அந்திரொமேடா பேரடை

ஆந்திரமேடா பேரடை அல்லது மெசியர் 31, மெ31,அல்லது புபொப 224 என்பது ஒரு சுருள்வகைப் பால்வெளி ஆகும். இது புவியில் இருந்து தோராயமாக 780 கிலோபார்செக்குகள் (2.5 மில்லியன் ஒளியாண்டுகள்) தொலைவில் உள்ளது.[2] இது நமது பால்வெளியாகிய பால்வழிக்கு மிக அருகில் உள்ள பெரிய பால்வெளியாகும். இது பேராந்திரமேடா ஒண்முகில் எனப் பழைய நூல்களில் வழங்கப்படுகிறது. இது ஆந்திரமேடா விண்மீன்குழுவுக்கு அருகில் வானில் அமைவதால் இப்பெயர் பெற்றது. இவ்விண்மீன்குழு தொன்ம இளவரசியான ஆந்திரமேடா பெயரால் அழைக்கப்படுகிறது.[3] இதன் விட்டம் தோராயமாக 220,000 ஒளியாண்டுகள் ஆகும். இது களப் பால்வெளிக்கொத்தில் அமைந்த மிகப் பெரிய பால்வெளியாகும். களப் பால்வெளிக்கொத்தில் பால்வழியும் முக்கோணியம் பால்வெளியும் மேலும் 44 சிறு பால்வெளிகளும் அமைந்துள்ளன.

ஆந்திரமேடா பேரடை
Andromeda Galaxy
ஆந்திரமேடா பேரடை
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுஆந்திரமேடா
வல எழுச்சிக்கோணம்00h 42m 44.3s
பக்கச்சாய்வு+41° 16′ 9″
செந்நகர்ச்சி−301 ± 1 km/s
தூரம்2.54 ± 0.11 மில்லியன் ஒளியாண்டுகள்
(778 ± 33 பார்செக்)[1][a]
வகைSA(s)b
தோற்றப் பரிமாணங்கள் (V)190′ × 60′
தோற்றப் பருமன் (V)4.4
ஏனைய பெயர்கள்
M31, NGC 224, UGC 454, PGC 2557, 2C 56 (Core), LEDA 2557
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

பால்வழியில் கரும்பொருள் கூடுதலாக உள்ளதால் களப்பால்வெளிக்கொத்தில் நமது பால்வழிதான் பெரியது எனக்கருதப்பட்டுவந்தாலும்[4] 2006 ஆம் ஆண்டின் சுபிட்சர் விண்வெளித் தொலைக்காட்சியின் நோக்கீடுகளின்படி ஆந்திரமேடா ஒரு டிரில்லியன் (1012) விண்மீன்களைக் கொண்டுள்ளது என அறியப்பட்டது. stars:[5] இது பால்வழி விண்மீன்களின் எண்ணிக்கையைப் போல இருமடங்காகும். நமது பால்வழியில் உள்ள விண்மீன்களின் எண்ணிக்கை 200-400 பில்லியன் ஆகும்.[6]

ஆந்திரமேடா பால்வெளியின் பொருண்மை சூரியனின் பொருண்மையைப் போல 1.5×1012 மடங்கு ஆகும்.[7]ஆனால் பால்வழியின் பொருண்மை சூரியனின் பொருண்மையைப் போல 8.5×1011மடங்கு ஆகும். என்றாலும் 2009 இல் இரண்டின் பொருண்மைகளும் சம மானவையே என மதிப்பிடப்பட்டுள்ளது.[8] 2006 ஆம் ஆண்டின் ஆய்வு பால்வழியின் பொருண்மை ஆந்திரமேடா பால்வெளிப் பொருண்மையில் தோராயமாக 80% என மதிப்பிட்டிருந்தாலும் வருங்காலத்தில் 3.75 பில்லியன் ஆண்டுகளில் இரண்டு பால்வெளிகளும் மோதி ஒரு மாபெரும் நீள்வட்டப் பால்வெளியை உருவாக்கும் என ஆய்வுகள் முன்கணிக்கின்றன.[9] or perhaps a large disk galaxy.[10]

ஆந்திரமேடா பால்வெளியின் தோற்றப் பொலிவு 3.4 என்பதால், இது மெசியர் பொருள்களிலேயே பொலிவு மிக்கதாகும்.[11] எனவே இடை நிலாவில்லாத இரவுகளில் ஒளிமாசுள்ள இடத்திலும் இதைக் கண்ணால் பார்க்கலாம். பெரிய தொலைநோக்கியால் படமெடுக்கும்போது நிலாவைப் போல ஆறு மடங்கு பெரியதாகத் தோன்றினாலும், கண்ணால் பார்க்கும்போதும் சிறு தொலைநோக்கியாலும் இருநோக்கியாலும் பார்க்கும்போதும் அதன் பொலிவுமிகுந்த நடுப்பகுதி மட்டுமே ஒரு விண்மீன் போலத் தோன்றும்.

நோக்கீட்டு வரலாறு

சாக் இராபர்ட்சுவின் பேராந்திரமேடா ஒண்முகில், 1899

அபிது அல்-இரகமான் அல்-சுஃபி தன் நிலையான விண்மீன்கள் எனும் நூலில் இதைப் பற்றி, அதாவது தொடர்விண்மீன்குழுக்களின் தோற்றம் பற்றி சிறுமுகில்போல இருந்த்தாக ஒருவரியில் கி.பி 964 இல் குறிப்பிடுகிறார்.[12][13] Star charts of that period labeled it as the Little Cloud.[13] செருமானிய வானியலாளரான சைமன் மாரியசு 1612 திசம்பர் 15 இல் முதன்முதலில் தொலைநோக்கிவழி நோக்கி ஆந்திரமேடா பால்வெளியைப் பற்றிப் பதிவு செய்துள்ளார்.[14] சார்லசு மெசியர் 1760 இல் ஆந்திரமேடா பால்வெளியை மெ31 என அட்டவணைப் படுத்தியுள்ளார். இது வெற்றுக்கண்ணுக்கே புலப்பட்டாலும் இதை மெசியர்தான் கண்டுபிடித்தாரெனத் தவறாகக் கருதப்படுகிறது. வானியலாளர் வில்லியம் ஃஎர்ழ்செல் 1785 இல் மெ31 இன் நடுவண் அகட்டில் மங்கலான சிவப்புச் சுவட்டைக் கண்டுள்ளார். இவர் மெ31 தான் மிக அருகில் உள்ள பெரிய ஒண்முகில் என நம்பினார்.மேலும் ஒண்முகிலின் நிறத்தையும் பருமையையும் வைத்து இது சீரியசுவைப் போல 2000 மடங்கு தொலைவில் உள்ளதாகத் தவறாகக் கணித்துள்ளார்.[15] மூன்றாம் ஆளுநராகவிருந்த வில்லியம் பார்சன்சு 1850 இல் ஆந்திரமேடாவின் சுருள்கட்டமைப்பைக் காட்டும் முதல் வரைபடத்தை வரைந்துள்ளார்.

