அனிமா குகா

இந்திய எழுத்தாளார்

அனிமா குகா ( Anima Guha ; 26 மார்ச் 1932 - 29 ஜூலை 2021) அசாமைச் சேர்ந்த ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். அனிமா ஏராளமான புதினங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் பயணக்கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இதைத் தவிர இவர் பல கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் கலந்துகொண்டதுடன், பல ஆய்வுக் கட்டுரைகளையும் அறிவியல் இதழ்களில் வெளியிட்டார்.[1]

அனிமா குகா
இயற்பெயர்
অনিমা গুহ
பிறப்பு(1932-03-26)26 மார்ச்சு 1932
துப்ரி, அசாம், பிரித்தானிய இந்தியா
இறப்பு29 சூலை 2021(2021-07-29) (அகவை 89)
தொழில்எழுத்தாளர்
மொழிஅசாமி
ஆங்கிலம்
தேசியம் இந்தியா
கல்விமானிடவியல் துறையில் முனைவர் பட்டம்
கல்வி நிலையம்புனே பல்கலைக்கழகம்
துணைவர்அமலெந்து குகா

கல்வி மற்றும் சொந்த வாழ்க்கை

அனிமா குகா மார்ச் 26, 1932 இல், நிகாரிகா தாசு மற்றும் கிரிந்திர மோகன் தாசு ஆகியோருக்கு துப்ரியில் பிறந்தார். இவர் தனது பள்ளி நாட்களை கோக்ரஜார் எல்பி பள்ளியில் தொடங்கினார். 1947 இல் ஜோர்கட் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் முதல் பிரிவில் தனது மெட்ரிகுலேசன் தேர்வை முடித்தார். 1949 ஆம் ஆண்டில், காட்டன் கல்லூரியில் முதல் பிரிவில் இந்தியப் பள்ளி சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றார். பின்னர், குவகாத்தி காத்தி பல்கலைக்கழகத்தில் இணைந்த காட்டன் கல்லூரியின் தாவரவியல் துறையில் பட்டம் பெற்றார்.[2]

வரலாற்றாசிரியரும் பொருளாதார நிபுணருமான அமலெந்து குகாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அனிமா முதுகலைப் பட்டத்தை முடித்தார். புனே பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

தொழில்

இவர் 1980 முதல் 1984 வரை அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் குழு அதிகாரியாக பணியாற்றினார். மேலும் கொல்கத்தாவில் உள்ள இந்திய மானுடவியல் ஆய்வகத்தில் (1976-1989) ஒரு முதுகலை ஆசிரியராக இருந்தார். 1985 முதல் 1990 வரை, கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆராய்ச்சி கூட்டாளியாகப் பணியாற்றினார். அசாமிய பழங்குடி சமூகங்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிறப்பு அசாதாரணங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார நடைமுறைகளின் மரபியல் மீது கவனம் செலுத்தினார்.[4]

ஜாக்ரெப் (யுகோஸ்லாவியா) மற்றும் புது தில்லியில் நடைபெற்ற மானுடவியல் மற்றும் இனவியல் அறிவியலின் சர்வதேச மாநாடுகளிலும் இவர் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[5]

இறப்பு

குவகாத்தியில் உள்ள ஆர்யா மருத்துவமனையில் வயது தொடர்பான பிரச்சனைகள் காரணமாக 29 ஜூலை 2021 அன்று அனிமா இறந்தார்.[6]

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அனிமா_குகா&oldid=3895365" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்