அறுவை சிகிச்சை உபகரணங்கள்

அறுவை சிகிச்சை உபகரணங்கள் அல்லது அறுவைசிகிச்சைக் கருவிகள் (Surgical instrument) என்பவை அறுவை சிகிச்சை செய்யப்படும்போது பயன்படுத்துவதற்கென்றே தயாரிக்கப்பட்டவை ஆகும். முக்கியமாக திசு மாற்றத்தின் போதும் அல்லது அவற்றில் ஏதேனும் குறைகள் உள்ளனவா என்பதனை அறியவும் இவை பயன்படுகின்றன. சில உபகரணங்கள் பொதுவான அறுவை சிகிச்சைகளின் போது மட்டும் பயன்படும் வகையில் உருவாக்கப்படுகிறன. மற்ற சில உபகரணங்கள் மிக முக்கியமான அறுவை சிகிச்சைகளின் போது மட்டுமே பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. உபகரணங்களுக்குப் பெயரிடும் முறை (nomenclature) அவைகள் உபயோகப்படுத்தப்படும் முறைகளின்படி (உதாரணமாக, ஹெமோஸ்டேட் (scalpel, hemostat)), அல்லது அதனைக் கண்டுபிடித்தவர்களின் பெயர்களைக் (உதாரணமாக, கோச்சர் ஃபோர்ப்ஸ் [1]) அல்லது மேற்கொள்ளப்படும் அறுவைசிகிச்சையுடன் தொடர்புடைய அறிவியல் பெயராக (டிரக்கோட்டமி அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கருவி ’டிரக்கியோடோம்’) அமைகிறது. அறுவை சிகிச்சை கையாளுதல் என்பது முறையான அறுவைசிகிச்சை உபகரணங்கள் மற்றும் உதவியாளர்கள் (செவிலியர்கள், கதிர்வீச்சு நிபுணர்) கொண்டு நடத்துவது ஆகும்.[2]

அறுவைசிகிச்சை உபகரணங்கள்

வகைபடுத்துதல்

  • க்ராஸ்பர்ஸ்[3] (இடுக்கிகள் போன்றவை)
  • பற்றுக்கவ்வி மற்றும் தடை செய் கருவி (இரத்த மாற்று சிகிச்சை)
  • பின்னுக்கு இழுக்கும் கருவி ( தோல் மற்றும் விலா எலும்பு சிகிச்சை)
  • உறிஞ்சும் கருவி
  • மூடும் கருவி (சர்ஜிகள் ஸ்டேப்ளர்ஸ்)
  • மருந்து உட்செலுத்தும் ஊசி
  • துளையிடும் கருவி
  • கிடுக்கிமானி
  • உள்நோக்கு கருவி (எண்டோஸ்கோப்)
  • அளவிடும்கருவி (வரைகோல்)

சான்றுகள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்