ஆளுநரகம்

நாட்டில் ஆளுநரால் நிர்வகிக்கப்படும் ஒரு நிர்வாகப் பகுதி

கவர்னரேட் எனப்படும் ஆளுநரகம் (Governorate) என்பது நாட்டின் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இதற்கு ஆளுநர் தலைமை தாங்குகிறார். ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஆளுநர்களால் நிர்வகிக்கப்படும் பகுதிகள் மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் என அழைக்கப்படுகிறன்றன. ஆளுநரகம் என்ற சொல் பெரும்பாலும் ஆங்கிலம் பேசாத நாடுகளின் நிர்வாகப் பகுதிகளின் மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்படுகிறது.

அரபு முஹபாசாவின் மொழிபெயர்ப்பாக மிகவும் பொதுவாக இது பயன்படுத்தப்படுகிறது. [1] இது உருசியப் பேரரசின் குபெர்னியா மற்றும் பொது-குபெர்னடோஸ்டோ அல்லது எசுப்பானியப் பேரரசின் 34 கோபர்னேசியன்களையும் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அரபு நாடுகள்

நிர்வாக அலகுகளை குறிப்பிட அரபு நாடுகளில் கவர்னரேட் என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சில ஆளுநரகங்ள் ஒன்றுக்கு மேற்பட்ட முஹபாஸாக்களை இணைந்ததாக உள்ளன. மற்றவை உதுமானியப் பேரரசின் விலாயெட் நிர்வாக அமைப்பின் வழியாக பெறப்பட்ட பாரம்பரிய எல்லைகளை நெருக்கமாக கொண்டுள்ளன.

துனிசியாவைத் தவிர, கவர்னரேட் என்ற சொல்லானது முஹபாசா என்ற அரபு சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக தோன்றின.

  • பகுரைனின் ஆளுநரகங்கள்
  • எகிப்தின் ஆளுநர்கள்
  • ஈராக்கின் ஆளுநரகங்கள் (அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பில், சில நேரங்களில் மாகாணமாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
  • ஜோர்டானின் ஆளுநரகங்கள்
  • குவைத்தின் ஆளுநரகங்கள்
  • லெபனானின் ஆளுநரகங்கள்
  • ஓமானின் ஆளுநரகங்கள்
  • பாலஸ்தீன ஆளுநரகங்கள்
  • சவுதி அரேபியாவின் ஆளுநரகங்கள்
  • சிரியாவின் ஆளுநரகங்கள்
  • துனிசியாவின் ஆளுநரகங்கள் (உள்ளூர் சொல் விலாயா )
  • யேமனின் ஆளுநரங்க்கள்

உருசியப் பேரரசு

  • உருசியாவின் நிர்வாக பிரிவின் வரலாறு
  • குபெர்னியா மற்றும் உருசிய பேரரசின் ஆளுநரகங்கள்

போலந்தின் காங்கிரஸ் இராச்சியம்

  • காங்கிரஸ் போலந்தின் நிர்வாகப் பிரிவைக் காண்க

பின்லாந்தின் கிராண்ட் டச்சி

  • பின்லாந்தின் கிராண்ட் டச்சியின் ஆளுநரகங்கள்

போர்த்துகீசிய பேரரசு

போர்த்துகல் பேரரசில், ஆளுநரக ஜெனரல் ( போர்த்துகீசியம் : கவர்னோ-ஜெரல் ) என்பவர் காலனித்துவத்தின் நிர்வாகியாக இருந்தார். போர்த்துகல் பேரரசின் சிறிய காலனிகள் அல்லது பிரதேசங்களைக் கொண்டு மையப்படுத்தப்பட்ட அரசாங்கமாக இருக்க அவை பொதுவாக உருவாக்கப்பட்டன.

போர்த்துக்கல் பேரரசின் ஆளுநரக ஜெனரல்கள்:

  • பிரேசில் ஆளுநரக ஜெனரல் (1549-1572 / 1578-1607 / 1613-1621)
  • பஹியாவின் ஆளுநரக ஜெனரல் (1572-1578 / 1607-1613)
  • ரியோ டி ஜெனிரோவின் ஆளுநரக ஜெனரல் (1572-1578 / 1607-1613)

எசுபானிய பேரரசு

எசுபானியப் பேரரசில், கோபர்னேசியோன்கள் ("கவர்னர்ஷிப்கள்" அல்லது "கவர்னரேட்டுகள்") ஒரு நிர்வாகப் பிரிவாக இருந்தன. இது ஆடியென்சியா அல்லது கேப்டன்சி ஜெனரலின் மட்டத்திற்கு நேரடியாக ஒரு மாகாணத்திதிற்கு ஒப்பானது.

இத்தாலிய பேரரசு

  • இத்தாலிய கிழக்கு ஆபிரிக்காவின் ஆளுநரகங்கள்

ஜெர்மனி

இன்றைய ஜேர்மனிய மாநிலங்களான பேடன்-வூர்ட்டம்பேர்க், பவேரியா, ஹெஸ்ஸி, மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய அரசுகள் உள்ளன - இதற்கு முன்னர் இன்னும் பல ஜெர்மன் மாநிலங்களில் - ரெஜியுரங்ஸ்பெசிர்க் என்று அழைக்கப்படும் துணை-மாநில நிர்வாகப் பகுதிகள் இருந்தன, அவை சில சமயங்களில் ஆங்கிலத்தில் ஆளுநரகம் என்று மொழிபெயர்க்கப்படுகின்றன.[சான்று தேவை][ மேற்கோள் தேவை ]

ருமேனியா

இரண்டாம் உலகப் போரின்போது, ருமேனியா மூன்று ஆளுநரகங்களாக நிர்வகிக்கப்பட்டது. அவை பெசராபியா கவர்னரேட், புக்கோவினா கவர்னரேட், டிரான்ஸ்னிஸ்ட்ரியா கவர்னரேட் என்பனவாகும்.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆளுநரகம்&oldid=3083600" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்