வில்லியம் ஃஅக்கிசு 1864 இல் மெ31 இன் கதிர்நிரலைக் கண்ணுற்று அது வளிம ஒண்முகிலில் இருந்து வேறுபடுதலைக் கூறினார்.[16] மெ31 இன் கதிர்நிரலில் தொடர்ச்சியான அலைவெண்கள் மீது கரும் உட்கவர் வரிகள் படிந்துள்ளதை பார்த்து அதில் உள்ள வேதியியல் உட்கூறுகளை இனங்கண்டார். இது தனியொரு விண்மீனின் கதிர்நிரலை ஒத்திருந்தது. எனவே இதன் உடுக்கணத் தன்மையை நிறுவினார். மேலும் 1885 இல் மெ31 இல் முதன்முதலாக ஒரு மீஒண்முகில் அமைவது கண்டறியப்பட்டுள்ளது. இது மீ ஆந்திரமேடா (S. Andromeda) எனப்படுகிறது. அக்காலத்தில் மெ31 மிக அருகில் உள்ளதாகக் கருதப்பட்டதால் இது குறைந்த ஒளிர்மையுள்ளதாகவும் எனவே "ஒண்முகில் 1885" எனவும் வழங்கப்பட்டது.[17]

மிகப் பெரிய தொலைநோக்கிக்கு மேலே மெ31 பால்வெளி

.[18] ]]

மெ31 இன் ஒளிப்படம் 1887 இல் அய்சக் இராபர்ட்சு என்பவரால் இங்கிலாந்தில் சுசெக்சில் உள்ள அவரது தனியார் வான்காணகத்தில் முதன்முதலில் எடுக்கப்பட்டது. அப்போதும் இது நம் பால்வெளியான பால்வழியில் உள்ளதாகவே எண்ணப்பட்டுவந்தது. எனவே இராபர்ட்சு பிறப்புநிலைக் கோள்களைக்கொண்ட தோற்றநிலை விண்மீன் அமைப்பாகவே இதைத் தவறாக எண்ணினார்.[சான்று தேவை] நமது சூரியக் குடும்பத்தை ஒப்பிட்டு மெ31 இன் ஆர விரைவு 1912 இல் வெசுட்டோசுலிப்பரால் உலோவல் வான்காணகத்தில்நிறமாலையியல்முறையைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது. அப்போது இதன் பேரளவு விரைவு நொடிக்கு 300 கி.மீ/ ஆக சூரியன் திசையில் செல்லும்போதுஅமைந்திருந்தது.[19]

தீவுப் புடவி

ஆந்திரமேடா விண்மீன்குழுவில் மெ31 இன் இருப்பு

அமெரிக்க வானியலாளர் ஃஎபர் கர்டிசு மெ31 இலேயே ஒர் ஒண்முகில் உள்ளதை 1917 இல் கண்டார். அதன் ஒளிப்படப் பதிவுகளை ஆய்வு செய்ததில் மேலும் 11 ஒண்முகில்கள் கண்டறியப்பட்டன. இந்த ஒண்முகிலகளின் பருமை 10 ஆக அமைதலையும் இவை வானில் வேறு இருப்பிடங்களில் காணப்படும் ஒண்முகில்களை விட பொலிவு குன்றியனவாக இருத்தலையும் கர்டிசு கவனித்தார்.எனவே இவர் இவை 500,000 ஒளியாண்டுகட்கு அப்பால் உள்ளதாக மதிப்பிட்டார். சுருள்வகை அண்டங்கள் தனித்து நிலவும் பால்வெளிகள் என இவர் கூறியதால், தீவுப் புடவிக் கருதுகோளை முன்மொழிந்தவராகக் கருதப்படுகிறார்..[20]

எனவே 1920 இல் இவருக்கும் ஃஆர்லே இழ்சப்லேவுக்கும் இடையில் பெரிய வானியல் விவாதம் தொடஙியது. இதில் பால்வழியின் தன்மை, சுருள்வகை ஒண்முகில், புடவியின் அளவுகள் குறித்த வாதங்களும் எதிர்வாதங்களும் நடந்தன. ஆந்திரமேடா ஒண்முகில் தனித்த பால்வெளி என்பதை நிறுவ, கர்டிசு ஆந்திரமேடாவுக்கும் நம் பால்வழிக்கும் நடுவில் அமையும் தூசுமுகிலைச் சுட்டும் கருஞ்சந்துகளையும் இருபால்வெளிகளுக்கும் கணிசமாக வேறுபடும் டாப்ளர் பெயர்ச்சிகள் அமைவதையும் சான்றுகாட்டினார்.

எர்னெசுட்டு ஓபிக் 1922 இல் விண்மீன்களின் அளக்கப்பட்ட விரைவுகளில் இருந்து மெ31 இன் தொலைவைக் கண்டறியும் முறையை முன்வைத்தார். நம் பால்வழிக்கு அப்பால் நெடுந்தொலைவில் உள்ள ஆந்திரமேடா பால்வெளியின் தொலைவு தோராயமாக 450,000 பார்செக்/ஒளியாண்டுகள் என கணித்தார்.[21] எட்வின் ஃஅப்பிள் 1925 இல் புறப் பால்வெளி செபீடுவகை மாறு விண்மீன்கள் மெ31 வானியல் ஒளிப்படத்தில் நிலவுவதை இனங்கண்டு இதைத் தீர்த்துவைத்தார் . இவை 2.5மீட்டர் (100விரற்கடை) ஃஊக்கர் தொலைநோக்கியைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டன. இதனால் ஆந்திரமேடா பால்வெளியின் தொலைவை எளிதாகக் காணமுடிந்த்து. இவரது அளவீடுகள் இறுதியாக இந்தக் கூறுபாடு நம் பால்வழியின் விண்மீன்கள், வளிமத் திரள் கொத்தல்ல, மாறாக பால்வழியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள தனித்த பால்வெளி என்பதை விளக்கியது.[22]

மிக அருகில் அமையும் பெரிய பால்வெளியாக உள்ளதால், பால்வெளிகளின் ஆய்வில் மெ31 முதன்மையான பாத்திரம் வகிக்கிறது.முத்ன்முதலாக வால்டர் பேடுதான் 1943 இல் ஆந்திரமேடா பால்வெளியின் நடுவில் உள்ல விண்மீன்களை பிரித்தறிந்தார். விண்மீன்களின் பொன்மத் தன்மையை வைத்து இருவகை விண்மீன் திரள்களை இனங்கண்டார். இதில் இளையதும் உயர்விரைவுள்ளதுமான விண்மீன்களை வகை-ஒன்றிலும் முதிர்ந்ததும் அளவில் பருத்த்துமான செவ்விண்மீன்களை வகை-இரண்டிலும் பகுத்தார். இந்தப் பகுப்பும் பெயரீடும் பிறகு நமது பால்வழி விண்மீன்களுக்கும் மற்ற பால்வெளிகளுக்கும் பின்பற்றப்பட்டது. (இருவேறு விண்மீன் திரள்கள் நிலவலை ஜான் ஊர்த்தும் குறித்துள்ளார்.)[23] மேலும் பேடு இருவகை செபீடு மாறிகள் உள்ளமையையும் கண்டறிந்து இவை மெ31 தொலைவு மதிப்பீட்டையும் எஞ்சிய புடவியின் தொலைவு மதிப்பீட்டையும் இருமடங்கு ஆக்கியதையும் விளக்கினார்.[24]

ஆந்திரமேடா பால்வெளியின் கதிர்வீச்சுமிழ்வு யோதிரே வான்காணகத்து 218-அடி கடப்புத் தொலைநோக்கியால் இராபர்ட் ஃஆன்பரி பிரவுனாலும் சிரில் ஃஅசார்டுவாலும் கண்டறியப்பட்டு 1950 இல் அறிவிக்கப்பட்டது.>[25] (முன்பே கதிர்வீச்சு வானியலின் முன்னோடியான குரோட்டெ இரெபெர் 1940 களின் நோக்கீடுகளால் இந்நிகழ்வு அறியப்பட்டிருந்தாலும், சரியான முடிவேதும் எட்டப்படவில்லை. பின்னர் அவற்றின் பருமை மிக உயர்வாக உள்ளதாக காட்டப்பட்டுள்ளது).பால்வெளியின் முதல் கதிர்வீச்சுவரை 1950களில் ஜான் பாடுவினாலும் கேவண்டிழ்சு ஆய்வக கதிர்வீச்சு வானியல் ஆய்வாளர்களாலும் பதிவு செய்யப்பட்டது.[26] ஆந்திரமேடா அகட்டில் உள்ள விண்மீன்கள் கதிர்வீச்சு வாயில்களின் இரண்டாம் கேம்பிரிட்ஜ் அட்டவணையில் 2சி 56 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அந்ந்திரமேடா பால்வெளியின் முதல் கோள் 2009 இல் பாரிய வான்பொருளால் விலக்கப்படும் ஒளிக்கற்றையால் உருவாகும் நுண்வில்லைவழி கண்டறியப்பட்டது.[27]

