ஆராதனா (1969 திரைப்படம்)

ஆராதனா(Aradhana) என்பது சக்தி சமந்தா இயக்கி 1969இல் வெளிவந்த இந்திய காதல் திரைப்படமாகும், இதில் ஷர்மிளா தாகூர் மற்றும் ராஜேஷ் கன்னா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் 1946இல் வெளிவந்த டூ ஈச் ஹிஸ் ஓன் என்றப் படத்தின் அடிப்படையிலானது . இது 17 வது பிலிம்பேர் விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருது பெற்றது. ஷர்மிளா தாகூர் தனது முதல் பிலிம்பேர் சிறந்த நடிகை விருதை வென்றார் .[7][8] இந்தத் திரைப்படம் முதலில் இந்தி-உருது ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.[9] பின்னர் பெங்காலியில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஆராதனா மிகப்பெரிய வெற்றி பெற்ற பின்னர் தமிழில் சிவகாமியின் செல்வன் (1974) என்ற பெயரிலும், தெலுங்கில் கன்னவாரி கலலு (1974). என்ற பெயரிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்த இரு பதிப்புகளிலும் நடிகை வாணிஸ்ரீ ஷர்மிளா தாகூரின் பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.[10] 1969 மற்றும் 1971 க்கு இடையில் ராஜேஷ் கன்னாவின் 17 தொடர்ச்சியான வெற்றிகரமான படங்களில் இந்த படமும் ஒன்றாக மதிப்பிடப்பட்டது. 1969 முதல் 1971 வரை அவர் கொடுத்த 15 தனி வெற்றிகளில் மாராயதா மற்றும் ஆண்டாஸ் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்த இப்படமும் சேர்ந்தது.[11] ஆராதனா இந்தியா மற்றும் சோவியத் யூனியனில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.[12][d]

'ஆராதனா'
இயக்கம்சக்தி சமந்தா
தயாரிப்புசக்தி சமந்தா
கதைசச்சின் போவ்மிக்
ஆனந்த் பக்சி பாடல்கள்
இசைஇசை & பின்னணி இசை
எஸ். டி. பர்மன்
ரூப் தேரா மஸ்தானா
கிஷோர் குமார்
பாடல் ஒலிப்பதிவாளர் & உதவி இசை இயக்குனர்:
ராகுல் தேவ் பர்மன்
நடிப்புஷர்மிளா தாகூர்
ராஜேஷ் கன்னா
சுஜித் குமார்
ஃபரீடா ஜலால்
அபி பட்டாச்சாரியா
ஒளிப்பதிவுஅலோக் தாஸ்குப்தா
படத்தொகுப்புசஹரி புத்திராஜ்
விநியோகம்சக்தி பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 7, 1969 (1969-11-07)
ஓட்டம்169 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொத்த வருவாய்17.85 கோடி[d]

கதைச்சுருக்கம்

இந்திய விமானப்படை அதிகாரி அருண் வர்மா (ராஜேஷ் கன்னா), மற்றும் விமான ஓட்டி மதன் (சுஜித் குமார்) ஆகிய இருவரும் ஒரு திறந்த ஜீப்பில் "மேரே சப்னோ கி ராணி" என்ற பாடலுடன் அறிமுகமாகிறார்கள், அதே சமயத்தில் டாக்டர் கோபால் திரிபாதியின் (பகாரி சன்யால்) மகளான வந்தனா (ஷர்மிளா தாகூர்) ஒரு ரயில் நிலையத்தில் இருந்து அவரைப் பார்க்கிறார். இருவருக்குமான காதல் ஒரு இரகசிய திருமணத்தில் முடிகிறது.

விரைவில், அருண் ஒரு விமான விபத்தில் இறந்துவிடுகிறார், அப்போது வந்தனா கர்ப்பமாக உள்ளார். அருணுடானான முறையற்ற இந்தத் திருமணத்தை அவருடைய குடும்பம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. வந்தனாவின் தந்தை இறந்த பினர் வந்தனா தனது தயாரை விட்டுப் பிரிகிறார். இதற்கிடையில் வந்தனாவிற்கு ஒரு மகன் பிறக்கிறான், ஆனால் குழந்தையற்ற ஒரு தம்பதிக்கு குழந்தையை தத்தளிக்க வந்தனா நிர்பந்திக்கப்படுகிறார். அந்த பையனுக்கு சூரஜ் என்ற பெயரிடுகிறார். ஷியாம் ( மன்மோகன்) என்ற ஒருவரிடம் வந்தனா வேலைக்கு சேர்கிறாள், அவர் வந்தனாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார், வந்தனாவை காப்பாற்றுவதற்காக அவரை சூரஜ் அடிக்க அவர் இறந்து போகிறார். காவலர்கள் வருகையின் போது, சூரஜ் அவ்விடத்தைவிட்டு ஓடிவிடுகிறான். கொலைக் குற்றம் சாட்டப்பட்டு வந்தனா கைது செய்யப்படுகிறாள். வளர்ந்து வரும் சூரஜ் இந்த சம்பவத்தை மறந்து விடுகிறான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, சிறையில் இருந்து விடுதலையான வந்தனாவை சிறையதிகாரி (மதன் பூரி) தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மகள் ரேணுவிற்கு (ஃபரிடா ஜலால்) அறிமுகப்படுத்துகிறார். வந்தனாவும் அவளுடன் நட்பாகிறார். ரேணு சூரஜை காதலிப்பதை வந்தனா அறிந்து கொள்கிறாள். சூரஜ் அவனது தந்தை விரும்பியதைப் போலவே, ஒரு விமானப்படை அதிகாரியாக இருக்கிறான். இதன் பின்னர் சூரஜ் தனது தாயாரை சந்திக்கிறானா? என்பது படத்தின் மீதிக்கதை சொல்கிறது.

