அட்டோக்

அட்டோக் (Attock), (முன்பு காம்ப்பெல்பூர் என அழைக்கப்பட்டது) [2] என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் வடக்கே அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது. இது அட்டோக் மாவட்டத்தின் தலைமையகமும் மற்றும் மக்கள்தொகை அடிப்படையில் பாக்கித்தானின் 61 வது பெரிய நகரமுமாகும் . இந்த நகரம் 1908 ஆம் ஆண்டில் பழைய நகரமான அட்டோக் குர்துக்கு தென்கிழக்கில் நிறுவப்பட்டது. இது முகலாய பேரரசர் அக்பரால் 16 ஆம் நூற்றாண்டில் அட்டோக் கோட்டையுடன் நிறுவப்பட்டது. மேலும் ஆரம்பத்தில் ஆங்கியே இராணுவ அதிகாரி சர் கொலின் காம்ப்பெல்லின் நினைவாக பெயரிடப்பட்டது.

அட்டோக்
காம்ப்பெல்பூர்
பழைய அட்டோக் கோட்டை
அட்டோக் is located in பாக்கித்தான்
அட்டோக்
அட்டோக்
ஆள்கூறுகள்: 33°46′0″N 72°22′0″E / 33.76667°N 72.36667°E / 33.76667; 72.36667
நாடு பாக்கித்தான்
பாக்கித்தனின் மாகாணங்கள்பஞ்சாப்
பிராந்தியம்இராவல்பிண்டி
மாவட்டம்அட்டோக் மாவட்டம்
Established4 ஏப்ரல் 1904
மாநகராட்சி1978
மக்கள்தொகை
 • City1,46,396
 • தரவரிசைபாக்கித்தானின் 60வது பெரிய நகரம்
நேர வலயம்ஒசநே5 (பாக்கித்தானிய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
43600
Area code057

சொற்பிறப்பியல்

1908 ஆம் ஆண்டில் சர் கொலின் காம்ப்பெல்லின் நினைவாக இந்த நகரத்திற்கு ஆரம்பத்தில் காம்ப்பெல்போர் என்று பெயரிடப்பட்டது. மேலும் காம்ப்பெல்பூர் என்றும் உச்சரிக்கப்பட்டது. இந்த பெயர் 1978 ஆம் ஆண்டில் அட்டோக் என மாற்றப்பட்டது. அதாவது "மலையின் கால்"எனப்பொருளாகும்..

நிலவியல்

சிந்து நதியின் துணை நதியான ஹாரோ ஆற்றின் அருகே அட்டாக் அமைந்துள்ளது, இராவல்பிண்டியிலிருந்து 80 கிமீ (50 மைல்), பெசாவரிலிருந்து 100 கிமீ (62 மைல்), பாக்கித்தானின் கம்ராவிலிருந்து 10 கிமீ (6 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

வரலாறு

பின்னணி

அட்டோக் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளது. காந்தார தேசம் என்பது சுவாட் பள்ளத்தாக்கு மற்றும் பாக்கித்தானின் போத்தோஹர் பீடபூமி பகுதிகள் மற்றும் வடகிழக்கு ஆப்கானித்தானின் ஜலாலாபாத் மாவட்டம் வரை பரவியிருந்த ஒரு பழங்கால இராச்சியமாகும். சிந்து ஆற்றின் நடுவில் அமைந்திருந்த இப்பகுதியில் தக்சசீலம் மற்றும் பெசாவர் ஆகியவை அதன் முக்கிய நகரங்களாக இருந்தன. இந்த இடம் அரசியல் மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் சிந்து இங்கே கைபர் கண்வாய் வழியாக ஆப்கானித்தானுக்கு இராணுவ மற்றும் வர்த்தக பாதையை வழங்குகிறது. பேரரசர் அலெக்சாண்டர், தைமூர் மற்றும் நாதிர் ஷாவின் ஆகியோரின் படைகள் இந்தியத் துணைக்கண்டத்தின் மீதான படையெடுப்புகளின்போது இந்த இடத்தை கடந்து சென்றது. [3]

இது பேரரசர் அக்பரின் மந்திரி கவாஜா சம்சுதீன் கவாபியின் மேற்பார்வையில் 1583 இல் அட்டோக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. [4] கர்னால் போரில் முகலாயர்களை தோற்கடித்தபோது நாதிர் ஷா இதன் வழியாக சென்றார். இதன் மூலம் வட இந்தியாவில் முகலாய சக்தியை முடிவுக்கு கொண்டுவந்தார். 1758 ஏப்ரல் 28 அன்று துராணிப் பேரரசுக்கும், மராத்தா பேரரசிற்கும் இடையில் அட்டோக் குர்தில் போர் நடந்தது. பேஷ்வா இரகுநாதராவ் மற்றும் துகோசி ராவ் ஓல்கர் ஆகியோரின் கீழ் மராட்டியர்கள் போரில் வெற்றி பெற்று அட்டோக்கைக் கைப்பற்றினர். [5] ஆனால் இந்த வெற்றி குறுகிய காலமே இருந்தது. ஏனெனில் அகமது ஷா துரானி அட்டோக்கை மீண்டும் கைப்பற்றி, பானிபட்டில் தங்கள் படைகளை அழித்த மராட்டிய முன்னேற்றத்தை தடுத்தார். துரானிப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, சீக்கியர்கள் இதனை ஆக்கிரமித்தனர். ரஞ்சித் சிங்கின் (1780-1839) கீழ் சீக்கிய இராச்சியம் (1799-1849) 1813 ஆம் ஆண்டில் துரானி நவாபிடமிருந்து அட்டோக் கோட்டையை கைப்பற்றியது.

1849 ஆம் ஆண்டில், காம்ப்பெல்பூர் மாவட்டத்தை உருவாக்கிய பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் அட்டோக் குர்து (பழைய அட்டோக்) கைப்பற்றப்பட்டது. 1857 இல் ஏற்பட்ட இந்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து, பிராந்தியத்தின் முக்கியத்துவம் பிரித்தானியர்களால் பாராட்டப்பட்டது. அவர்கள் 1857–58 இல் காம்ப்பெல்பூர் இராணுவப் பிரிவை இங்கு நிறுவினார். காம்ப்பெல்பூர் மாவட்டம் 1904 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

நவீன காலம்

1947 ல் பாக்கித்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், இந்துக்களும்சீக்கிய சிறுபான்மையினரும் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தனர். அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து முஸ்லிம் அகதிகள் அட்டோக்கில் குடியேறினர். பாக்கித்தான் அரசு 1978 ஆம் ஆண்டில் காம்ப்பெல்பூரை அட்டோக் என்று பெயர் மாற்றியது. [6] பாக்கித்தானிய இராணுவ வீரர்கள் மத்தியில் இந்த நகரமும் இதனை சுற்றியுள்ள பகுதிகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக அறியப்படுகிறது . [7]

மேலும் காண்க

குறிப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அட்டோக்&oldid=3855744" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்