அம்முவாகிய நான்

பத்மாமகன் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அம்முவாகிய நான் ( Ammuvagiya Naan ) என்பது 2007 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும். இது பத்மமகன் இயக்கத்தில் ஆர். பார்த்திபன் மற்றும் பாரதி நடித்திருந்தனர். படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளனர்.[1] இப்படம் செப்டம்பர் 2007 இல் வெளியாகி வெற்றி பெற்றது.[2] [3]

அம்முவாகிய நான்
இயக்கம்பத்மாமகன்
தயாரிப்புசிறீனிவாச ரெட்டி
கதைபத்மாமகன்
கதைசொல்லிபத்மாமகன்
இசைசபேஷ் முரளி
நடிப்புபார்த்திபன்
பாரதி
மகாதேவன்
சாரி
ஒளிப்பதிவுஎம். எஸ். பிரபு
படத்தொகுப்புசுரேஷ் அரசு
விநியோகம்பார்க்கர் பிரதர்ஸ்
வெளியீடு2 செப்டம்பர் 2007 (2007-09-02)
ஓட்டம்122நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

பாலியல் தொழிலாளியின் வீட்டில் வளர்க்கப்படும் அனாதையான அம்முவை ( பாரதி ) சுற்றியே படம் சுழல்கிறது. அத்தகைய சூழ்நிலையில் வளர்ந்த அவள், உலகின் பழமையான தொழிலின் மீது மோகத்தை வளர்த்துக் கொள்கிறாள். கௌரிசங்கர் ( ஆர். பார்த்திபன் ) என்ற எழுத்தாளனை அவள் சந்திக்கிறாள். அவர் ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு புதினத்தை எழுத அவளது இடத்திற்கு வருகிறான். அவளுடைய குழந்தைத்தனமான அப்பாவித்தனம் கௌரிசங்கரால் ஈர்க்கப்பட்டு அவளை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறான். கௌரிசங்கரின் அன்பும் அக்கறையும் அம்முவிடம் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. குடும்பத்தின் மதிப்பையும் ஒற்றுமையின் பிணைப்பையும் அவள் புரிந்துகொள்கிறாள். கௌரிசங்கர் தனது அம்முவாகிய நான் என்றா புதினத்தை முடித்து, அதற்கு தேசிய விருதை எதிர்பார்க்கிறான். ஒரு இலக்கிய சங்கத்தின் தலைவர் ( மகாதேவன் ) வடிவில் விதி ஒரு கொடூரமான செயலைச் செய்கிறது. அமுவாகிய நானுக்கு தேசிய விருதை உறுதி செய்வதற்காக அம்முவிடம் ஒரு இரவு தங்குவதற்கு பேரம் பேசுகிறான். இறுதியில், அம்மு இலக்கியச் சங்கத்தின் தலைவரைக் கொன்றுவிடுகிறாள்.

நடிகர்கள்

படத்திற்கு சபேஷ்-முரளி இசையமைத்துள்ளனர்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அம்முவாகிய_நான்&oldid=4000158" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்