ஆசன்சோல் பெண்கள் கல்லூரி

ஆசன்சோல் பெண்கள் கல்லூரி (Asansol Girls' College) என்பது இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பாஸ்கிம் பர்தமான் மாவட்டத்தில் உள்ள ஆசன்சோலில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் இளங்கலை படிப்புகளை வழங்கும் இக்கல்லூரி, மேற்கு வங்கத்தின், ஆசன்சோலில் உள்ள காசி நஸ்ருல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]

ஆசன்சோல் பெண்கள் கல்லூரி
வகைஇளங்கலைக்கான பொதுக் கல்வி நிலையம்
உருவாக்கம்1950; 74 ஆண்டுகளுக்கு முன்னர் (1950)
சார்புகாசி நஸ்ருல் பல்கலைக்கழகம்; தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை
தலைவர்ஸ்ரீ மோலோய் கட்டக்
பொறுப்பாசிரியர்டாக்டர் சந்தீப் கே.ஆர்.
மாணவர்கள்1000 ♀ க்கும் மேற்பட்டவர்கள்
அமைவிடம்
Dr. Anjali Roy Sarani
, , ,
723304
,
23°41′07″N 86°56′44″E / 23.6853102°N 86.9454366°E / 23.6853102; 86.9454366
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.agc.ac.in
படிமம்:Asansol Girls' College logo.jpg
ஆசன்சோல் பெண்கள் கல்லூரி is located in மேற்கு வங்காளம்
ஆசன்சோல் பெண்கள் கல்லூரி
Location in மேற்கு வங்காளம்
ஆசன்சோல் பெண்கள் கல்லூரி is located in இந்தியா
ஆசன்சோல் பெண்கள் கல்லூரி
ஆசன்சோல் பெண்கள் கல்லூரி (இந்தியா)

வரலாறு

மேற்கு வங்கத்தின் தொழில்துறை பகுதியும் நிலக்கரி சுரங்கங்கள் நிறைந்த இப்பகுதியில் 1950 ஆம் ஆண்டில் இக்கல்லூரி நிறுவப்பட்டது.[2] அப்போதைய சுரங்க சுகாதார வாரிய மருத்துவர். லலித் மோகன் சென்னின் அயராத முயற்சிகள் மற்றும் அவரது மதிப்பிற்குரிய துணைவி திருமதி கமலா சென்னின் முயற்சியால், மணிமாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் வளாகத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. 1962 ஆம் ஆண்டு இது சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது [3] இந்த காரணத்திற்காக, உள்ளூர் மக்களால் மணிமாலா கல்லூரி என்று அறியப்பட்டாலும் அசன்சோல் பெண்கள் கல்லூரி அதன் அதிகாரப்பூர்வ பெயராக இருந்தது. நிறுவன தினத்தன்று, கல்லூரியிலிருந்து மணிமாலா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஊர்வலம் சென்று அதன் ஆரம்ப நிலைக்கு மரியாதை செலுத்துகிறது.

ஆரம்பத்தில், இக்கல்லூரி கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பின்னர் பர்த்வான் பல்கலைக்கழகம் தொடங்கிய பிறகு அந்த பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது .மீண்டும் 24 ஜூன் 2015 முதல், இக்கல்லூரி அசன்சோலின் காசி நஸ்ருல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இணைப்புகள்

அங்கீகாரம்

இக்கல்லூரி பல்கலைக்கழக மானியக் குழுவால் (UGC) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [4] இந்தக் கல்லூரி டிசம்பர் 2016 இல் 'ஏ லெவல்' சான்றிதழுடன் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) மறு அங்கீகாரம் பெற்றுள்ளது [5] இக்கல்லூரி 2000 ஆம் ஆண்டில் பொன்விழா கொண்டடியுள்ளது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்