ஆச்சே சுனாமி அருங்காட்சியகம்

ஆச்சே சுனாமி அருங்காட்சியகம் (Aceh Tsunami Museum) இந்தோனேசியாவின் பண்டா ஆச்சே பகுதியில் அமைந்துள்ள , 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமி பேரழிவின் அடையாள நினைவூட்டலாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் ஆகும். அது ஒரு கல்வி மையமாகச் செயல்பட்டு வருகிறது. மீண்டும் சுனாமி வரும் நிலையில் அதனை எதிர்கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ள அவசரகால பேரழிவு தங்குமிடம் ஆகவும் அது அமைந்துள்ளது .[1]

வடிவமைப்பு

ஆச்சே சுனாமி அருங்காட்சியகம் இந்தோனேசிய கட்டிடக் கலைஞரான, தற்போது மேற்கு ஜாவாவின் ஆளுநராக உள்ள ரித்வான் காமில் என்பவரால் வடிவமைக்கப்பட்ட அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகம் 2,500 மீ 2 நான்கு அடுக்கு வடிவில் அமைந்துள்ளது. அதன் நீண்ட வளைந்த நிலையிலான சுவர்கள் ஜியாமெட்ரிக் வடிவுகளைக் கொண்டு மூடிய நிலையில் உள்ளது. உள்ளே, பார்வையாளர்கள் நுழையும்போது இரண்டு உயரமான சுவர்களுக்கு இடையில் இருண்ட பகுதி காணப்படும். அங்கே உள்ள குறுகிய நடைபாதை வழியாக பார்வையாளர்கள் நுழையும் வகையில் அமைந்துள்ளது. சுனாமியின் சத்தத்தையும் பீதியையும் அவர்கள் முன் கொண்டுவர வேண்டும் என்ற வகையில் அவை உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் உள்ள சுவர்களில் சமன் நடன நிகழ்ச்சி அங்கு சித்திரங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சமன் நடனத்தை ஆயிரம் கைகளின் நடனம் என்றும் கூறுவர். இந்தோனேசியாவின் மிகப் பிரசித்தி பெற்ற நடனங்களில் ஒன்றான இந்த நடனமானது ஆச்சே இன மக்களின் ஒரு குறியீட்டு சைகையாகும். அதில் வலிமை, ஒழுக்கம் மற்றும் மத நம்பிக்கைகள் போன்றவை அர்ப்பணிக்கப்பட்ட நிலையில் காணப்படும்.[2] மேலே இருந்து பார்க்கும் போது அங்கு அமைந்துள்ள, கூரையானது சுனாமியை ஒத்த வகையில் அமைந்துள்ளது. தரை தளம் சுனாமியிலிருந்து தப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சிறந்த முறையில் பொருத்தப்பட்ட பாரம்பரியமாக எழுப்பப்பட்ட ஆச்சே இன மக்களின் வீடுகளின் மாதிரியைக் கொண்டு அமைந்துள்ளது.[1]


சுனாமியாவில் பாதிக்கப்பட்டவர்களுடைய ஒப்புகை செலுத்துகின்ற வகையில் இந்த கட்டிடம் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் பெயர்கள் அருங்காட்சியகத்தின் உள் அறைகளில் சுவரில் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் மேலும் சுனாமியிலிருந்து தப்பித்த உள்ளூர் சமூகத்தின் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களின் பெயர்களும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன.[2]

இறந்தவர்களுக்கு ஒரு நினைவுச்சின்னமாக மட்டும் அது அமைதுவிடவில்லை. அதன் பங்கிற்கு மேலதிகமாக ஒரு சிறப்பு அங்கு காணப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகளிலிருந்து தஞ்சமடையும் இடத்தையும் இந்த அருங்காட்சியகம் வழங்கியுள்ளது என்பது முக்கியமானதாகும்.[2]

சேகரிப்புகள்

இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்களில் 2004 இந்தியப் பெருங்கடல் பூகம்பம் மற்றும் சுனாமியின் மின்னணு உருவகப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் மற்றும் பேரழிவிலிருந்து தப்பியவர்களின் கதைகளைக் கொண்ட கண்காட்சிகள் ஆகியவை அடங்கும்.[2]

பராமரிப்பு மற்றும் பயன்பாடு

ஆச்சே சுனாமி அருங்காட்சியகத்தினை நிர்வாகம் செய்வதற்கும், பயன்பாடு மேற்கொள்ளவும் தற்போதுள்ள நிதி ஆதாரம் போதுமான இல்லை.[3] இந்த அருங்காட்சியகம் "சுனாமி சொத்துக்கள்" என்று அழைக்கப்படுகின்ற, சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைந்த ஒரு நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கான துல்லியமான சட்ட உரிமை யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக இந்தோனேசிய அரசின் பல நிலைகளில் பல்வேறு வகையான சர்ச்சைகள் நிலவி வருகின்றன. 2009 ஆம் ஆண்டு முதலே இந்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டு முதல் இந்த அருங்காட்சியகம் அவ்வப்போது திறந்து காட்சிக்காக வைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்திற்கான ஆதரவு என்பதானது மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்