பொது

நாசாவின் அகல்புல அகச்சிவப்பு அளக்கை தேட்டக்கலத்தால் கண்ணுற்ற ஆந்திரமேடா பால்வெளியின் காட்சி

ஆந்திரமேடா பால்வெளிக்குள்ளே மேலும் ஒரு மங்கலான செபீடு எனும் பால்வெளி அமைந்துள்ளதாக 1953 இல் கண்டறிந்தபோது இதன் தொலைவு இருமடங்காக மதிப்பிடப்பட்டது . செந்தரச் செம்பெருமீன்களையும் செஞ்செறிவு மீன்களையும் 1990 களில் ஃஇப்பார்க்கசு செயற்கைக் கோளில் இருந்து எடுத்த அளவைகள் செபீடு தொலைவுகளைத் தரமதிப்பீடு செய்ய பயன்படுத்தப்பட்டன.[28][29]

தோற்றமும் வரலாறும்

வானியலாளர்களின் ஒரு குழு 5 முதல் 9 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு, இருந்த இரண்டு சிறுபால்வெளிகளின் மோதலில் ஆந்திரமேடா பால்வெளி உருவாகியதென 2010 இல் அறிவித்துள்ளனர்.[30]

2012 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு.[31] இது அதன் பிறப்பில் இருந்து மெ31 இன் வரலாற்றைக் கோடிட்டுக் காட்டுகிறது. இதன்படி, ஆந்திரமேடா 10 பில்லியன் ஆண்டுகட்கு முன் பல சிறிய தோற்றநிலைப் பால்வெளிகள் இணைந்து தோன்றியுள்ளது. தோன்றியநிலையில் இது இப்போதுள்ளதைவிடச் சிறியதாக இருந்துள்ளது.மெ31 வரலாற்றில் மிக முதன்மையான திருப்பம் மேலே குறிப்பிட்ட 8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த பால்வெளிகளின் இணைவேயாகும். இக்கடும் மோதல் பொன்மச் செறிவு அகட்டையும் விரிநிலை வட்டையும் உண்டாக்கியுள்ளது. மேலும் அந்த ஆந்திரமேடாவின் விண்மீன் உருவாக்க ஊழியின்போது, 100 மில்லியன் ஆண்டுகள் வரை நீடித்த ஒளிர்வுமிகு அகச்சிவப்புப் பால்வெளியாக மாறியுள்ளது. 2 முதல் 4 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு மெ31 பால்வெளியும் மெ33 பால்வெளியும் (முக்கோனியப் பால்வெளி) மிக அருகில் கடந்து சென்றுள்ளன. இதனால் ஆந்திரமேடா பால்வெளியின் புற வட்டில் உயர்மட்ட விண்மீனாக்கம் ஏற்பட்டுள்ளது; மேலும் சில கோளவடிவ விண்மீன்கொத்துகளும் ஏற்பட்டு மெ33 இன் புற வட்டிலும் அவை பரவியுள்ளன.

இப்பால்வெளியில் கடந்த 2 பில்லியன் ஆண்டுகளாகச் செயல்பாடுகள் இருந்தாலும் முன்கடந்த காலத்தோடு ஒப்பிடும்போது அவை குறைவான வேகத்திலேயே நடைபெறுகின்றன. இந்த காலமுழுவதும் விண்மீன்கள் உருவாதல் இல்லையெனுமளவுக்குக் குன்றியுள்ளது. என்றாலும் அச்செயற்பாடு அண்மையில் கூடியுள்ளது. ஏற்கெனவே மெ31 விழுங்கிய பால்வெளிகளிலும் M32, M110 ஆகியவற்றிலும் ஊடாட்டங்கள் நிகழ்ந்தவண்னம் உள்ளன. இவை ஆந்திரமேடா பால்வெளி பேரோடையை உருவாக்கியுள்ளன. 100 மில்லியன் ஆண்டுகட்கு முன்பு ஏற்பட்ட இந்த பேரிணைவு இதன் அகட்டில் உள்ள எதிர்ச்சுழற்சி வளிம வட்டாலும் அங்கே அண்மையில் 1 மில்லியன் ஆண்டுகட்கு முன் உருவாகிய விண்மீன்களின் திரளாலும் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

அண்மைத் தொலைவு மதிப்பீடு

ஆந்திரமேடா பால்வெளியின் தொலைவை மதிப்பிட குறைந்தது நான்கு முறைகள்/நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புற ஊதாக்கதிர் மேற்பரப்புப் பொலிவு அலைவுகள் நுட்பத்தைப் பயன்படுத்தி, 2001 ஆம் ஆண்டு பிரீடுமேன் பொலிவு மதிப்பைச் சரிசெய்து, பின் பொன்மத்தன்மைக்கான 0.2 பருமையில் dex−1 (O/H 0) பருமைத் திருத்தம் செய்து {|2.57|+/-|0.06|ஆயிரம் ஒளியாண்டுகள்} மதிப்பீடு 2003 இல் பெறப்பட்டது

கேலக்சால் புற ஊதாக் கதிரால் பிடிக்கப்பட்ட ஆந்திரமேடா பால்வெளி

செபீடு மாறி என்ற முறையைப் பயன்படுத்தி, 2.51 ± 0.13 மில்லியன் ஒளியாண்டுகள் (770 ± 40 கிலோபார்செக்) என 2004 இல் மதிப்பீடு செய்யப்பட்டது.[32][33]

எசுப்பானியத் தேசிய ஆய்வு மன்றத்தைச் சேர்ந்த கடலோனியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியலார் இகுனாசி இரிபாசுவும் அவரது துணைஆய்வாளர்க்ளும் 2005 இல் ஆந்திரமேடா பால்வெளியில் ஓர் ஒளிமறைப்பு இரும விண்மீன் உள்ளதைக் கண்டுபிடித்து அறிவித்தனர். இது மெ31 V எனப் பெயரிடப்பட்டது.[b] இதில் O,B வகை ஒளிர்மையுள்ள இரண்டு வெம்நீல விண்மீன்கள் உள்ளன. இந்த விண்மீன்களின், 3.54969 நாட்களுக்கு ஒருமுறை அமையும் ஒளிமறைப்புகளைப் பயன்படுத்தி, அவற்றின் உருவளவுகளையும் கண்டறிந்தனர்.விண்மீன்களின் அளவுகளையும் வெப்பநிலைகளையும் அறிந்ததும், அவற்றின் தனிப்பருமைகளைக் காணமுடிந்துள்ளது.அவற்றின் தோற்றப்பருமை, தனிப்பருமைகள் தெரிந்ததும் அவற்றின் தொலைவுகளை எளிதாக்க் கண்டுபிடித்துள்ளனர். இந்த விண்மீன்கள் {|2.52|+/-|0.14|ஆயிரம் ஒளியாண்டுகள்|}தொலைவிலும் முழு ஆந்திரமேடா பால்வெளியும் {|2.5|ஆயிரம் ஒளியாண்டுகள்|} தொலைவிலும் உள்ளதைக் கண்டனர் .[2] இப்புது மதிப்பு முந்தைய செப்பீடு மாறி மதிப்புடன் அணுக்கமாகப் பொருந்தியது.

மெ31 செம்பெருநிலைக்கு மிக அண்மையது என்பதால் செம்பெருமீன் அணுகுகோட்டு முறையைப் பயன்படுத்தியும் தொலைவைக் காணலாம். இம்முறைப்படி 2005 இல் மதிப்பிட்ட தொலைவு {|2.56|+/-|0.08|மில்லியன் ஒளியாண்டுகள்|} ஆகும்.[34]

இம்முறைகளின்படி கண்டறிந்த மதிப்பீடுகளின் நிரல் (சராசரி) மதிப்பு {2.54|+/-|0.11|ஆயிரம் ஒளியாண்டுகள்|}. இதில் இருந்து ஆந்திரமேடாவின் அகலமிக்க புள்ளியின் விட்டம் {220|+/-|3|ஆயிரம் ஒளியாண்டு|} என மதிப்பிடப்பட்டுள்ளது. கோண அளவில் இது வானத்தில் 4.96° ஆக அமையும்.

