ஆலிகார்னாசசு

பண்டைய கரியன் நகரம், தற்கால துருக்கியில் உள்ள போட்ரம் நகரின் ஒரு பகுதி

ஆலிகார்னாசசு (Halicarnassus, பண்டைக் கிரேக்கம்Ἁλικαρνᾱσσός Ἁλικαρνᾱσσός Halikarnāssós or Ἀλικαρνασσός Alikarnāssós, துருக்கியம்: Halikarnas  ; கேரியன் 𐊠𐊣𐊫𐊰 𐊴𐊠𐊥𐊵𐊫𐊰) என்பது அனத்தோலியாவில் உள்ள காரியாவில் உள்ள ஒரு பண்டைய கிரேக்க நகரமாகும். [1] இது தென்மேற்கு காரியாவில், கோகோவா வளைகுடாவில் ஒரு அனுகூலமான இடத்தில் அமைந்துள்ளது. இது தற்கால துருக்கியின் போட்ரம் மாநகரின் ஒரு பகுதியாக உள்ளது. ஆலிகார்னசசு மாசலசின் கல்லறைக்கு பிரபலமானது, இது மவுசோலசின் கல்லறை என்றும் அழைக்கப்படுகிறது. அதன் பெயர் " மாசோலியம் " என்ற சொல்லில் இருந்து தோன்றியது. கிமு 353 முதல் 350 வரை கட்டப்பட்ட கல்லறையானது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டது.

ஆலிகார்னாசசு
alos k̂arnos 𐊠𐊣𐊫𐊰 𐊴𐊠𐊥𐊵𐊫𐊰 (in Carian)
Ἁλικαρνασσός (in பண்டைக் கிரேக்க மொழி)
Halikarnas (in துருக்கிய மொழி)
பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான ஆலிகார்னாசசுவில் உள்ள மாசலசின் சமாதி.
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Aegean" does not exist.
இருப்பிடம்போட்ரம், முலா மாகாணம், துருக்கி
பகுதிகாரியா
ஆயத்தொலைகள்37°02′16″N 27°25′27″E / 37.03778°N 27.42417°E / 37.03778; 27.42417
வகைகுடியிருப்பு
வரலாறு
Associated withஎரோடோட்டசு
Map of ancient cities of Caria
காரியாவின் பண்டைய நகரங்கள்

ஆலிகார்னசசு வரலாறு சிறப்பு வாய்ந்தது. இது முடியாட்சி முறையைக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மற்ற கிரேக்க நகர அரசுகள் நீண்ட காலமாக தங்களை ஆண்ட அரசர்களை அகற்றின. பாரசீக ஆட்சிக்கு எதிராக ஐயோனிய அண்டை நாடுகள் கலகம் செய்தபோது, ஆலிகார்னசசு பாரசீகர்களுக்கு விசுவாசமாக இருந்தது. கிமு 333 இல் ஆலிகார்னசசு முற்றுகைக்குப் பிறகு பேரரசர் அலெக்சாந்தர் இதைக் கைப்பற்றும் வரை பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே இருந்தது.

செபிரியா என்பது இங்கு உள்ள குடியேற்றத்தின் அசல் பெயராகும். கி.பி 1404 இல் இப்பகுதிக்கு அருகில் நைட்ஸ் ஆஃப் ரோட்சால் செயின்ட் பீட்டர் கோட்டையகம் கட்டப்பட்டது. [2] கோட்டையகம் கட்டபட்ட பகுதி ஒரு தீவு ஆகும். தீவின் அருகில் இருந்த முதன்மை நிலப்பரப்பில் பல கேரியன் குடியிருப்புகளை உள்ளடக்கியதாக படிப்படியாக விரிவடைந்தது. [3] இருப்பினும், காலப்போக்கில், தீவின் நிலப்பரப்பானது முதன்மை நிலப்பரப்புடன் ஒன்றிணைந்தது. மேலும் நகரம் தற்போதுள்ள சல்மாசிஸ், பூர்வீக லெலெஜஸ் மற்றும் கேரியன்ஸ் [2] மற்றும் பிற்கால கோட்டையின் தளத்துடன் இணைக்க விரிவாக்கப்பட்டது. முதலில் குடியேறியவர்கள் பெலோபொன்னீசிய இனத்தைச் சேர்ந்த டோரியன்கள். என்றாலும் இது விரைவில் மறக்கப்பட்டது.

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆலிகார்னாசசு&oldid=3500464" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்