அண்ணன் (திரைப்படம்)

அனு மோகன் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்ணன் (Annan) 1999 ஆம் ஆண்டு ராமராஜன் மற்றும் சுவாதி நடிப்பில், இளையராஜா இசையில், அனு மோகன் இயக்கத்தில், டி. சீனிவாசன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4]

அண்ணன்
இயக்கம்அனு மோகன்
தயாரிப்புடி. சீனிவாசன்
கதைஅனு மோகன்
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுடி. தாமோதரன்
படத்தொகுப்புபி. கிருஷ்ணகுமார்
கலையகம்மைசன் பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 29, 1999 (1999-03-29)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

வேலன் (ராமராஜன்) கிராமத்திலுள்ள சந்தையை நிர்வகிப்பவன். அவனது தங்கை லட்சுமியின் (அபூர்வா) மீது மிகுந்த பாசம் உடையவன். லட்சுமி பள்ளியில் ஆசிரியையாக பணிசெய்கிறாள். சுந்தரி (சுவாதி) அவள் தந்தையோடு (ஆர். சுந்தர்ராஜன்) அந்தக் கிராமத்திற்கு வருகிறாள். வேலனும் சுந்தரியும் காதலர்கள். லட்சுமியும் அந்த கிராமத்தில் பணியாற்றும் கிராம வளர்ச்சி அலுவலரான செல்வமும் (வாசன்) காதலர்கள். வேலன் தன் தங்கைக்கும் கிராமத்தின் தலைவர் ராசப்பன் (மணிவண்ணன்) மகன் மாணிக்கத்திற்கும் (பொன்வண்ணன்) திருமணம் செய்ய முடிவுசெய்கிறான். மாணிக்கம் மோசமான நடத்தையுள்ளவன்.

கிராமத்து வழக்கத்தை மீறி செல்வம் நடந்துகொண்டதால் அவன் பஞ்சாயத்தில் தண்டிக்கப்படுகிறான். தான் செல்வம் மீது வைத்துள்ள காதலை அனைவர் முன்னிலையிலும் வெளிப்படுத்தி அவனைத் திருமணம் செய்கிறாள் லட்சுமி. அதற்கு பிறகு செல்வத்தைப் பற்றிய உண்மை தெரியவருகிறது. செல்வம் கிராம வளர்ச்சி அலுவலர் இல்லை. அவன் ஒரு காவல் அதிகாரி. அவன் வேலனைக் கைதுசெய்யும் திட்டத்தோடு அந்தக் கிராமத்திற்கு வந்துள்ளான். ஏனென்றால் செல்வத்தின் தந்தைக்கும் வேலனுக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் அவரைக் கொலை செய்த குற்றத்திற்காக வேலனைக் கைது செய்கிறான். வேலன் சிறைக்குச் சென்றதும் கிராமத்தின் சந்தையை நிர்வகிக்கும் பொறுப்பு மாணிக்கத்திடம் வருகிறது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் வேலனை வழக்கிலிருந்து விடுதலை செய்கிறது. வேலன் தன் கிராமத்திற்கு வருகிறான். அவனது தங்கை வாழ்வு என்னவானது? அவனுக்கும் சுந்தரிக்கும் திருமணம் நடந்ததா என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா. பாடலாசிரியர்கள் கங்கை அமரன், முகமது மேத்தா, காமகோடியன் மற்றும் அறிவுமதி.[5]

பாடல் வரிசை
வ. எண்பாடல்பாடலாசிரியர்பாடகர்கள்காலநீளம்
1ஆலமரத்துக் குயிலேஅறிவுமதிஇளையராஜா, சுஜாதா5:02
2கண்மணிக்கு வாழ்த்து (பெண்குரல்)காமகோடியன்பவதாரிணி4:24
3கண்மணிக்கு வாழ்த்து (ஆண்குரல்)காமகோடியன்இளையராஜா4:24
4வயசுப்புள்ள வயசுப்புள்ளஅறிவுமதிஇளையராஜா, சுஜாதா5:08
5ஒத்த ரூபாவுக்கு ஒருமு. மேத்தாஅருண்மொழி, சுஜாதா5:00
6குட்டி நல்ல குட்டிகங்கை அமரன்அருண்மொழி5:03

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அண்ணன்_(திரைப்படம்)&oldid=4000620" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்