இசுமாயில் பாஷா

இசுமாயில் பாஷா (Isma'il Pasha) (31 திசம்பர் 1830 - 2 மார்ச் 1895) சிறப்புவாய்ந்த இசுமாயில் எனவும் அறியப்பட்ட இவர் 1863 முதல் 1879 வரை எகிப்து மற்றும் சூடானின் ஆட்சியாளராக இருந்தார். இவர் பிரிதானியர்களால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். இவரது தாத்தா முகம்மது அலி பாசாவின் இலட்சிய கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொண்ட இவர், தனது ஆட்சிக் காலத்தில் எகிப்தையும் சூடானையும் பெரிதும் நவீனப்படுத்தினார். தொழில்துறை மற்றும் பொருளாதார மேம்பாடு, நகரமயமாக்கல் மற்றும் ஆப்பிரிக்காவில் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் பெருமளவில் முதலீடு செய்தார்.

இசுமாயில் பாஷா
எகிப்து மற்றும் சூடானின் ஆட்சியாளர்
ஆட்சி19 சனவரி 1863 – 26 சூன் 1879
முன்னிருந்தவர்முதலாம் சயீது
பின்வந்தவர்தெவிபிக் பாசா
வாரிசு(கள்)தெவிபிக் பாசா
உசேன் கமால்
புவாது
இளவரசன் அலி ஜமால்
இளவரசி ஜமீலா பாதல்
இளவரசி பாத்திமா
இளவரசி அமீனா
இளவரசி நிமெத்துல்லா
இளவரசி ஜைனாப்
இளவரசி தவ்ஹிதா
அரச குலம்முகமது அலி வம்சம்
தந்தைஇப்றாகீம் பாசா
தாய்ஹோஷியார் காதின்
பிறப்பு(1830-12-31)31 திசம்பர் 1830
கெய்ரோ, எகிப்தியப் பிரதேசம், உதுமானியப் பேரரசு
இறப்பு2 மார்ச் 1895
இசுதான்புல், உதுமானியப் பேரரசு
அடக்கம்அல்-ரிபாய் பள்ளிவாசல், கெய்ரோ, எகிப்து
சமயம்இசுலாம்

இவரது தத்துவத்தை 1879இல் வெளியிட்டஒரு அறிக்கையில் காணலாம்: "எனது நாடு இனி ஆப்பிரிக்காவில் இல்லை; நாங்கள் இப்போது ஐரோப்பாவின் ஒரு பகுதியாக இருக்கிறோம். ஆகவே, நம்முடைய முந்தைய வழிகளைக் கைவிடுவதும், நமது சமூக நிலைமைகளுக்கு ஏற்றவாறு ஒரு புதிய முறையைப் பின்பற்றுவதும் இயல்பானது ”.

1867 ஆம் ஆண்டில் இவர் தனது ஆட்சியாளர் பட்டத்திற்கு உதுமானியர்களிடமும், சர்வதேச அரங்கிலும் அங்கீகாரத்தையும் பெற்றார். இது முன்னர் இவரது முன்னோடிகளான எகிப்து மற்றும் சூடானின் உதுமானியப் பிரதேசங்களில் (1517-1867) பயன்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இசுமாயிலின் கொள்கைகள் எகிப்து மற்றும் சூடானின் உதுமானியப் பகுதிகளை (1867-1914) கடுமையான கடனில் ஆழ்த்தின. இது சுயஸ் கால்வாய் நிறுவனத்தில் நாட்டின் பங்குகளை பிரித்தானிய அரசாங்கத்திற்கு விற்க வழிவகுத்தது. மேலும் பிரித்தனைய அதிகாரத்திலிருந்து விலகவும் வைத்தது.

இவரது நினைவாக எகிப்தின் ஒரு நகரத்திற்கு இசுமாலியா எனப் பெயரிடப்பட்டது.

குடும்பம்

அல்பேனிய வம்சாவளியைச் சேர்ந்த எகிப்தின் சுல்தான் முகம்மது அலியின் பேரனும், இப்ராகிம் பாசாவின் மூன்று மகன்களில் இரண்டாவது மகனுமான இவர் கெய்ரோவில் அல் முசாஃபிர் கானா அரண்மனையில் பிறந்தார்.[1] இவரது தாயார் சர்க்காசியன் ஹோஷியார் காதின்,[2] இவரது தந்தையின் மூன்றாவது மனைவியாவார்.[3]

இளைமையும் கல்வியும்

பாரிஸில் ஒரு ஐரோப்பிய கல்வியைப் பெற்றபின், தனது மாமா எகிப்து மற்றும் சூடானின் ஆளுநராக இருந்த முதலாம் சயீது இறந்தவுடன் நாடு திரும்பினார். தன்னுடைய மருமகனின் இருப்பை முடிந்தவரை தவிர்ப்பதற்காகவும், தனது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் சயீது, அடுத்த சில ஆண்டுகளில் வெளிநாடுகளில், குறிப்பாக போப், பேரரசர் மூன்றாம் நெப்போலியன் மற்றும் உதுமானிய சுல்தான் ஆகியோரிடம் இவரைப் பணியில் அமர்த்தினார். 1861ஆம் ஆண்டில் சூடானில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியைத் தணிக்க 18,000 பேர் கொண்ட ஒரு இராணுவத்தின் தலைவராக இவர் அனுப்பப்பட்டார். இது இவர் நிறைவேற்றிய ஒரு முக்கியப் பணியாகும்.

