மக்கள் தொகை
1) அப்ருசோ (Abruzzo)L'Aquila10,79413,24,000
2) Aosta பள்ளத்தாக்கு (சிறப்பு மண்டலம்-1)Aosta3,2631,26,000
3) அபுலியா(Apulia)பாரி (Bari)19,36240,76,000
4) பசிளிகாதா (Basilicata)Potenza9,9925,91,000
5) கலபிரியா (Calabria)Catanzaro15,08020,07,000
6) CampaniaNaples13,59558,11,000
7) Emilia-RomagnaBologna22,12442,76,000
8) Friuli-Venezia Giulia (சிறப்பு மண்டலம்-2)Trieste7,85512,22,000
9) Lazioரோம்17,20755,61,000
10) LiguriaGenoa5,42116,10,000
11) லோம்பார்டி (Lombardy)மிலன் (Milan)23,86196,42,000
12) MarcheAncona9,69415,53,000
13) MoliseCampobasso4,4383,20,000
14) பியத்மாந்து (Piedmont)துரின்25,39944,01,000
15) சார்தீனியா (Sardinia) (சிறப்பு மண்டலம்-3)Cagliari24,09016,66,000
16) சிசிலி (Sicily) (சிறப்பு மண்டலம்-4)Palermo25,70850,30,000
17) TuscanyFlorence22,99736,77,000
18)Trentino-Alto Adige (சிறப்பு மண்டலம்-5)Trento13,60710,07,000
19) UmbriaPerugia8,4568,84,000
20) Venetoவெனி'சு18,39148,32,000

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இத்தாலி&oldid=4030208" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்