பொருண்மையும் ஒளிர்மையும் குறித்த மதிப்பீடுகள்

பொருண்மை

ஆந்திரமேடா பால்வெலியைச் சுற்ரியமைந்த பேரொளிவட்டம்.[35]

கரும்பொருள் உள்ளிட்ட ஆந்திரமேடா பால்வெளி பேரொளிவட்டத்தின் பொருண்மை மதிப்பிடு தோராயமாக 1.5×1012 மடங்கு சூரியப் பொருண்மையாகும்.[7] (or 1.5 trillion சூரியத் திணிவுes) compared to 8×1011 M . இது ஆந்திரமேடாவும் நம் பால்வழியும் ஒரே பொருண்மை உடையன என்ற முந்தைய அளவீடுகளுடன் முரண்படுகிறது.என்றாலும் பால்வழியை விட மெ31 சுருள் பால்வெளியின் விண்மீன் அடர்த்தி கூடுதலாகும்.[36] மேலும் மெ31 இன் உடுக்கண வட்டின் உருவளவும் பால்வழியினதை விட இரண்டு முதல் மூன்று மடங்காகும்.[37] ஆந்திரமேடாவின் மொத்தப் பொருண்மை 1.1×1011 மடங்கு சூரியப் பொருண்மையைக் கொண்டதாகும்.[38][39] அதாவது பால்வழியளவுக்குப் பொருண்மை உடைய்தாகும். மற்ற மதிப்பீடுகளின்படி 1.5 மடங்கு சூரியப் பொருண்மை உடையதாகும். அதாவது 30% அளவுப் பொருண்மையை மைய அகட்டிலும் 56% பொருண்மையைப் பால்வெளி வட்டிலும் எஞ்சிய 14% பொருண்மையைச் சுருள் பால்வெளி ஒளிவட்டத்திலும் கொண்டுள்ளது.[40]

இதோடு கூட மெ31 இன் உடுக்கணவெளி ஊடகம் குறந்த அளவாக,7.2×109}} மடங்கு சூரியப் பொருண்மையைக் கொண்டுள்ளது.[41] இதில் நொதுமல்நிலை நீரகம், குறைந்தது 3.4×108 மடங்கும் மூலக்கூற்றுநிலை நீரகம் உள் 10 கிலோபார்செக் பரப்பிலும் உடுக்கனவெளித் தூசு 5.4×107 சூரியப் பொருண்மையளவும் உள்ளது.[42]

ஃஅபிள் தொலிநோக்கியைப் பயன்படுத்திப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை 2015 இல் வெளியிடப்பட்டுள்ளன. இவை மெ31 பால்வெளியைச் சுற்றி பாரிய பொருண்மையுள்ள சூடான வளிமப் புறவட்டம் நிலவுவதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்தப் புறவட்ட்த்தில் ஆந்திரமேடாவின் அரைப்பகுதிப் பொருண்மையைக் கொண்ட விண்மீன்கள் உள்ளதாக அறிய்ப்பட்டுள்ளத.. இது 2015 மே 7 ஆம் நாளின் நிலவரப்படி, முன்பு அளந்ததைப் போல ஆறுமடங்கு பெரியதாகவும் 1000 மடங்கு பொருண்மை மிக்கதாகவும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பெரிதும் கட்புலனுக்கு அகப்படாத இந்தப் புற வளிம வட்டம் ஒரு மில்லியன் ஒளியாண்டுகள் வரை, அதாவது நம் பால்வழியின் பாதிவழி வரை பரவியுள்ளது. பால்வெளிகளின் ஒப்புருவாக்க ஆய்வுகள் இந்தப் புற வளிம வட்டம் ஆந்திரமேடா தோன்றியபோதே உருவாகியதாக நிறுவியுள்ளன .இதில் நீரகம், எல்லியத்தை விடவும் அடர்தனிமங்கள் செறிந்துள்ளன. இவை மீப்பெருமீன் வெடிப்பால் இங்கு உருவாகியவை யாகும். இவற்றின் இயல்புகள் நிறப்பருமை விளக்கப்படத்தில் பச்சைப் பள்ளத்தாக்கில் அமையும் பால்வெளிப் பண்பைக் கொண்டுள்ளன. விண்மீன் செறிந்த ஆந்திரமேடா பால்வெளி வட்டின் இந்த மீப்பெருமீன் வெடிப்பு அடர் தனிமங்களைப் பால்வெளியின் புறப்பகுதி விண்வெளிக்கு உமிழ்ந்துள்ளது.. ஆந்திரமேடாவின் வாழ்நாளில், இவ்வாறு விண்மீன்கள் உண்டாக்கிய பாதியளவு அடர்தனிமங்கள் பால்வெளியின் வெளியே உள்ள 2 மில்லியன் ஒளியாண்டுகள் அளவு உடுக்கணவெளி விட்டத்துக்கு வீசியெறியப்பட்டுள்ளன.[43][44][45][46][47]

ஒளிர்மை

பால்வழியை விட கணிசமான அளவில் பொதுவக்க் காணப்படும் ஒளிர்மையுள்ல விண்மீன்களை மெ31 பால்வெளி கொண்டுள்ளது. இதில் முதிர் அகவையுள்ள, அதாவது 7×109 ஆண்டுகளுக்கும் கூடுதலான அகவைகொண்ட விண்மீன்கள் கணிசமாக உள்ளன.[40] மேலும் மெ31 இன் மதிப்பீட்டு ஒளிர்மை, தோராயமாக 2.6×1010|link=y}} சூரிய ஒளிர்மையைக் கொண்டுள்ளது. இது நமது பால்வழியைவிட 25% அளவு உயர்வானதாகும்.[48] என்றாலும் இந்தப் பால்வெளி புவியில் இருந்து பார்க்கும்போது உயரளவு சாய்வைப் பெற்றுள்ளது. இதன் உடுக்கணவெளித் தூசு நாமறியாத அளவு ஒளியை உறிஞ்சுகிறது.. எனவே இதன் உண்மையான பொலிவைக் கண்டறிதல் முடியவில்லை. சோம்பிரெரோ பால்வெளிக்குப் பிறகு நமது பால்வெளியில் இருந்துள்ள 10 மெகா மெகா பர்செக் ஆரத்திற்குள்ளே இதுதான் இரண்டாவது உயர்பொலிவுள்ள பால்வெளியென பிற வானியலாளர்கள் கூறுகின்ற்னர்.[49] with an absolute magnitude of -22.21[c])

சுபிட்சர் விண்தொலைநோக்கியால் 2010 இல் செய்த ஆய்வின்படி, மிக அண்மைய மதிப்பீடு, நீல நெடுக்கத்தில் அமையும் தனிப்பருமை மதிப்பு −20.89 ஆகும். இதன் நிறச்சுட்டு +0.63 ஆகும். இம்மதிப்பு −21.52 தனிப்பருமைக்குச் (நீலப்பருமைக்குச்) சமமாகும். நமது பால்வழியின் தனிப்பருமை −20.9 ஆகும். சூரிய ஒளிர்மையின் அலைநீளத்தில் அமைந்த மொத்த ஒளிர்மை யில் இது 3.64×1010 மடங்காகும்.[50]

நம் பால்வழி 3 முதல் 5 சூரியப் பொருண்மையளவு வீத்த்தில் விண்மீன்களை ஓராண்டில் உருவாக்க, ஆந்திரமேடா பால்வெளி ஒரு சூரியப் பொருண்மையளவு வீத்த்திலேயே விண்மீன்களை உருவாக்குகிறது. மேலும் நம் பால்வழியின் மீப்பெரு விண்மீன் வெடிப்பு வீதமும்மெ31 ஐப் போல இருமடங்காகும்.[51] இதில் இருந்து பேரளவு விண்மீனாக்க்க் கட்டத்தைப் பெற்றிருந்த மெ31 இப்போது அமைதிநிலையை அடைந்துள்ளது எனத் தெரியவருகிறது. அனால் நம் பால்வழி இப்போது கூடுதலான விண்மீனாக்கக் கட்டத்தில் உள்ளது.[48] இது தொடர்ந்தால் நம் பால்வழி மெ31 ஐவிட கூடுதலன பொலிவைப் பெறும்.

