ஆர்கோ (2012 திரைப்படம்)

அமெரிக்க நாடகத் திரைப்படம்

ஆர்கோ (Argo) 2012 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். பென் அஃப்லெக்கால் இயக்கப்பட்டது. அக்டோபர் 12, 2012 அன்று ஐக்கிய அமெரிக்காவில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. ஏழு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்துக்கான அகாதமி விருதை வென்றது. பென் அஃப்லெக், பிரையன் கிரான்ஸ்டன், ஆலன் ஆர்கின், ஜான் குட்மன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அர்கோ
Argo
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்பென் அஃப்லெக்
தயாரிப்புகிரான்ட் ஹெஸ்லவ்
பென் அஃப்லெக்
ஜியார்ஜ் குளூனி
மூலக்கதைஅந்தோனியோ மென்டெஸ் மற்றும் ஜசுயா பியர்மன் ஆகியோர் எழுதிய புதினங்கள் அடிப்படையில்
திரைக்கதைகிறிஸ் டெர்ரியோ
இசைஅலெக்சாண்டர் டெசுபிளாத்
நடிப்புபென் அஃப்லெக்
பிரையன் கிரான்ஸ்டன்
ஆலன் ஆர்கின்
ஜான் குட்மன்
ஒளிப்பதிவுரொடிரீகோ பிரீய்டோ
படத்தொகுப்புவில்லியம் கோல்டன்பர்க்
கலையகம்ஜிகே ஃபிலிம்ஸ்
ஸ்மோக்ஹவுஸ் திரைப்படங்கள்
விநியோகம்வார்னர் புரோஸ்.
வெளியீடுஆகத்து 31, 2012 (2012-08-31)(டெல்லுரைட் திரைப்படத் திருவிழா)
அக்டோபர் 12, 2012 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்120 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$44.5 மில்லியன்[2]
மொத்த வருவாய்$191,943,000[2]

கதை

நவம்பர் 4, 1979 அன்று போராட்டக்காரர்கள் டெஹ்ரானிலுள்ள அமெரிக்க தூதரகத்தினை கைப்பற்றினர், இரானில் சி.ஐ.ஏ வின் செயல்களை கண்டித்து. 50 இற்கும் அதிகமான தூதரக அலுவலர்கள் கைப்பற்றப்பட்டனர். அதில் ஆறு நபர்கள் தப்பித்து கனடா தூதரக தலைவர் கென் டெயிலர் (விக்டர் கார்பர்) வீட்டில் தஞ்சம் புகுந்தனர். அவர்களை தாய்நாட்டிற்கு திருப்ப அமெரிக்கா திட்டமிடுகிறது. டோனி மென்டெஸ் (பென் அஃப்லெக்), சி.ஐ.ஏ. அதிகாரியினை அனுகுகிறார்கள். தற்செயலாக பிளானட் ஆப் த ஏப்ஸ் திரைப்படத்தினைப் பார்க்க, திரைக்குழுவாக அவர்களை தாய்நாட்டிற்கு திரும்ப கொண்டு வரலாம் என்று முடிவெடுத்தார்.

மென்டெஸ் மற்றும் சாக் ஒ டான்னல் சாம் சேம்பர்ஸை, ஹாலிவுட் மேக்-அப் கலைஞர், சந்திக்கின்றனர். சேம்பர்ஸ் திரைப்படத் தயாரிப்பாளர் லெஸ்டர் சீகலிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கின்றார். சேர்ந்து ஒரு பொய்யான திரைப்பட ஸ்டுடியோவினைத் தொடங்கி, வெற்றிகரமாக ஆர்கோ ஒரு "அறிவுபுனைத்" திரைப்படமென விளம்பரம் செய்கின்றனர். அதேசமயம் டெஹ்ரானில் தப்பித்தவர்கள் தூதரக தலைவர் வீட்டில் அதிக அச்சமடைகின்றனர். போராட்டக்காரர்கள் நார்-நாராக கிழிக்கப்பட்ட தூதரக தாள்களை ஒன்று சேர்க்கின்றனர். சிலர் தப்பித்து விட்டனர் என்று அறிகின்றனர்.

ஆர்கோவின் தயாரிப்பாளராக மென்டெஸ் இரானிற்கு செல்கிறார். தப்பித்த ஆறு நபர்களுடன் இணைகின்றார். அவர்களுக்கு கனடிய கடவுச்சீட்டுகளும் போலி தாள்களும் தருகின்றார். அவர்கள் மென்டெஸை நம்ப மறுத்தாலும் இந்த திட்டத்திற்கு ஒத்துழைக்கிறார்கள். டெஹ்ரான் சந்தைக்கு செல்கிறார்கள், அங்கு பிரச்சனையில் சிக்குகின்றனர். இரானிய கலாச்சார தொடர்பு அதிகாரியின் உதவியினால் தப்பிக்கின்றனர்.

