அதானி குழுமம்

அதானி குழுமம் குஜராத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது 1988 ஆம் ஆண்டில் கௌதம் அதானி என்பவரால், முதன்மை நிறுவனமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (முன்பு அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்) ஒரு பொருள் வர்த்தக நிறுவனமாக நிறுவப்பட்டது. இதன் தலைவராக கௌதம் அதானி உள்ளார். இந்நிறுவனத்தின் பல்வேறு வணிக ஆற்றல், வளங்கள், தளவாடங்கள், வேளாண் வணிகம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆகியவை அடங்கும்.[2] இக்குழுவின் வருடாந்த வருவாய் 13 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த நிறுவனம் 50 நாடுகளில் 70 இடங்களில் செயல்படுகிறது. [3] இது இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக உருவாக்குநர் மற்றும் இயக்கும் நிறுவனமாகும், இது முந்த்ரா துறைமுகம் உட்பட பத்து துறைமுகங்கள் மற்றும் டெர்மினல்களைக் கொண்டுள்ளது.[4] சிங்கப்பூரில் உள்ள வில்மர் இன்டர்நேஷனலுடன் ஒரு கூட்டு முயற்சியின் மூலம், இக்குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் பிராண்டான "பார்ச்சூனை" சொந்தமாக் கொண்டுள்ளது. [5]

அதானி குழுமம்
வகைபொது
நிறுவுகை20 ஜீலை 1988; Error: first parameter cannot be parsed as a date or time. (20 ஜீலை 1988)
நிறுவனர்(கள்)கௌதம் அதானி
தலைமையகம்அகமதாபாத், குசராத், இந்தியா
சேவை வழங்கும் பகுதிGlobal
முதன்மை நபர்கள்கௌதம் அதானி
(தலைவர்)
தொழில்துறைகுழுமம் (நிறுவனம்)
சேவைகள்வளங்கள், தளவாடம், ஆற்றல் & வேளாண் வணிகம்
வருமானம்US$ 13 Billion[1]
பிரிவுகள்அதானி என்டர்பிரைசஸ் லிட்
அதானி துறைமுகம் & சிபொவ
அதானி பவர்
அதானி டிரான்ஸ்மிசன்
இணையத்தளம்www.adani.com

2023 மோசடி குற்றச்சாட்டுகள்

2023 சனவரியில், இண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தன் இரண்டு ஆண்டு விசாரணை முடிவுகளை வெளியிட்டது. அதில் அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்தி காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறியது. இது "கார்ப்பரேட் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மோசடி" [6] என்றும் "பல தசாப்தங்களாக வெட்கக்கேடான பங்கு முறைகேட்டிலும், கணக்கியல் மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளது" என்றது. [7] இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அதானியுடன் தொடர்புடைய நிறுவனங்களின் பத்திரங்கள், பங்குகள் சந்தை மதிப்பில் $104 பில்லியனுக்கும் அதிகமான சரிவைச் சந்தித்தது.[8][9][10] இந்தச் சரிவு சந்தை மதிப்பில் தோராயமாக பாதி ஆகும்.[11] ஹெட்ஜ் நிதி மேலாளர் பில் அக்மேன், இண்டன்பர்க்கின் அதானி குறித்த அறிக்கை "மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததும், மிக நன்றாக ஆய்வு செய்யப்பட்டது" என்று கூறினார்.[12][13] அதானி மோசடி குற்றச்சாட்டுகளை மறுத்தார்.[14]

சனவரி 29 அன்று, அதானி இண்டன்பர்க் அறிக்கைக்கு 413 பக்க பதிலை வெளியிட்டார். அதில் "ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது. இதை குறிப்பிட்ட ஒரு தனியார் நிறுவனம் மீதான தாக்குதல் என கருத முடியாது. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி, எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் ஆகும்" என்றார்.[15] இண்டன்பர்க் தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அதானி குழுமம் உரிய பதிலலிக்கவில்லை என்று கூறியது.[16] பிப்ரவரி முதல் நாளன்று, சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கத்தை காரணம் காட்டி அதானி தனது பங்கு வெளியீட்டை இரத்து செய்தார். மேலும் பங்குக்காக செலுத்திய பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதாக அறிவித்தார்.[17] இந்திய ரிசர்வ் வங்கி அதானி நிறுவனங்களின் செயல்பாடு குறித்த விவரங்களை வங்கிகளிடம் கேட்பதாக கூறியது.[18] இந்த சிக்கங்களின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்கு பத்திரங்களை பிணையாக கொண்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குவதை சிட்டி வங்கி நிறுத்தியது.[19] கிரெடிட் சூஸ் குரூப் ஏஜி தனது தனியார் வங்கி வாடிக்கையாளர்களின் கடன்களுக்கான பிணையமாக கௌதம் அதானியின் குழும நிறுவனங்களின் பங்கு பத்திரங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியது.[20][21] S&P Dow Jones Indices has knocked Adani Enterprises off its sustainability index.[22] இது தவிர, அதானி குழுமம் இந்தியாவில் திருப்பத் திரும்ப கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதற்கு தீவிரமாக ஆதரவளித்ததாக அரசாங்கமும், பாஜகவும் விமர்சிக்கபட்டது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அதானி_குழுமம்&oldid=3955266" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்