அனில் பனச்சூரன்

இந்தியாவின் கேரளத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர்

அனில் பனச்சூரன் (Anil Panachooran) (20 நவம்பர் 1969 - 3 ஜனவரி 2021) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர் ஆவார். 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று அனில் பிறந்தார். வழக்கறிஞர், கவிஞர் மற்றும் பாடலாசிரியர் என பன்முகங்களுடன் இயங்கினார். மலையாளத் திரையுலகில் பணியாற்றினார்.[1][2][3] அனிலின் கடைசி பாடல் வரிகள் "வித்தின் செகண்ட்சு (2021) என்ற திரைப்படத்திற்காக எழுதப்பட்டது. இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனது பாடலின் கடைசி வரிகளை எழுதி முடித்தார்.

அனில் பனச்சூரன்
Anil Panachooran
பிறப்புபி.யு. அனில்குமார்
(1969-11-20)20 நவம்பர் 1969
காயம்குளம், இந்தியா
இறப்பு3 சனவரி 2021(2021-01-03) (அகவை 51)
திருவனந்தபுரம் மாவட்டம், கேரளம், இந்தியா
பணி
  • Poet
  • Lyricist
  • Actor
செயற்பாட்டுக்
காலம்
2005 – 2021
விருதுகள்சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் விருது, ஆசியாநெட் திரைப்பட விருதுகள்

இறப்பு

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட இவர் சிகிச்சையில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 3 ஆம் தேதியன்று இறந்தார்.[4] இறந்தவுடன், உறவினர்கள் பிரேத பரிசோதனைக்கு கோரிக்கை விடுத்தனர். பின்னர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கு பதிவு செய்தனர்.[5]

விருதுகள்

  • சிறந்த பாடலாசிரியருக்கான ஆசியாநெட் திரைப்பட விருது -2008
  • சிறந்த பாடலாசிரியருக்கான பிலிம்பேர் திரைப்பட விருது -2008

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அனில்_பனச்சூரன்&oldid=3741773" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்