அண்மைய ஆய்வுகளின்படி, ஆந்திரமேடா பால்வெளியும் பால்வழியைப் போலவே பால்வெளி நிற விளக்கப் படத்தில் பசுமைப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. அதாவ்து புதிய விண்மீன்கள் முனைப்போடு உருவாகும் நீலமுகில் க்ட்ட்த்தில் இருந்து விண்மீன்களருகலாக உருவாகும் செவ்வரிசைக் கட்ட்த்துக்குப் பெயர்ந்துக் கொண்டிருக்கிறது. உடுக்கன வெளியில் விண்மீனாக்க வளிமம் பசுமைப் பள்ளத்தாக்குப் பால்வெளிகளில் அருகிவிட்ட்தால், விண்மீனாக்கமும் மட்டுபடுகிறது. இவற்றையொத்த பிற பால்வெளிகளின் ஒப்புருவாக்க ஆய்வுகள் இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளில் விண்மீனாக்கமே குன்றிவிடும் என அறிவித்துள்ளன. இது வருங்காலத்தில் ஏற்படவுள்ள பால்வழி, ஆந்திரமேடா மோதல்நிலையைக் கருதினாலும் நிகழும் என்பது இப்போது உறுதிப்பட்டுள்ளது.[52]

கட்டமைப்பு

நாசாவின் நாற்பெரும் வான்காணகங்களில் ஒன்றான சுபிட்சர் விண்தொலைநோக்கி வழியாக்க் கண்ணுற்ற ஆந்திரமேடா பால்வெளியின் அகச்சிவப்புக் கதிர்க் காட்சி
24 மைக்ரோமீட்டர் அகச்சிவப்பு அலைநெடுக்கத்தில் சுபிட்சர் விண் தொலைநோக்கி வழியாகக் கண்ணுற்ற ஆந்திரமேடாவின் உருப்படிமம் (Credit:தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/JPL–கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்/K. Gordon, அரிசோனா பல்கலைக்கழகம்)
ஆந்திரமேடாவின் சுவிஃப்ட் கலக்கடப்பின்போது, காமாக்கதிர் வெடிப்புக் காட்சி
ஆந்திரமேடாவின் பால்வெளித் தேட்டக் கலம் பிடித்த உருப்படிமம். பால்வெளியின் வலயங்களை உருவாக்கும் நீலவெண் பட்டைகள் பெருந்திரளான சூடுள்ள இளம் விண்மீன்களின் இருப்பிடத்தைக் குறிக்கின்றன. இந்தப் பொலிவுமிக்க வலயங்களுக்கு முரணாக, குளிர்ந்த கருநீலச் சாம்பல் தூசுச் சந்துகள் விளங்குகின்றன. இது இப்போது விண்மீனாக்கம் நிகழும் அடர் வளிம முகில் கூடுகளின் வட்டாரங்களைத் தெளிவாக அறிய உதவுகிறது. கட்புல ஒளியில் ஆந்திரமேடா வலயங்கள் சுருண்ட கையைப் போல தோன்றுகின்றன. புற ஊத்தாக்கதிர்க்காட்சியில் இந்தக் கைகள், நாசாவின் முந்தைய சுபிட்சர் விண் தொலைநோக்கியால் கண்ட அகச்சிவப்புக் கதிர அலைநீளங்களோடு ஒத்துள்ள கட்டமைப்புடன் காணப்படுகிறது. இந்த வலயங்கள் 200 மில்லியன் ஆண்டுகட்கு முன் அருகிருந்த மெ31 உடன் நடந்த மெ32 வின் மோதலை நிறுவுவதாக வனியலாளர்கள் கருதுகின்றனர்.

கட்புலத் தோற்றத்தைச் சார்ந்து ஆந்திரமேடா பால்வெளி சுருள்பால்வெளிகளின் வௌகவுலியர்-சாந்தேகு பால்வெளி வகைப்பாட்டில் SA(s)bவகைப் பால்வெளியாகப் பகுக்கப்படுகிறது.[53] என்றாலும், 2MASS அளக்கைத் தரவுகளின்படி மெ31 உப்பல் பெட்டிவடிவம் உடையதாகத் தெரிகிறது. எனவே ஆந்திரமேடாவும் பால்வழியைப் போல சட்டநீட்சி சுருள்பால்வெளியாக அமைதல் தெரிகிறது. ஆந்திரமேடாவை நேரடியாகக் காணும்போது, இதன் சட்டநீட்சி பால்வெளியின் நீண்ட அச்சில் அமைகிறது.[54]

கெக் தொலைநோக்கிகள் வழியாக 2005 இல் வானியலாளர்கள் பால்வெளியின் வெளியே பரந்தமைந்த விண்மீன்களின் தெளிப்புகள் முதன்மை வட்டின் பகுதியே எனக் கண்டறிந்தனர்.[37] எனவே மெ31 விண்மீன்களின் சுருள்வட்டின் விட்டம் முன்பு மதிப்பிட்டதை விட மும்மடங்கு பெரியது என மதிப்பிட்டனர். இதனால் ஆந்திரமேடாவின் விரிந்து நீணட உடுக்கண வட்டு 220000ஒளியாண்டுகள்/பார்செக்குகள் விட்டம் கொண்டுள்ளது எனலாம். முன்பு இது 70000 முதல் 120000 ஒ.ஆ/பா.செ குறுக்கு விட்டம் கொண்டதாகவே கருதப்பட்டது.

நம் புவியுடன் ஆந்திரமேடா பால்வெளி பக்கவாட்டாக 90 பாகை சாய்ந்துள்ளதுபோல தோன்றினாலும் உண்மையில் அது 77 பாகையளவே சாய்ந்துள்ளது. இது குறுக்குவெட்டில் தட்டையானதல்ல, மாறாக தெளிவான S-வடிவ நெளிவு கொண்டுள்ளது எனப் பகுப்பாய்வில் அறியப்பட்டுள்ளது.[55] இந்நெளிவு மெ31 ஐச் சுற்றியமைந்த துணைப் பால்வெளிகளின் ஊடாட்டத்தால் ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கோணியம் பால்வெளியான மெ33, மெ31 இன் சுருள்கைகளிலும் நெளிவை உருவாக்குகிறது.

அகட்டில் இருந்துள்ள ஆரத் தொலைவின் சார்பாக, மெ31 இன் சுழல் விரைவு அளவீடுகள் விரிவாக கதிர்நிரல் ஆய்வுகளில் எடுக்கப்பட்டுள்ளன.அகட்டில் இருந்து 1300 ஒ.ஆஆ ஆரத்தில் இதன் பெரும மதிப்பு நொடிக்கு 225 கி.மீ ஆகும். 700 ஒ.ஆஆ ஆரத்தில் இதன் சிறும மதிப்பு நொடிக்கு 50 கி.மீ ஆகும். மேலும் வெளியே இதன் சுழல்விரைவு 33000 ஒ.ஆ ஆரத்தில் நொடிக்கு 250 கி.மீ உச்ச மதிப்பை அடைகிறது. இந்த தொலைவுக்குப் பிறகு சுழல்விறைவு மெல்ல குறைந்து கொண்டே போகிறது. இது 80,000 ஒ.ஆ ஆரத்தில் 200 கி.மீ ஆக்க் குறைகிறது. இந்த சுழல் விரைவு அளவீடுகள் இப்பால்வெளி உட்கருவில் 6 மடங்கு சூரியப் பொருண்மையளவுக்கு பொருண்மை செறிந்துள்ளதைக் காட்டுகின்றன. பால்வெளியின் பொருண்மை 45,000ஒ.ஆ ஆரம் வரை நேர்விகித்த்தில் கூடுகிறது. பிறகு இந்த ஆரத்துக்கப்பால் மெதுவாகவே உயர்கிறது.[56]

