ஆர்த்தி ராமசாமி

சதுரங்க வீரர்

ஆர்த்தி ராமசாமி (Aarthie Ramaswamy) என்பவர் ஓர் இந்திய பெண் சதுரங்க விளையாட்டு வீரராவார். பெண் கிராண்டு மாசுட்டர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 1981 ஆம் ஆண்டு சூன் 28 ஆம் தேதி இவர் பிறந்தார். 2003 ஆம் ஆண்டில் தேசிய சதுரங்க சாம்பியன் பட்டத்தை ஆர்த்தி வென்றார். 1999 ஆம் ஆண்டு எசுப்பானியாவின் ஓரோபெசா நகரத்தில் நடைபெற்ற 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலக சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 2211 எலோ தரப்புள்ளிகள் பெற்ற சதுரங்க வீரராக உள்ளார்.

ஆர்த்தி ராமசாமி
Aarthie Ramaswamy
முழுப் பெயர்ஆர்த்தி ராமசாமி
நாடுஇந்தியா
பட்டம்பெண்கள் கிராண்டு மாசுட்டர் (2003)[1]
பிடே தரவுகோள்2211 (சனவரி 2010)
உச்சத் தரவுகோள்2348 (ஏப்ரல் 2003)

1990 ஆம் ஆண்டு இந்திய அளவில் நடைபெற்ற பத்து வயதிற்குட்பட்டவர்களுக்கான பெண்கள் சதுரங்க விளையாட்டில் இரண்டாம் இடம் பிடித்தார். 1993 ஆம் ஆண்டு 12 வயதிற்குபட்டவர்களுக்கான விளையாட்டுப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார். தனது அடுத்தடுத்த அதிரடியான நகர்வுகள் மூலம் 1995 ஆம் ஆண்டில் 14 வயதுக்கு உட்பட்டோர் , 16 வயதிற்கு உட்பட்டோர் சாம்பியன் பட்டங்களை வென்றார். 1998, 1999 ஆம் ஆண்டுகளில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் தேசியப் பட்டத்தை வென்றார்.[2]

இந்திய சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆர்.பி. இரமேசை ஆர்த்தி திருமணம் செய்து கொண்டார்.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆர்த்தி_ராமசாமி&oldid=3434776" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: காமராசர்நான்கு புனித தலங்கள், உத்தரகண்ட்சிறப்பு:Searchமுதற் பக்கம்பகுப்பு:ஆந்திர ஆறுகள்சுப்பிரமணிய பாரதிமுகேசு அம்பானிபாரதிதாசன்தமிழ்நாட்டில் சமணம்தமிழ்ஐம்பெருங் காப்பியங்கள்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்கழுமலம்கி. ஆம்ஸ்ட்ராங்சிலப்பதிகாரம்திருக்குறள்மூவேந்தர்தொல்காப்பியம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்தியன் 2நில அளவை (தமிழ்நாடு)நான்கு புனித தலங்கள், இந்தியாஇலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுசமணம்பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருவள்ளுவர்சூரரைப் போற்றுசிறப்பு:RecentChangesஅம்பேத்கர்அறுபடைவீடுகள்கல்விபி. எச். அப்துல் ஹமீட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)எட்டுத்தொகைவிக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)சுஜாதா (எழுத்தாளர்)தமிழ்நாடு