அமெரிக்கன் மேட் (திரைப்படம்)

அமெரிக்கன் மேட் என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நகைச்சுவையும், சண்டைக் காட்சிகளுமுள்ள திரைப்படம் ஆகும். இப்படத்தினை இயக்குனர் டக் லிமன் இயக்கியுள்ளார். கேரி சுபினெல்லி, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். டாம் குரூஸ், டோம்னால் க்ளீசன், சாரா ரைட், அலெசான்ட்ரோ எட்டா, மொரிசியோ மெசியா, காலேப் லாண்ட்ரி சோன்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். செசி பிளெமன்சு . இது சிஐஏவுக்காகப் பறந்து, 1980களில் மெடலின் கார்டலுக்கு போதைப்பொருள் கடத்தல்காரனாக மாறிய முன்னாள் TWA பைலட் பேரி சீலின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வினைக் கொண்டு, இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டது. .

அமெரிக்கன் மேட் (திரைப்படம்)
இயக்கம்Doug Liman
தயாரிப்பு
  • Brian Grazer
  • Brian Oliver
  • Doug Davison
  • Kim Roth
  • Ray Angelic
  • Tyler Thompson
கதைGary Spinelli
இசைChristophe Beck
நடிப்பு
  • Tom Cruise
  • Domhnall Gleeson
  • Sarah Wright Olsen
  • Jesse Plemons
  • Caleb Landry Jones
ஒளிப்பதிவுCésar Charlone
படத்தொகுப்புAndrew Mondshein
கலையகம்
  • Cross Creek Pictures
  • Imagine Entertainment
  • Quadrant Pictures
  • Vendian Entertainment
  • Hercules Film Fund
விநியோகம்Universal Pictures
வெளியீடுசெப்டம்பர் 29, 2017 (2017-09-29)
ஓட்டம்115 minutes[1]
நாடுUnited States
மொழிEnglish
ஆக்கச்செலவு$50 million[2]
மொத்த வருவாய்$134.9 million[2]

இப்படம் முதலில் தைவானில் ஆகஸ்ட் 18, 2017 அன்று வெளியிடப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் செப்டம்பர் 29, 2017 அன்று வெளியிடப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் தி போர்ன் ஐடெண்டிட்டிக்குப் பிறகு, யுனிவர்சல் பிக்சர்ஸால் வெளியிடப்பட்ட லிமன் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் 2D, IMAX திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்பட்டது.[3] இது உலகளவில் $134 மில்லியன் வசூலித்தது. மேலும், நடிகர் டாம் குரூசின் செயல்திறனைப் பாராட்டும் விமர்சகர்களிடமிருந்து, பொதுவாக நேர்மறையான விமர்சனங்களை, இத்திரைப்பட நடிப்பிற்க்காகப் பெற்றார்.[4]

தாயரிப்பு

2013 கோடையில், திரைக்கதை எழுத்தாளர் கேரி சுபினெல்லி உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அமெரிக்கன் மேட்டின் போனஸ் அம்சம் குறித்து ஸ்பினெல்லி கூறினார்: இந்தத் திரைப்படம் முதலில் மேனா என்று பெயரிடப்பட்டது மற்றும் 2014 ஆம் ஆண்டில் ஆலிவுட்டில் தயாரிக்கப்படாத சிறந்த திரைக்கதைகளைக் காண்பிக்கும் ஒரு கணக்கெடுப்பான தி பிளாக் லிஸ்டில் இடம்பெற்றது.[5] ஜனவரி 14, 2015 அன்று, டாம் குரூஸ் மற்றும் எட்ஜ் ஆஃப் டுமாரோ இயக்குனர் டக் லிமன் மீண்டும் இணைந்து, இப்படம் எடுக்கப்பட்டது. முதலில் இப்படத்திற்கு மேனா என்றே பெயரிடப்பட்டது .[6]

திரைப்பட வெளியீடு

மே 2015 இல், யுனிவர்சல் படத்தை ஜனவரி 6, 2017 அன்று வெளியிட திட்டமிட்டது.[7] ஆனால், ஆகஸ்ட் 8, 2016 அன்று, படத்தின் வெளியீடு செப்டம்பர் 29, 2017க்கு ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் அதன் தலைப்பு மேனாவிலிருந்து அமெரிக்கன் மேட் என மாற்றப்பட்டது.[8] இது ஐரோப்பாவில் ஆகஸ்ட் 23, 2017 அன்றும், அமெரிக்காவில் செப்டம்பர் 29, 2017 அன்றும் வெளியிடப்பட்டது, மேலும் செப்டம்பர் 1, 2017 அன்று டூவில் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது [9]

திரைப்பட வசூல்

அமெரிக்கன் மேட் திரைப்படம், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், கனடாவில் $51.3 மில்லியனையும், மற்ற இடங்களில் $83.6 மில்லியனையும் வசூலித்தது. மொத்தம் உலகளவில் $134.9 மில்லியனுக்கு வசூல் செய்தது. இப்படத்தின் தயாரிப்பு செலவு $50 மில்லியன் ஆகும். "உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது" என்ற மறுப்புடன், படத்தின் தொடக்க வரவுகள் இது முற்றிலும் உண்மையாக இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. லிமன் படம் "உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேடிக்கையான பொய்" என்று விவரித்துள்ளார். இப்படம் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படமா என்று <i id="mwAQo">வல்ச்சரின்</i> ஆபிரகாம் ரைஸ்மேனிடம் கேட்டபோது, இயக்குனர் டக் லிமன் "உங்களுக்குத் தெரியும், நாங்கள் ஒரு வாழ்க்கை வரலாற்றை எடுக்கவில்லை. டாம் குரூஸ் பாரி சீல் போல் இல்லை. அவரது கதாபாத்திரம் கதைகளால் ஈர்க்கப்பட்டது. பாரியைப் பற்றி அறிந்தோம்." இந்த பாத்திரத்திற்காக குரூஸ் உடல் எடையை அதிகரித்ததாக கூறப்பட்டாலும், அவருக்கு 5 வயதுதான் உயரம், மற்றும் சீல் 300 pounds (140 kg) எடையுள்ள ஒரு பருமனான மனிதர் .

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்