வால்டேர் பாதே முதன்முதலாக ஆய்ந்த மெ31 இன் சுருள்கைகளில் H II வட்டாரங்கள் தொடராக அமைந்திருந்தன. இவற்றை அவர் மாலையில் கோத்த மணிகள் போல இருந்த்தாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது ஆய்வில் இரண்டு நெருக்கமாகச் சுற்றியுள்ள சுருள்கைகள் நம் பால்வழியை விட பெரும்பரப்பில் பரவியுள்ளமை கண்டறியப்பட்டன.[57] ஒவ்வொரு சுருள்கையும் முதன்மை அச்சைக் குறுக்கிட்டுச் செல்வதால், சுருள்கட்டமைப்பைப் பற்றிய அவரது விவரிப்புகள் பின்வருமாறு அமையும்.[58]§pp1062[59]§pp92:

மெ31 இன் பாதே சுருள்கைகள்
கைகள் (N=வடக்கில் குறுக்கிடும் மெ31 பேரச்சு, S=தெற்கில் குறுக்கிடும் மெ31 பேரச்சு)மையத் தொலைவு (வில் மணித்துளிகளில்) (N*/S*)மையத்தொலைவு (கிலோபார்செக்) (N*/S*)குறிப்புகள்
N1/S13.4/1.70.7/0.4தூசுக்கைகள், OB இணைவுகள் அற்ற HII வட்டாரங்கள்.
N2/S28.0/10.01.7/2.1தூசுக்கைகள், சில OB இனைவுகளுடன்.
N3/S325/305.3/6.3N2/S2 போன்ற, ஆனால் சில HII வட்டாரங்களுடன்.
N4/S450/4711/9.9OB இணைவுகள் கொண்ட நீண்ட கைகள், HII வட்டாரங்களுடனும் கொஞ்சம் துசுடனும்.
N5/S570/6615/14N4/S4 போன்ற, ஆனால் மங்கலானது.
N6/S691/9519/20தளர்ந்த OB இணைவுகளுடன். தூசேதும் காணப்படவில்லை.
N7/S7110/11623/24N6/S6 போன்ற ஆனால் மங்கலானது; பார்க்கமுடியாதது.

ஆந்திரமேடா பால்வெளி விளிம்புப் பக்கமாகப் பார்க்கப்படுவதால் இந்நிலையில் இதன் சுருள்கட்டமைப்பை ஆய்வது அவ்வளவு எளிதல்ல. என்றாலும் இதன் திருத்திய உருப்படிமம் வலதாகச் சுருண்டுள்ள கைகளைக் கொண்ட இயல்பான சுருள்பால்வெளியாகத் தோன்றுகிறது. இந்த கைகள் தொடர்ச்சியாக 1300 ஒ.ஆ தொலைவு இடைவெளி விட்டு விலகியவாறு சுருண்டபடி, அகட்டில் இருந்து 1600 ஒ.ஆ தொலைவு வரை வெளிப்புறமாகப் பரவியுள்ளன. வேறு மாற்றுக் கட்டமைப்புகளாக ஒற்றைச் சுருள் கட்டமைப்பும் [60] கம்பள முகில்வடிவ சுருள் பால்வெளிக் கட்டமைப்பும் முன்மொழியப்பட்டுள்ளன.[61] பின்னது நீண்ட திண்படலச் சுருள்கைகளைக் கொண்டதாகும்.[53][62]

ஆந்திரமேடா பால்வெளிச் சுருள் அமைவின் குலைவு மெ32, மெ110 ஆகிய பால்வெளிகளின் ஊடாட்டத்தால் விளைகிறது.[63] இதை விண்மீன்களில் இருந்து விலகும் நொதுமல் நீரக முகில்களின் எச்-1 வட்டார இடப்பெயர்ச்சியால் அறியலாம்.[64]

ஆந்திரமேடா பால்வெளியின் ஒட்டுமொத்த வடிவம் வலயப் பால்வெளியாக மாறுவது, 1998 இல் அகச்சிவப்புக்கதிர் வான்காணகத்தில் ஐரோப்பிய விண்வெளி முகமையம் எடுத்த அகச்சிவப்புக்கதிர படிமங்களில் இருந்து அறியப்பட்டது. மெ31 இல் உள்ள வளிமமும் தூசும் பொதுவாக ஒன்றின்மீது ஒன்று படிந்த வலயங்களாக அமைதலும் இவற்றில் குறிப்பாக அகட்டில் இருந்து 32,000 ஒ.ஆ ஆரத்தில் உள்ள வலயம் முதன்மையான வலயமாக அமைதலும் தெரிந்த்து.[65] nicknamed by some astronomers the ring of fire.[66] இது பெரிதும் குளிர்ந்த தூசால் ஆகியுள்ளதால் இந்த வலயம் பால்வெளியின் கட்புல படிமங்களால் மறைக்கப்படுகிறது. மெ31 இன் பெரும்பாலான விண்மீனாக்கம் இங்கு தான் செறிவாக நடைபெறுகிறது.[67]

சுபிட்சர் தொலைநோக்கியைக் கொண்டு பின்னர் செய்த ஆய்வுகளில் இருந்து ஆந்திரமேடா பால்வெளியின் அகச்சிவப்புக்கதிர்ப்படிமத்தில் இருசுருள்கைகள் நடுச்சட்டம் ஒன்றில் இருந்து புறப்பட்டு மேலே குறிப்பிட்ட பெருவலயத்துக்கு அப்பாலும் தொடர்வது அறியப்பட்டது. இந்தக் கைகள் தொடர்ச்சியாக அமையாமல் துண்டு துண்டான கட்டமைப்போடு உள்ளன.[63]

அதே தொலைநோக்கியால் மேலும் ஆழமாக மெ31 பால்வெளியின் உட்பகுதியை ஆய்வு செய்தபோது உள்ளே ஓர் உள்தூசு வலயம் இருப்பது தெரியவந்தது. இந்த் உள்தூசு வலயம் மெ31 200மில்லியன் ஆண்டுகட்கு முன்பு மெ32வுடன் நிகழ்ந்த ஊடாட்ட்த்தால் உருவாகியுள்ளது. சிறிய பால்வெளி, ஆந்திரமேடாவின் வட்டை பின்னதன் முனையிணைக்கும் அச்சூடாகக் கடந்து சென்றுள்ளது. இந்த மோதலால் மெ32 இன் பாதியளவுப் பொருண்மை இழக்கப்பட்டுள்ளது. இந்த பொருண்மை இழப்பே ஆந்திரமேடாவின் உள்தூசு வலயமாக மாறியுள்ளது.[68]மெசியர் 31 இன் பெருவலயமும் சற்றே பொருண்மை மையத்தைத் தள்ளியமைந்த புதிதாக உருவாகிய உள்தூசு வலயமும் ஒருங்கே நிலவுதல் இந்த இருபால்வெளிகளும் நேரடியாக, வண்டிச் சக்கரம் போல, மெல்ல மோதியதை நிறுவுகிறது.[69]

மெ31 இன் வெளிப்பெரு வளிம வட்ட அய்வுகள் இது ஓரளவு பால்வழியைப் போலவே வெளிப்பெரு வளிம வட்ட விண்மீன்கள் தாழ்பொன்மத் தன்மையுள்ளனவாக அமைகின்றன. அகட்டில் இருந்து தொலைவு கூடக்கூட இது மேலும் பொன்மத் தன்மை இழப்பு காணப்படுகிறது.[36] இந்தச் சான்று இரு பல்வெளிகளுமே ஒத்த பால்வெளிப் படிமர்ச்சித் தட்த்தைப் பின்பற்றியுள்ளன என்பதைக் காட்டுகிறது. இவை கடந்த 12 பில்லியன் ஆண்டுகளில் 100 முதல் 200 தாழ்பொருண்மை பால்வெளிகளில் இருந்து அகந்திரள்வால் தன்மயமாகிப் படிமலர்ந்துள்ளன எனத் தெளிவாகிறது.[70] இரு பால்வெளிகளையும் பிரிக்கும் தொலைவில் மூன்றிலொரு பகுதிவரை, மெ31, பால்வழி ஆகிய இரண்டன் வெளிப்பெருவட்ட விண்மீன்கள் பரவியுள்ள்ன.