சிஐஏ வின் மற்றொறு திட்டத்தினால் மென்டெஸ்சின் திட்டம் நிறுத்தப்படுகிறது. இருந்தும் மென்டெஸ் திட்டத்தினை நடத்துகிறார். டான்னல்-ஐ விமான டிக்கட்டுகள் வாங்க வைக்கிறார். விமான நிலையத்தில் பரபரப்பு நிலவுகிறது. கடைசி நிமிடத்தில் தப்பித்தவர்களின் டிக்கெட்டுகள் உறுதியாகிறது. மேலும் காவலரின் தொலைபேசி, ஹாலிவுட் ஸ்டூடியோவிற்கு, கடைசி நேரத்தில் எடுக்கப்படுகிறது. தப்பித்தவர்கள் விமானத்தில் ஏற இரானிய காவலர்கள் இவர்களைக் கண்டுகொண்டனர். விமானத்தை நிறுத்த முயல்கின்றனர் ஆனால் விமானம் வெற்றிகரமாக விமான நிலையத்தினை விட்டுச் செல்கின்றது. இவ்வாறாக மென்டெஸ்சும் ஆறு நபர்களும் இரானிலிருந்து தப்பிக்கின்றனர்.

மற்ற பிணைக்கைதிகளைக் காப்பாற்ற அனைத்து அமெரிக்க ஈடுபாடும் மறைக்கப்பட்டது, வெற்றி முழுமையும் கனடிய அரசாங்கிற்கும் தூதரக அதிகாரிக்கும் வழங்கப்பட்டது. (அவர்களின் வீட்டு வேலைக்காரி ஈராக்கிற்கு தப்பித்து செல்கிறார்). மென்டெஸ்சிற்கு சிறப்பு பதக்கம் வழங்கப்படுகிறது, இது இரக்சியம் என்பதால் இதை வெளியில் காட்ட அனுமதிக்கப்படவில்லை. 1997 இல் இந்தப் பதக்கம் பற்றி தகவல் பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. அனைத்து பிணைக்கைதிகளும் சனவரி 20, 1981 அன்று விடுதலை செய்யப்பட்டனர். அன்று ரானல்ட் ரேகன் ஐக்கிய அமெரிக்காவின் நாற்பதாவது குடியரசுத் தலைவராக பொறுபேற்றார். இத்திரைப்படம் முன்னாள் குடியரசுத்தலைவர் சிம்மி கார்டரின் இந்த நிகழ்ச்சி பற்றிய பேச்சினுடன் முடிவடைகிறது.

