இதய வாசல்

இதய வாசல் சந்திரனாத் இயக்கத்தில் 1991இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ் திரைப்படம். இதில் ரமேஷ் அரவிந்த் மற்றும் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத் திரைப்படம் வி. பி.எஸ். தயாரிக்க, விஜியின் இசையில் 1991, மே மாதம் 17ம் நாள் வெளிவந்தது.[1][2]

இதய வாசல்
இயக்கம்சந்திரனாத்
தயாரிப்புவி. பி. எஸ். .
கதைஎம். எஸ். கம்லேஷ் குமார் (வசனம்)
திரைக்கதைசந்திரனாத்
இசைவிஜி மேனுயல்
நடிப்பு
ஒளிப்பதிவுவி. சுகுமார்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்வசந்தாலயா கிரியேஷன்ஸ்
வெளியீடுமே 17, 1991 (1991-05-17)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை

அரவிந்த் (ரமேஷ் அரவிந்த்) ஒரு சிறந்த தொழிலதிபராக இருக்கிறான். அவனுடைய சகோதரன் முரளி (அச்சமில்லை கோபி) தன் மனைவி விவாகரத்து பெற்றதால் குடிகாரனாகிறான். அதனால் குற்றவுணர்ச்சியடைந்த அவர்களின் தந்தை கிருஷ்ணசாமி (சேது வினாயகம்) அரவிந்தின் திருமண விவகாரத்தில் முழு உரிமை அளிக்கிறார். அரவிந்த் வாணியைக் (மீனா)காதலிக்கிறான். அதனால் வாணியின் தந்தையிடம் தன் திருமணம் குறித்துப் பேசுகிறான். ஆனால் அவர் மறுக்கிறார். ஏனெனில் அவரின் மூத்த மகள் (சபிதா ஆனந்த்) பணக்காரரைத் திருமணம் செய்துகொண்டு தற்சமயம் பிரிந்து வாழ்வதை நினைவு கூர்கிறார். அரவிந்த் வாணி எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து சென்று அவளை அடைய முயற்சிக்கிறான். இதனால் பல இன்னல்களுக்கு ஆளாகிறான். முன்னாள் காவல்துறை அதிகாரியான கணேஷ் (சரத்குமார்) அரவிந்திற்கு உதவி செய்கிறார். அரவிந்தும் வாணியும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுடன் கதை முடிவுக்கு வருகிறது.

நடிப்பு

அரவிந்த் - ரமேஷ் அரவிந்த்
வாணி - மீனா
கணேஷ் - சரத்குமார்
வாணியின் சகோதரி - சபிதா ஆனந்த்
டெல்லி கணேஷ்
உதய் பிரகாஷ்
பலராமன்- கவுண்டமணி
ஜாயிண்ட் - விவேக்
கிருஷ்ணசாமி - சேது விநாயகம்
முரளி - அச்சமில்லை கோபி
உமா - சங்கீதா
பாண்டு
ஜி. கே. ரத்னம் - ரவிராஜ்
திடீர் கண்ணையா
பிரதீபா
வாசுகி
லதா
பேபி சங்கீதா
இந்து - வைஷ்ணவி

பாடல்கள்

இப்படத்திற்கு இசை அமைத்தவர் விஜி மேனுயல்.[3] பாடல்களை முத்துலிங்கம், புலமைப்பித்தன் மற்றும் மு. மேத்தா எழுதியுள்ளனர்.[4]

எண்பாடல்பாடியவர்கள்காலம்
1'என் மனம்போல்'Mano, மலேசியா வாசுதேவன், அருண்மொழி4:45
2'எப்போதும் காதலியா'தீபன் சக்ரவர்த்தி3:10
3'காதல் ஜோடிதான்'கே. ஜே. யேசுதாஸ்4:45
4'கண்ணுக்குள் உன்னைத்தான்'மனோ, சித்ரா4:40
5'வா நீ அன்பே'எஸ். பி. பாலசுப்பிரமணியம், குழு4:54

வரவேற்பு

தி நியூ இந்தியன் எக்சுபிரசு பத்திரிகையின் நிருபரான என். கிருஷ்ணசுவாமி,தன் விமர்சனத்தில் வி. சுகுமாரின் ஒளிப்பதிவும் விஜியின் இசையும் நன்றாக உள்ளது எனவும், கம்லேஷ் குமாரின் வசனங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் திரைக்கதை கதைக்குள் கதை என்னும் அமைப்பில் உள்ளதால் அதுவே இப்படத்தின் பலவீனமாக உள்ளது என்று கூறியுள்ளார்.[5]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இதய_வாசல்&oldid=3659425" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்