உட்கரு

ஆந்திரமேடா பால்வெளி அகட்டின் இரட்டைக் கட்டமைப்பைக் காட்டும் HST உருப்படிமம். தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)/ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் photo

அதன் நடுமையத்தில் மெ31 அட்ர்ந்த விண்மீன் கொத்தைப் பெற்றுள்ளது. பெரிய தொலைநோக்கிகளில் பார்க்கும்போது விரவிப் பரந்த உப்பலுக்குள் உட்பொதிந்த விண்மீன் கட்புலக் காட்சி தெரிகிறது. இந்த உட்கருவின் ஒளிர்மை மிக உயர்பொலிவுள்ள பெஉங்கொத்துகளை விட கூடுதலாக அமைவது புலப்படுகிறது.[சான்று தேவை]

சந்திரா X-கதிர் வான்காணகத்தின் சந்திரா X-கதிர் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட மெ31 இன் மையப்பகுதிப் படிமம். ஆந்திரமேடாவின் மையப்பகுதியில் உள்ள பல X-கதிர் வாயில்கள், (இவை X-கதிர் இரும விண்மீன்களாக இருக்கலாம்) மஞ்சட் புள்ளிகளாகக் காட்டப்பட்டுள்ளன. மையத்தில் உள்ள நீலநிற வாயில் பெரும்பொருண்மையுள்ள கருந்துளையாகும்.

அகல்புல கோளியல் ஒளிப்படக் கருவியால் 1991 இல் தோட் ஆர். இலௌவேர் (Tod R. Lauer) என்பார் மெ31இன் அக உட்கருவைப் படம் எடுக்க ஃஅப்புள் விண்வெளி தொலைநோக்கி விண்கலத்தில் இருந்தார். அப்போது உட்கரு 1.5 பார்செக் இடைவெளி விட்ட இரு செறிவுகளாக்க் காணப்பட்டது. பி1 எனும் பொலிவுமிக்க செறிவு பால்வெளியின் மையத்தைத் தள்ளி அமைந்திருந்தது. பி2 எனும் பொலிவு குன்றிய செறிவு பால்வெளியின் உண்மையான மையத்தில் இருந்தது. அதில் 3–5 × 107 அளவுக்குச் சூரியப் பொருண்மையுள்ள கருந்துளை ஒன்று 1993 இல் பார்வையிட்டபோது இருந்தது.[71] and at 1.1–2.3 × 108 M in 2005.[72] அதைச் சூழ்ந்த பொருள்களின் விரைவு இறக்கம் நொடிக்குத் தோராயமாக 160 கி.மீ ஆக அமைந்திருந்த்து.[73]

இசுகாட் திரெமைன் நடுக் கருந்துளையைச் சுற்றியமைந்த மையவிலகிய வட்டணையில் உள்ள விண்மீன்களின் வட்டின் நீட்சியாக பி1 இருந்தால் நோக்கப்பட்ட இரட்டை உட்கருக்களை எளிதாக விளக்கலாம் என முன்மொழிந்தார்.[74] வட்டணையின் அண்மிய மையத்தில் விண்மீன்கள்செறிந்துள்ளபடி இந்த மையவிலக்கம் அமையவேண்டும். பி2 உம் A வகை விண்மீன்களால் ஆகிய சூடான குறுவட்டாக அமையவேண்டும். சிவப்ப வடிப்பிகளில் A வகை விண்மீன்கள் தெரிவதில்லை. ஆனால் இவை நீல, புற ஊதா நிற வடிப்பிகளில் உட்கருவில் அவை ஓங்கலாக அமைகின்றன. எனவே இவ்வடிப்பிகளில் பி1 ஐவிட பி2 பொலிவோடு தெரிகிறது.[75]

இந்தப் பால்வெளிக் கண்டுபிடிப்பின் தொடக்கக் காலத்தில் உட்கருவின் பொலிவுகூடிய பகுதி ஆந்திரமேடாவால் (மெ31 ஆல்) விழுங்கப்பட்ட சிறுபால்வெளியின் எச்சமாக்க் கருதப்பட்டது.[76] இப்போது இவ்விளக்கம் அத்தகைய பால்வெளி நடுக் கருந்துளையின் ஓத விசையால் குலைக்கப்பட்டு மிகக் குறுகிய வாழ்நாளில் தன்மயமாகி இருக்கும் என்பதால் சரியென ஏற்கப்படுவதில்லை. பி1 இன் நடுவில் ஒரு கருந்துளை அமைந்தால் விளக்கம் பொருந்தியிருக்கலாம். ஆனால் பி1 இன் விண்மீன்களின் பரவல் அத்தகைய கருந்துளையேதும் அதில் நிலவ்வில்லை என்பதை சுட்டுகிறது.[74]

தனி X-கதிர் வாயில்கள்

ஆந்திரமேடா பால்வெளி அகடு பற்றிய ஓவியரின் கருத்துப்படிமம். இதில் பெரும்பொருண்மைக் கருந்துளையைச் சுற்றும் நீலநிற விண்மீன்களின் இளம்வட்டுக் குறுக்குக் காட்சி அமைகிறது. நாசா/ESA photo

ஆந்திரமேடா பால்வெளியில் இருந்து 1968 இறுதி வரை X-கதிர்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.[77] முன்பு 1970 அக்தோபர் 20இல் மேற்கொண்ட வளிமக்குமிழ் பயணம் மெ31 இன் வலிய X-கதிர்களைக் கண்டறிவதற்கான மேல்வரம்பைத் தீர்மானித்தது.[78]

பிறகு ஐரோப்பிய விண்வெளி முகமையம் வட்டணையில் சுற்றும் XMM-நியூட்டன் வான்காணகத்தையும் இராபின் பெர்னார்டு வான்காணகத்தையும் போன்ற விண்கல வான்காணகங்களைப் பயன்படுத்தி, ஆந்திரமேடா பால்வெளியின் பல X-கதிர் வாயில்களைக் கண்டுபிடித்துள்ளது. இவை வகைமைக் கருந்துளைகளாகவோ அல்லது நொதுமி விண்மீன்களாகவோ கருத்ப்படுகின்றன. இவை உள்வரும் வளிமத்தைபலமில்லியன் கெல்வின் பாகையளவுக்கு வெப்பநிலையை உயர்த்தி X-க்திர்களை உமிழச் செய்கின்றன. கருந்துளை, நொதுமி விண்மீன் கதிர்நிரல்கள் ஒன்றேபோல அமைகின்றன. ஒரே வேறுபாடு அவற்றின் பொருண்மைகளுக்கிடையே நிலவும் வேறுபாடே ஆகும்.[79]

ஆந்திரமேடா பல்வெளியில் தோராயமக 400 களவிண்மீன் கொத்துகள் உள்ளனy.[80] இவற்ரில் மிகவும் பொருண்மையுள்ல விண்மீன்கொத்து மாயல் IIஎன இன்ங்காணப்பட்டுள்ளது. இது ஜி1 எனப் பெயெரிடப்பட்டுள்ளது. இதன் பொலிவு பால்வெளியில் உள்ள வேறெந்த கள விண்மீன் கொத்தினையும் விட பொலிவு மிக்கதாகும் .[81] இதில் பல மில்லியன் விண்மீன்கள் உள்ளன. இது நம் பால்வழியில்உள்ள கள விண்மீன்கொத்துகளில் மிகுந்த பொலிவுகொண்ட ஆல்பா சென்டாரியைப் போல இருமடங்கு பொலிவுடன் காணப்படுகிறது. இது பல உடுக்கணத்திரள்களைக் கொண்டுள்லது. எனவே இது இயல்பன விண்மீன்கொத்தைவிட பொருண்மை மிக்கதாக உள்ளது. இதனால், சிலர் இதை மெ31 ஆல் கடந்த காலத்தில் உள்விழுங்கப்பட்ட தனியான குறும்பால்வெளியாகவே கருதுகின்றனர் .[82] மிக உயர்ந்த தோற்றப் பொலிவுள்ள வின்மீன்கொத்து ஜி76 ஆகும். இது கீழரைக்கோளத்தில்தென்மேற்குக் கையில் உள்ளது..[13]