விருதுகள்

விருதுகள் மற்றும் பரிந்துரைகளின் பட்டியல்
விருதுபகுப்புவிருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்முடிவு
85 ஆம் அகாதமி விருதுகள்[3]சிறந்த திரைப்படம்கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனிவெற்றி
சிறந்த துணை நடிகர்ஆலன் ஆர்கின்பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதைகிறிஸ் டெர்ரியோவெற்றி
சிறந்த திரை இயக்கம்வில்லியம் கோல்டன்பர்க்வெற்றி
சிறந்த இசை இயக்கம்எரிக் ஆடால் மற்றும் ஈதன் வான் டெர் ரையன்பரிந்துரை
சிறந்த இசை கலக்கம்ஜான் ரீட்ஸ், கிரெக் ரட்லாப் மற்றும் ஜோசே அந்தோனியோ கார்சியாபரிந்துரை
சிறந்த அசல் இசைஅலெக்ஸாண்டர் டெஸ்பிளாட்பரிந்துரை
அமெரிக்க திரைப்பட நிறுவன விருதுகள்ஆண்டின் சிறந்த திரைப்படங்கள்பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி, மற்றும் கிரான்ட் ஹெஸ்லவ்வெற்றி
AACTA சர்வதேச விருதுகள்[4]சிறந்த திரைப்படம்கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக் மற்றும் ஜியார்ஜ் குளூனிபரிந்துரை
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்பரிந்துரை
சிறந்த திரைக்கதைகிறிஸ் டெர்ரியோபரிந்துரை
பிரித்தானிய அகாதமி விருதுகள்[5]சிறந்த திரைப்படம்கிரான்ட் ஹெஸ்லவ், பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனிவெற்றி
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்வெற்றி
சிறந்த தழுவிய திரைக்கதைகிறிஸ் டெர்ரியோபரிந்துரை
சிறந்த நடிகர்பென் அஃப்லெக்பரிந்துரை
சிறந்த துணை நடிகர்ஆலன் ஆர்கின்பரிந்துரை
சிறந்த அசல் இயக்கம்அலெக்ஸாண்டர் டெஸ்பிளாட்பரிந்துரை
சிறந்த இயக்கம்வில்லியம் கோல்டன்பர்க்வெற்றி
திரை ஆலோசகர் தேர்வு விருதுகள்சிறந்த திரைப்படம்வெற்றி
சிறந்த துணை நடிகர்ஆலன் ஆர்கின்பரிந்துரை
சிறந்த நடிகர்பரிந்துரை
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்வெற்றி
சிறந்த தழுவிய திரைக்கதைகிறிஸ் டெர்ரியோபரிந்துரை
சிறந்த இயக்கம்வில்லியம் கோல்டன்பர்க்பரிந்துரை
சிறந்த பாட்டுஅலெக்ஸாண்டர் டெஸ்பிளாட்பரிந்துரை
டெட்டிராய்டு திரை ஆலோசகர் குழு விருதுகள்சிறந்த திரைப்படம்பரிந்துரை
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்பரிந்துரை
சிறந்த குழுபரிந்துரை
70 ஆம் கோல்டன் குளோப் விருதுகள்சிறந்த நாடக திரைப்படம்வெற்றி
சிறந்த துணை நடிகர்ஆலன் ஆர்கின்பரிந்துரை
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்வெற்றி
சிறந்த திரைக்கதைகிறிஸ் டெர்ரியோபரிந்துரை
சிறந்த அசல் பாட்டுஅலெக்ஸாண்டர் டெஸ்பிளாட்பரிந்துரை
லாஸ் ஏஞ்சலஸ் திரை ஆலோசக குழுசிறந்த Screenplayகிறிஸ் டெர்ரியோவெற்றி
தேசிய திரைப்பட விருதுகள் 2012சிறப்பு மைல்கள்பென் அஃப்லெக்வெற்றி
நெவெடா திரை ஆலோசக குழுசிறந்த திரைப்படம்வெற்றி
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்வெற்றி
நியூ யார்க் இணைய திரை ஆலோசக குழுசிறந்த குழுவெற்றி
பீனிக்ஸ் திரை ஆலோசக குழுசிறந்த பத்து திரைப்படங்கள்வெற்றி
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்பரிந்துரை
சிறந்த நடிப்புபரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதைவெற்றி
சிறந்த திரை இயக்கம்வெற்றி
ராஜர் இபர்ட்ஆண்டின் சிறந்த திரைப்படம்வெற்றி
அமெரிக்க இயக்குனர்கள் குழுசிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்வெற்றி
அமெரிக்க தயாரிப்பாளர்கள் குழுசிறந்த திரைப்படம்பென் அஃப்லெக், ஜியார்ஜ் குளூனி மற்றும் கிரான்ட் ஹெஸ்லவ்வெற்றி
19 ஆம் திரைப்பட நடிகர்கள் குழு விருதுகள்சிறந்த நடிகர்ஆலன் ஆர்கின்பரிந்துரை
சிறந்த குழுநடிப்புக் குழுவெற்றி
சான் டியேகோ திரை ஆலோசக குழுசிறந்த திரைப்படம்வெற்றி
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்வெற்றி
சிறந்த துணை நடிகர்ஆலன் ஆர்கின்பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதைகிறிஸ் டெர்ரியோவெற்றி
சிறந்த இயக்கம்வில்லியம் கோல்டன்பர்க்வெற்றி
சிறந்த திரை தயாரிப்புஷாரன் ஷெய்மோர்பரிந்துரை
சிறந்த பாட்டுஅலெக்ஸாண்டர் டெஸ்பிளாட்பரிந்துரை
சிறந்த நடிப்புபரிந்துரை
சாட்டில்லய்ட்டு விருதுகள்திரைப்படம்பரிந்துரை
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதைகிறிஸ் டெர்ரியோபரிந்துரை
சிறந்த அசல் பாட்டுஅலெக்ஸாண்டர் டெஸ்பிளாட்வெற்றி
புனித லூயிஸ் திரை ஆலோசக விருதுகள்சிறந்த திரைப்படம்வெற்றி
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்வெற்றி
சிறந்த துணை நடிகர்ஆலன் ஆர்கின்பரிந்துரை
ஜான் குட்மேன்பரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதைபரிந்துரை
வாஷிங்டன் திரை ஆலோசக குழு விருதுகள்சிறந்த திரைப்படம்பரிந்துரை
சிறந்த இயக்குனர்பென் அஃப்லெக்பரிந்துரை
சிறந்த துணை நடிகர்ஆலன் ஆர்கின்பரிந்துரை
சிறந்த நடிப்புக் குழுபரிந்துரை
சிறந்த தழுவிய திரைக்கதைபரிந்துரை
அமெரிக்காவின் எழுத்தாளர்கள் குழுசிறந்த தழுவிய திரைக்கதைகிறிஸ் டெர்ரியோவெற்றி

மேற்கோள்கள்

குறிப்புகள்
மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்