அரவிந்த் (நிறுவனம்)

அரவிந்த் நிறுவனம் ((Arvind Limited) (முன்னர் அரவிந்த் ஆலைகள்) (formerly Arvind Mills) என்பது ஒரு நெசவு உற்பத்தியாளர் மற்றும் லால்பாய் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். இதன் தலைமையகம் இந்தியாவின் குசராத் மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் நரோடா என்ற இடத்தில் உள்ளது. மேலும், இது சாண்டேஜில் (கலோலுக்கு அருகில்) தனது உற்பத்தி அலகுகளைக் கொண்டுள்ளது . இந்நிறுவனம் பருத்தி சட்டை, டெனிம், பின்னல் மற்றும் கால்சராய் (காக்கி) துணிகளை உற்பத்தி செய்கிறது. இது 2011 ஆம் ஆண்டில் மேம்பட்ட பொருட்கள் பிரிவைத் தொடங்கியபோது தொழில்நுட்ப நெசவுகளிலும் இறங்கியது. [3] இது இந்தியாவின் மிகப்பெரிய டெனிம் உற்பத்தி நிறுவனமாகும்.

அரவிந்த்
நிறுவுகை1931
தலைமையகம்அகமதாபாத், இந்தியா
முதன்மை நபர்கள்சஞ்சய் லால்பாய் (தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்), புனித் லால்பாய் (நிர்வாக இயக்குநர்), குலின் லால்பாய் (நிர்வாக இயக்குநர்),
தொழில்துறைகூட்டமைப்பு
உற்பத்திகள்டெனிம், பின்னல், நெசவு, பொறியியல், சில்லறை விற்பனை, தொலைத் தொடர்பு, மேம்பட்ட பொருள், வேளாண் வணிகம், மனை வணிகம், அரவிந்த் கடை
வருமானம்5,407.26 கோடி (US$680 மில்லியன்) (2016)[1]
நிகர வருமானம்318.85 கோடி (US$40 மில்லியன்) (2016)
பணியாளர்25,620[2]
தாய் நிறுவனம்லால்பாய் குழுமம்
இணையத்தளம்www.arvind.com

அரவிந்த் மற்றும் லால்பாய் குழுமத்தின் தற்போதைய தலைவரும் நிர்வாக இயக்குநராக சஞ்சய்பாய் லால்பாய் இருக்கிறார். 1980 களின் முற்பகுதியில், இவர் 'ரெனோ-பார்வை'க்கு தலைமை தாங்கினார். இதன் மூலம் நிறுவனம் டெனிமை உள்நாட்டு சந்தையில் கொண்டு சென்றது. இதனால் இந்தியாவில் ஜீன்ஸ் ஆடைப் புரட்சியைத் தொடங்கியது. [4] இன்று அது தனது சொந்தப் பொருட்களான பிளையிங் மெஷின், நியூபோர்ட் மற்றும் எக்ஸ்காலிபர் மற்றும் அரோ, டாமி கில்பிகர் மற்றும் கால்வின் கிளீன் போன்ற சர்வதேச பொருட்களுக்கு அதன் நாடு தழுவிய சில்லறை வலைப்பின்னல் மூலம் உரிமம் வழங்கப்பட்டது. அர்விந்த் மூன்று ஆடை மற்றும் ஆபரணங்கள் சில்லறை சங்கிலித் தொடர்களை நடத்துகிறது . அர்விந்த் ஸ்டோர், அன்லிமிடெட் மற்றும் மெகாமார்ட் இது நிறுவனத்தின் பொருட்களைக் கொண்டுள்ளது.

நிதி மறுசீரமைப்பு

1990களின் நடுப்பகுதியில், மற்ற பருத்தி துணிகள் மெதுவாக டெனிமின் தேவையை மாற்றியமைத்திருந்தாலும், நிறுவனம் அதன் டெனிம் திறனை பெருமளவில் விரிவுபடுத்தியது. இந்த விரிவாக்கத் திட்டத்திற்கு இந்திய மற்றும் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் கடன்கள் நிதியளிக்கப்பட்டன. டெனிம் தேவை குறைந்து வந்ததால், நிறுவனம் கடன்களை திருப்பிச் செலுத்துவது கடினமாக இருந்தது. இதனால் கடன்களுக்கு வட்டி சுமை அதிகரித்தது. 1990களின் பிற்பகுதியில், நிறுவனம் அதன் கடன் சுமை காரணமாக நிதி சிக்கல்களை எதிர்கொண்டது. இதன் விளைவாக குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டன. [5]

நிறுவனம் பிப்ரவரி 2001 இல் எடுக்கப்பட்ட நீண்ட கால கடன்களுக்கான கடன் மறுசீரமைப்பு திட்டத்தை கொண்டு வந்தது. பல உள்நாட்டு மற்றும் சர்வதேச கடன் வழங்குநர்களை உள்ளடக்கிய இந்த சிக்கலான நிதி மறுசீரமைப்பு பயிற்சி, இந்தியாவில் ஒரு முக்கிய ஆய்வாகவும் ஒரு வழக்கு ஆய்வாகவும் கருதப்படுகிறது.

புகைப்படங்கள்

மேலும் காண்க

  • கஸ்தூர்பாய் லால்பாய்

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அரவிந்த்_(நிறுவனம்)&oldid=3730208" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்