பிறகு 2006 இல் கண்டறியப்பட்ட 037-B327- எனும் விண்மீன்கொத்து ஆந்திரமேடா பால்வெளியின் உடுக்கணவெளித் தூசால் மிகவும் சிவப்பாக்கப்பட்ட 037-B327- எனும் விண்மீன்கொத்து, ஜி1 ஐ விட பொருண்மைகொண்டதும் களவிண்மீன் கொத்துகளில் எல்லாம் மிகப் பெரியதும் ஆகும்;[83] என்றாலும் இது அனைத்துப் பான்மைகளிலும் ஜி1 ஐப் போன்றதாகவே அமைதல் அறியப்பட்டுள்ளது.[84]

ஆந்திரமேடா பால்வெளியில் உள்ள விண்மீன்கொத்து.[85]

நம் பால்வழியின் களவிண்மீன் கொத்துகளைப் போல குறைந்த அகவைப் பரவலாக இல்லாமல் ஆந்திரமேடா களவிண்மீன் கொத்துகள் பெரிய அகவை நெஉக்கம் கொண்டவையாக உள்ளன: இவற்றில் சில பால்வெளியின் அகவையுடனும் பிற மிகவும் இளையனவாகவும் உள்ளன. அதாவது இவற்றில் சில, சிலநூறு மில்லியன் ஆண்டகவையும் பிறவோ சில பில்லியன் ஆன்அகவையும் கொண்டமைகின்றன.[86]

வானியலாளர்க்ள் 2005 இல் மெ31 இல் புதுவகை விண்மீன் கொத்தைக் கண்டுபிடித்தனர். புதியதாக கண்டறிந்த விண்மீன் கொத்தில் பலநூறாயிரம் விண்மீன்கள் அடங்கியிருந்தன. இந்த விண்மீன்களின் எண்ணிக்கை கோளவடிவக் கொத்துகள நிகர்த்ததாக இருந்தாலும் அவை பல நூறு ஒளியாண்டுகள் குறுக்களவில் பரவியிருந்த்தோடு, பல நூறு மடங்கு அடர்த்தி குறைந்தனவாயுமுள்ளன. எனவே இது புதிதாகக் கண்டறிந்த விரிநிலைக் கொத்துகளை விட பெரிய பரப்பில் அமைந்திருந்தது.[87]

மேலும் 2012 ஆம் ஆண்டில் ஆந்திரமேடா வெளிக்குள் ஒரு நுண்குவாசாரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுண்குவேசார் என்பது சிறுகருந்துளையில் இருந்து உமிழப்படும் கதிர்வீச்சு வெடிப்பாகும். இந்தக் கருந்துளை 10 மடங்கு சூரியப் பொருண்மையுடன் பால்வெளி மையத்தின் அருகே இருந்தது| ]].இது முதலி ஐரோப்பிய முகமையால் XMM-நியூட்டன் ஆய்கலத்தால் கண்டறியப்பட்ட்து. பின்னர் நாசாவின் சுவிஃப்ட், சந்திரா X-கதிர் வான்காணகம் ஆகியவற்றின் முகுநீளணியாலும் முகுநீள் அடிக்கோட்டு அணியாலும் உறுதிபடுத்தப்பட்டது. இந்த நுண்குவேசார் தான் ஆந்திரமேடா பால்வெளியில் கண்டறிந்த முதல் நுண்குவேசார் ஆகும். இதுவே பால்வழிக்கப்பால் கண்டறிந்த முதல் குவேசாரும் ஆகும்.[88]

துணைப் பால்வெளிகள்

நமது பல்வழியைப் போலவே அந்திரமேடா பால்வெளியையும் 14 குறும்பால்வெளிகள் சுற்றிவருகின்றன. இவற்றில் நன்கு கண்ணுக்குப் புலப்படுபவை, மெ32, மெ110 ஆகிய நீள்வட்டக் குறும்பால்வெளிகளாகும். நடப்புச் சான்றுகளின்படி, மெ32 மெ31 உடன் மோதி, தன் உடுக்கண வட்டின் ஒருபகுதியை மெ31 இடம் இழந்துவிட்டுள்ளது. இதனால் மெ32 இன் அகட்டில் விண்மீனாக்கம் முடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு அண்மைக் கடந்த காலம்வரை தொடர்ந்துள்ளது.[89]

மெ110 உம் கூட மெ31 உடன் இடைவினை புரிகிகிறது. மேலும் வானியலாலர்கள் மெ31 இன் புற வளிம வட்டத்தில் பொன்மச்செறிவு விண்மீன்களைக் கண்டுள்ளனர். இவை பிற துணைப் பல்வெளிகளிடம் இருந்து பெறப்பட்டவையாகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.[90] மெ110 இல் தூசுகவிந்த சந்து உள்ளதால், இது அதில் நிகழும் விண்மீனாக்கத்தைக் காட்டுகிறது.[91]

இந்த 9 துணைப் பால்வெளிகளின் பொதுத்தளம் 2006 ஆய்வின்படி, தனித்தனி ஊட்ட்டங்களின்படி ஆங்காங்கே தாறுமாறாக இல்லாமல், ஆந்திரமேடா பால்வெளியின் அகட்டை வெட்டும் தளத்தில் அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது துணைப்பால்வெளிகளின் பொது ஈர்ப்புவழித் தோற்றத்தைக் காட்டுகிறது.[92]

நமது பால்வழியுடன் மோதல்

ஆந்திரமேடா பால்வெளி நமது பால்வழியை நொடிக்கு 110 கி.மீ வேகத்தில் நெருங்கிக் கொண்டுள்ளது.[93] சூரியனை நோக்கி அது நொடிக்கு 300 கி.மீ வேகத்தில் நெருங்கிக் கொண்டுள்ளது என அளக்கப்பட்டுள்ளது.[53] சூரியன் நமது பால்வழி மையத்தை நொடிக்கு 225 கி.மீ வேகத்தில் சுற்ரி வருகிறது. எனவே தன் நாம் ஆந்திரமேடாவை நீலப்பெயர்ச்சிப் பால்வெளிகளில் ஒன்றாகப் பார்க்கிறோம். பால்வழியோடு ஒப்பிட்ட ஆந்திரமேஆவின் தொடுகொட்டு விரைவு அப்பால்வெளி நெருங்கும் விரைவை விட மிகவும் குறைவாக உள்ளதால் 4 பில்லியன் ஆண்டுகளில் ஆந்திரமேடா நம் பால்வழியை நேரடியாக மோதும் என எதிர்பர்க்கப்படுகிறது. இந்த மோதலின் விளைவால் மேலும் பெரிய வளிம வட்டுள்ள ஒரு மாபெரும் நீள்வட்டப் பால்வெளி உருவாகலாம்.[10][94] இது பால்வெளிக் குழுக்களில் இயல்பாக நிகழ்வதே.அப்போது நம் புவியும் சூரியனும் என்னவாகும் என்பது இதுவரை அறிய முடியாததாகவே உள்ளது. ஒருவாய்ப்பு, பால்வெளிகளின் மோதலுக்கு முன்பே நம் சூரியக் குடும்பமே ஒட்டுமொத்தமாக நம் பால்வழியில் இருந்து வெளியே வீசி எறியப்படலாம் அல்லது மெ31 இல் இணையலாம் என எதிர்பார்க்கலாம்.[95]

[96]

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அந்திரொமேடா_பேரடை&oldid=3604479" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்