எகிப்தின் ஆளுநர்

சயீதின் மரணத்திற்குப் பிறகு, 1863 சவரி 19 அன்று இவர் ஆளுநராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் 1867 ஆம் ஆண்டிதான் இவர் தனது ஆளுநர் பட்டத்திற்கு உதுமானியர்களிடமும், சர்வதேச அரங்கிலும் அங்கீகாரத்தையும் பெற்றார்

சீர்திருத்தங்கள்

இசுமாயில் தனது சீர்திருத்த திட்டங்களை எளிதாக்க அதிக செலவு செய்தார். குறிப்பாக கான்ஸ்டண்டினோபிலுக்கு இலஞ்சம் அக்கப்பட்டது. சுயஸ் கால்வாய் கட்டுமானத்திற்காக அதிக பணம் சென்றது. விவசாயத்தை நவீனமயமாக்க உதவும் வகையில் 8,000 மைல் (13,000 கி.மீ) பாசன கால்வாய்களை அமைக்க சுமார் 46 மில்லியன் டாலர் சென்றது. இவர் 900 மைல் (1,400 கி.மீ) இரயில் பாதைகள், 5,000 மைல் (8,000 கி.மீ) தந்தி இணைப்புகள், 400 பாலங்கள், அலெக்சந்திரியாவில் துறைமுக பணிகள் மற்றும் 4,500 பள்ளிகளைக் கட்டினார்.[4]

இவர் தனது தாத்தாவின் அளவிலான உள் சீர்திருத்த திட்டங்களை தொடங்கினா. சுங்க முறையையும் அஞ்சல் நிலையத்தையும் மறுவடிவமைத்து, வணிக முன்னேற்றத்தைத் தூண்டினார். சர்க்கரைத் தொழிலை உருவாக்கினார். பருத்தித் தொழிலைக் கட்டியெழுப்பினார். பல அரண்மனைகளைக் கட்டி, ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆப்பெரா மற்றும் நாடக அரங்கங்களைப் பராமரித்தார். கெய்ரோவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஐரோப்பியர்கள் வேலைக்கு அமர்த்தி நகரத்தின் மேற்குப் பகுதியில் பாரிஸை மாதிரியாகக் கொண்டு ஒரு காலனி கட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். அலெக்சாந்திரியாவும் மேம்படுத்தப்பட்டது. எகிப்து மற்றும் சூடானிலும், உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் ஒரு பரந்த இருப்புப்பாதை கட்டும் திட்டத்தை தொடங்கினார்.

கல்வி சீர்திருத்தம் கல்வி வரவு செலவுத் திட்டத்தை பத்து மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது. பாரம்பரிய ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகள் விரிவுபடுத்தப்பட்டு சிறப்பு தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பள்ளிகள் உருவாக்கப்பட்டன. மேற்கத்திய பயிற்சி பெற்ற உயரடுக்கின் உருவாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், கல்வித் திட்டங்களைப் படிக்க மாணவர்கள் மீண்டும் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டனர். ஒரு தேசிய நூலகம் 1871 இல் நிறுவப்பட்டது.[5]

எகிப்தின் அலெக்சாந்திரியாவிலுள்ள இசுமாயில் பாசாவின் சிலை

நவம்பர் 1866 இல் பிரதிநிதிகள் கூட்டத்தை நிறுவியது இவரது மிக முக்கியமான சாதனைகளில் ஒன்றாகும். இது முற்றிலும் ஆலோசனைக் குழுவாக கருதப்பட்டாலும், அதன் உறுப்பினர்கள் இறுதியில் அரசாங்க விவகாரங்களில் ஒரு முக்கிய செல்வாக்கைக் கொண்டிருந்தனர். கிராமத் தலைவர்கள் சட்டசபையில் ஆதிக்கம் செலுத்தி, கிராமப்புறங்கள் மற்றும் மத்திய அரசு மீது அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை அதிகரித்து வந்தனர்.

அடிமை வர்த்தகத்தை குறைக்க இவர் முயன்றார். யாகூப் கட்டாயின் ஆலோசனை மற்றும் நிதி ஆதரவுடன் ஆப்பிரிக்காவில் எகிப்தின் ஆட்சியை நீட்டித்தார். 1874 ஆம் ஆண்டில் இவர் தார்பூரை இணைத்தார். ஆனால் இவரது இராணுவம் மீண்டும் மீண்டும் பேரரசர் நான்காம் யோகன்னசால் முதலில்1875 நவம்பர் 16லும் அன்று குண்டாட்டிலும், மீண்டும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் குராவிலும் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எத்தியோப்பியாவிற்கு விரிவடைவதைத் தடுத்தது.

மேற்கோள்கள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Isma'il Pasha
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=இசுமாயில்_பாஷா&oldid=3927583" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்