ஆக்ரோஷ் (1980 திரைப்படம்)

ஆக்ரோஷ் (Aakrosh) என்பது 1980 ஆம் ஆண்டு வெளியான இந்திய இந்தி மொழியில் வெளியான சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நாடகத் திரைப்படமாகும். இயக்குநர் கோவிந்த் நிஹலானியின் அறிமுகத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது விஜய் டெண்டுல்கரால் எழுதப்பட்டது. [1] நசிருதீன் ஷா, ஓம் பூரி மற்றும் அம்ரிஷ் பூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பரவலான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. 8வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழாவில் தங்க மயில் (சிறந்த திரைப்படம்) விருது மற்றும் சிறந்த இந்தி திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது மற்றும் பல கௌரவங்களைப் பெற்றது.[2]

ஆக்ரோஷ்
இயக்கம்கோவிந்த் நிகலானி
தயாரிப்புதேவி தத்
இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம்
கதைவிஜய் தெண்டுல்கர்
இசைஅஜீத் வர்மன்
நடிப்புநசிருதீன் ஷா
சுமிதா பட்டீல்
அம்ரீஷ் பூரி
ஓம் பூரி
ஒளிப்பதிவுகோவிந்த் நிகலானி
படத்தொகுப்புகேசவ் நாயுடு
விநியோகம்கிர்ஷ்னா மூவீஸ் என்டர்பிரைசஸ்
வெளியீடு1980 (1980)
ஓட்டம்144 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு0.80 கோடி (2020 இல் நிகர மதிப்பு 14 crore or US$1.7 மில்லியன்)
மொத்த வருவாய்1.22 கோடி (2020 இல் நிகர மதிப்பு 21 crore or US$2.6 மில்லியன்)

அர்த் சத்யா மற்றும் தாமஸ் போன்ற பிற முக்கிய மாற்றுத் திரைப்படங்களில் வெளிப்படுத்தப்பட்ட விதத்தில் மனித கோபத்தின் இருண்ட மற்றும் பயமுறுத்தும் உண்மையான சித்தரிப்புகளுக்காக நிஹலானி நன்கு அறியப்பட்டார். [3] ஆறு பதின்ம ஆண்டுகளாக இந்தியத் திரைப்படத் துறையை வடிவமைத்த 60 படங்களில் ஆக்ரோஷ் பட்டியலிடப்பட்டுள்ளது.

கதைக்களம்

நில உரிமையாளர்கள் மற்றும் முதலாளிகளின் அடக்குமுறையை எதிர்கொள்ளும் அன்றாடக் கூலியாகப் பணிபுரியும் ஒரு விவசாயியைப் பின்தொடர்கிறது கதை. கதை நாயகனான விவசாயியின் மனைவி (ஸ்மிதா பாட்டீல்), முதலாள் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். பின்னர், அவர் செய்யாத குற்றத்திற்காக அவரைக் கைது செய்யப்படுகிறார். அவமானம் தாங்காமல் கூலி விவசாயியின் மனைவி தற்கொலை செய்து கொள்கிறார்.

விவசாயியின் தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்காக காவல்துறை அவரை வழிக்காவலுடன் இறுதிச் சடங்கிற்கு அழைத்துச் செல்கிறது. அவர் எரியும் இறுதிச் சடங்கின் அருகே நின்று கொண்டிருக்கும்போது, முதலாள் தனது இளம்வயதுடைய சகோதரியின் மீது காமப் பார்வையை வீசுவதை அவர் கவனிக்கிறார். ஒரு நிரந்தரமான பலியாக அவளது தவிர்க்க முடியாத விதியை நொந்துகொண்டு, அவன் ஒரு கோடரியைப் பிடித்து, தானும் தனது மனைவியும் துன்பப்பட்டதைப் போன்று தன் தங்கையும் துன்பப்படக்கூடாது என்று தன் சகோதரியின் தலையை வெட்டுகிறான். இந்த அவநம்பிக்கையான மற்றும் சோகமான செயலுக்குப் பிறகு, உரிமைகள் மறுக்கப்பட்ட மனிதன் மீண்டும் மீண்டும் வானத்தை நோக்கி அலறுகிறான்.

மையக்கருத்து மற்றும் தாக்கங்கள்

உள்ளூர் செய்தித்தாளின் பக்கம் 7-ல் வெளியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படும் இந்தப் படம், நீதித்துறையில் உள்ள ஊழல் மற்றும் திறன் வாய்ந்தவர்கள் மற்றும் சக்தி வாய்ந்தவர்களால் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவது பற்றிய கடுமையான நையாண்டியாக இத்திரைப்படம் இருந்தது. [4]

பிரபல நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கரால் வன்முறை பற்றிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு  எழுதப்பட்ட ஷியாம் பெனகலின் நிஷாந்த் (1974) கோவிந்த் நிஹலானியின் இத்திரைப்படம் மற்றும் இதே கூட்டணியின் அர்த் சத்யா (1983) ஆகியவை ஒரு வெற்றித் தொடராக அமைந்தன.

இங்கே பாதிக்கப்பட்டவர், அதீத அடக்குமுறை மற்றும் மனிதாபிமானத்தை மீறுவதால் மிகவும் அதிர்ச்சியடைந்தவராகக் காட்டப்படுகிறார். கிட்டத்தட்ட படத்தின் நீளத்தில் அவர் ஒரு வார்த்தை கூட பேசுவதாகக் காட்டப்படவில்லை. மேலும், அவர் ஒரு திகைப்பூட்டும் தோற்றத்துடன் காட்டப்பட்டுள்ளார். இருப்பினும், பின்னர் அவர் தனது சொந்த ஆத்திரத்தை வெளிப்படுத்த அதே வன்முறையை ஒரு கருவியாக வெளிப்படுத்துகிறார். [5]

படத்தின் முடிவில், பாதிக்கப்பட்டவரின் குரலை நாம் இரண்டாவது முறையாகக் கேட்கிறோம். (முதலாவது நினைவுமீட்சிக் காட்சியில், அவர் தனது மனைவியைக் காப்பாற்ற செய்த முயற்சிக்கிகள் வீணாகிய போது)

நடிகர்கள்

  • வழக்கறிஞர்பாஸ்கர் குல்கர்னியாக நசிருதீன் ஷா,
  • லஹன்ய பிகுவாக ஓம் பூரி
  • நாகி பிகுவாக சுமிதா பாட்டீல்
  • அம்ரிஷ் பூரி, துசானே, அரசு வழக்கறிஞர்
  • போன்ஸ்லே, ஜில்லா பரிஷத் தலைவராக மோகன் ஆகாஷே
  • மகேஷ் எல்குஞ்ச்வார் சமூக சேவகர்
  • பிகுவின் தந்தையாக நானா பால்சிகர்
  • வன ஒப்பந்ததாரர் மோராக அச்யுத் போட்தார்,
  • ரஃபியனாக தீபக் ஷிர்கே
  • பிகுவின் சகோதரியாக பாக்யஸ்ரீ கோட்னிஸ்
  • லாவ்னி நடனக் கலைஞராக ரீமா லகூ
  • டாக்டர் வசந்த் எம். பாட்டீலாக அரவிந்த் தேஷ்பாண்டே

மேற்கோள்கள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்