நடிகர்கள்

  • வந்தனா திரிபாதியாக ஷர்மிளா தாகூர்
  • ராஜேஷ் கன்னா விமானப்படை தளபதி அருண் வர்மா / சூரஜ் பிரசாத் சக்ஸேனா என்ற இரு வேடங்களில்
  • சுஜித் குமார்
  • அசோக் குமார்
  • கோபல் திரிபாதியாக பஹரி சன்யால்
  • அனிதா குஹா திருமதி. பிரசாத் சக்ஸேனாவாக
  • ராம் பிரசாத் சக்சேனாவாக அபி பட்டாச்சார்யா
  • மதன் பூரி ஜெயிலராக
  • அசித் சென் , திக்காராமாக
  • ரேணுவாக ஃபரிடா ஜலால்
  • பிரகாஷாக சுபாஷ் காய் (சூரஜின் சக நண்பர்)

தயாரிப்பு

சச்சின் போவ்மிக் கதையில் இந்த படம் வெளிவந்தது. இப்படத்தின் கதை 1946 இல் வெளிவந்த த டோவ் ஹிஸ் ஓன் என்றத் திரைப்படத்தின் அடிப்படையிலானது. மூன்று நிமிடம் 30 விநாடிகளுக்கும் மேல் இப்படத்தில் இடம்பெற்ற "ரூப் தேரா மஸ்தானா" என்ற பாடல், ஒரே காட்சியமைப்பில் படமாக்கப்பட்டது.[13]

ஒலிப்பதிவு

ஆராதனா
ஒலிப்பதிவு ஆராதனா
வெளியீடு1969
இசைப் பாணிதிரைப்பட ஒலிப்பதிவு
மொழிஇந்தி
இசைத்தட்டு நிறுவனம்இ.எம்.ஐ ரெக்கார்ட்ஸ்

எஸ். டி. பர்மன் இந்த படத்தின் ஒலிப்பதிவை மேற்கொண்டார், ஆனந்த் பக்சி மற்றும் இயக்குனர் சச்சின் தனது மகன் ராகுலுடன் இணைந்து இப்படத்திற்கான பாடல்களை எழுதியுள்ளனர். மேலும் பாடல்களை லதா மங்கேஷ்கர், ஆஷா போன்ஸ்லே, முகம்மது ரஃபி ஆகியோர் பாடியிருந்தனர். ரஃபி, கிஷோர் குமார் மற்றும் எஸ். டி. பர்மன் ஆகியோர் சேர்ந்து "ரூப் தேரா மஸ்தானா" என்ற பாடலை பாட, கேர்சி லார்ட், என்பவர் துருத்தியை இசைக்க, ஹோமி முல்லன் டக்கியை' இசைக்க மற்றும் மனோகரி சிங் சாக்ஸபோன் வாசித்திருந்தனர்.[14][15]

#பாடல்பாடியோர்நீளம்
1. "ரூப் தேரா மஸ்தானா"  கிஷோர் குமார் 3:30
2. "பாகோன் மேன் பகர் ஹை"  முகமது ரபி, லதா மங்கேஷ்கர்  
3. "சநத ஹை து மேரா சூரஜ் ஹை து"  லதா மங்கேஷ்கர்  
4. "மேரே சப்னோ கி ராணி"  கிஷோர் குமார்  
5. "குன் குன ரஹே ஹை பன்வரே"  முகமது ரபி, ஆஷா போஸ்லே  
6. "கோரா காக்ஸ் தா யே மன் மேரா"  கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர்  
7. "சபள் ஹோகி தேரி ஆராதனா"  எஸ். டி. பர்மன்  

விருதுகள்

1969 பிலிம்ஃபேர் விருதுகள் [16]

தாக்கம்

ஆராதனா பொதுவாக இந்தியர்கள் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இது போன்ற படங்களைத் தயாரிக்க பலர் ஈர்க்கப்பட்டனர், இவர்களில் பாலிவுட் நடிகர் டாம் ஆல்டர் அளித்த ஒரு பேட்டியில் ஆராதனாவில் ராஜேஷ் கன்னாவை பார்த்து தான் ஈர்க்கப்பட்டதாகவும், பின்னர், 1970 இல் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் சேர்ந்த்ததாகவும் தெரிவித்தார்.[17][18][19]

குறிப்பு பட்டியல்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்