அபிதோஸ்

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

அபிதோஸ் (Abydos (அரபு மொழி: أبيدوس‎) பண்டைய எகிப்தின் மேல் எகிப்து பிரதேசத்தில் பாயும் நைல் நதியின் மேற்கே 11 மைல் தொலைவில், தற்கால எகிப்தின் சோபாக் ஆளுநகரத்தில் உள்ள எல்-பால்யானா நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பண்டைய எகிப்திய நகரம் ஆகும்.[1] இரண்டாம் இடைநிலைக் காலத்தின் போது அபிதோஸ் வம்ச பார்வோன்கள் மேல் எகிப்து மற்றும் நடு எகிப்து பகுதிகளை கிமு 1650 முதல் கிமு 1600 முடிய 50 ஆண்டுகள் ஆண்டனர்.

அபிதோஸ் நகரம்
أبيدوس
அபிதோஸ் நகரத்தில் பார்வோன் முதலாம் சேத்தியின் கோயில் முகப்பு
மாற்றுப் பெயர்Ⲉⲃⲱⲧ; Abdju
இருப்பிடம்எல்-பால்யானா, சோபாக் ஆளுநகரம், எகிப்து
பகுதிமேல் எகிப்து
வகைகுடியிருப்பு
வரலாறு
காலம்எகிப்தின் முதல் வம்சம் முதல் முப்பதாம் வம்சம் வரை
தெற்கு எகிப்தில் பண்டைய அபிதோஸ் நகரத்தின் அமைவிடம்

பண்டைய அபிதோஸ் நகரத்தில் எகிப்திய பார்வோன்கள் மற்றும் பண்டைய எகிப்திய கடவுள்களின் கோயில்கள், கலலறைகள் மற்றும் பிரமிடுகள் நிறைந்திருப்பதால், இந்நகரத்தை எகிப்தின் முக்கியத் தொல்லியற்களமாகவும், புனித நகரமாகவும் கருதப்படுகிறது.[2]இப்பண்டைய நகரத்தைச் சுற்றிலும் தற்போது புதிய குடியிருப்புகள் தோன்றியதால், அபிதோஸ் நகரத்தின் தொல்பொருட்கள் சிதிலமடைந்து, பாழ்பட்டுள்ளது.[3]

பார்வோன் முதலாம் சேத்தியின் கல்லறைக் கோயில், அபிதோஸ் நகரத்தில் உள்ளது. இப்புகழ்பெற்ற கோயில் சுவரில் மூன்று வரிசைக் குறுங்கல்வெட்டுகளில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது.[4][5]

இதுவரை அறியப்படாத அபிதோஸ் வம்ச பார்வோன் செனப்காயின் மம்மி 2014-இல் பண்டைய அபிதோஸ் நகர அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [6]

இந்த பண்டைய நகரத்தில் எண்ணிலடங்கா பழங்கால கல்லறைகள் மற்றும் கோயில்கள் உள்ளது. எகிப்தில் காணப்படும் தொல்பொருள் தளங்களில் மிகவும் முக்கியமானதாகும். நைல் நதிக்கு மேற்கே அமைந்துள்ளது அபிதோஸ் நகரம். எகிப்தின் துவக்க கால அரசமரபினர் காலத்தில் அபிதோஸ் நகரம் முக்கிய நகரமாகவும், எகிப்தியக் கடவுள் ஒசிரிசு வழிபாட்டிற்கான யாத்திரை மையமாகவும் இருந்தது. ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய அபிதோஸ் நகரம் பிற்காலத்தில் புகழ் மங்கி, பாலைவன மணலால் மூடப்பட்டது.

மன்னர் காசெகெம்வி கட்டிய கோட்டை
அபிதோஸ் நகரத்தில் மன்னர் காசெகெம்வி கட்டிய கோட்டை, ஆண்டு கிமு 2700
அபிதோஸ் நாட்டிற்கும், நெக்கென் நாட்டிற்கும் இடையே நடந்த போரைக் குறிக்கும், உருவஙகள் பொறித்த தந்தக் கைப்பிடியுடன் கூடிய விண்வீழ்கல்லால் செய்யப்பட்ட குறுவாள், காலம் கிமு 3300 - 3200[7]

அகழாய்வுகள்

அபிதோஸ் நகரத்தில் 1970 களின் பிற்பகுதிகளில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடைபெற்ற போது தான் இங்கு, கிமு 2900 க்கு முன் வாழ்ந்த எகிப்திய அரசர்களின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்குப் பிறகு, தொல்லியல் ரீதியாக இந்தப் பகுதி புகழ் பெற்றது.

மதுபான தொழிற்சாலை

எகிப்து மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, 2021-இல் அபிதோஸ் நகரத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஏறத்தாழ் 5,000 ஆண்டுகள் பழமையான மதுபான வடிப்பாலையைக் கண்டறிந்துள்ளனர். இது கிட்டத்தட்ட உலகின் பழமையான பீர் ரக மதுபான வடிப்பாலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.பீரை தயாரிக்க, தானியங்கள் மற்றும் நீர் கலந்த கலவையைப் பயன்படுத்தியுள்ளார்கள். அந்த கலவையை சூடுபடுத்த பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும், சுமார் 40 பாத்திர பண்டங்களைக் கொண்ட பல அலகுகளை இந்த கூட்டுக் குழு கண்டுபிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, உலகிலேயே அதிக அளவில் பீர் ரக மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட, மிகப் பழமையான வடிப்பாலையாக இது இருக்கலாம் என நம்புவதாகவும் அகழ்வாராய்ச்சிக் குழு கூறியுள்ளது.[8][9][10][11]

எகிப்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் 5,000 (கிமு 3100) ஆண்டுகளுக்கு முன் இப்போதைய எகிப்து நாட்டை ஆட்சி செய்தார். அவர் தான் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்து பகுதிகளை ஒன்றிணைத்து எகிப்து இராச்சியத்தை நிறுவினார்.

இந்த பீர் வடிப்பாலையில் 8 பெரிய பகுதிகள் உள்ளது. ஒவ்வொன்றும் 20 மீட்டர் நீளம் உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் சுமாராக 40 மண் பாத்திர பண்டங்கள் வரிசையில் நேர்த்தியாக அடுக்கப்பட்டுள்ளது. தானியங்கள் மற்றும் தண்ணீர் கலந்த கலவை பீர் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. அந்த கலவை மட்பாண்டங்களில் சூடுபடுத்தப்பட்டது.

பண்டைய எகிப்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த பின் செய்யப்படும் இறுதிச் சடங்குகளுக்குத் தேவையான பீரை விநியோகிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு, அபிதோஸ் நகரத்தின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களை நல்லடக்கம் செய்யும் இடத்தில் இந்த மதுபான வடிப்பாலையை அமைக்கப்பட்டிருக்கலாம் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருகின்றனர். இந்த மதுபான உற்பத்தி ஆலையில் ஒரே நேரத்தில் 22,400 லிட்டர் பீர் தயாரிக்கப்பட்டிருக்கலாம். பலிகொடுக்கும் சடங்குகளில் பீர் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள், இந்த இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

படக்காட்சிகள்

அபிதோசில் கண்டெடுக்கப்பட்ட எகிப்திய மன்னர்கள் பெயர் பொறித்த குறுங்கல்வெட்டுகளில் வரைபடம்

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Abydos
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அபிதோஸ்&oldid=3739751" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்