ஆன்டன் வான் லீவன்ஹூக்

நுண்ணுயிரியலின் தந்தை என்று அழைக்கப்படும் டச்சு விஞ்ஞானி மற்றும் முதல் நுண்ணோக்கி நிபுணர்கள

ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek, 1632-1723), நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண்ணோக்கிகளை உருவாக்கியவரும் ஆவார். இவரை நுண்ணுயிரியலின் தந்தை என்பர். இவரே முதலாவது நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் நுண்ணோக்கிகளை களை மேம்படுத்தியதுடன், நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படும் ஒருகல விலங்குகளை முதன் முதலில் அவதானித்தவரும் இவரே. அவர், 247க்கும் மேற்பட்ட நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கினார்; அவற்றுள் சில, 270 மடங்குக்கும் அதிகமாக உருப்பெருக்கம் செய்யும் திறன் பெற்று இருந்தன. பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், ஸ்பெர்மடோசோவாக்கள், தசைநார்கள், குருதிச் சுற்றோட்டத்தொகுதியில், மயிர்த்துளைக்குழாய்களூடாக, குருதியின் அசைவு என்பவற்றை நுண்ணோக்கியில் அவதானித்து அறிவித்தவரும் இவரே. இரத்த நாள ஓட்டம் பற்றிய விவரிப்பில், இரத்தச் சிவப்பு அணுக்களைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.[1][2][3]

ஆன்டன் வான் லீவன்ஹூக்
Antoni van Leeuwenhoek Edit on Wikidata
பிறப்பு24 அக்டோபர் 1632
டெல்ஃப்ட்
இறப்பு26 ஆகத்து 1723 (அகவை 90)
டெல்ஃப்ட்
பணிஉயிரியல் அறிஞர், இயற்பியலறிஞர், instrument maker, merchant, microbiologist, கணக்கர், பொருளாளர், நில அளவாய்வாளர், wine measurer
வாழ்க்கைத்
துணை/கள்
Barbara de Mey, Cornelia Swalmius
கையெழுத்து

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்