அசானி வீரரத்தினா

அசானி தனுஜா வீரரத்தினா (Ashani Tanuja Weeraratna, பிறப்பு: 1970/71) ஓர் அமெரிக்க இலங்கை தென் ஆப்பிரிக்க ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் மெலனோமா எனும் ஒரு வகை தோல் புற்றுநோய் பற்றிய பல தெளிவான அறிவியல் பூர்வ ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பெண்மணி ஆவார். இவர் விஸ்டார் நிறுவனத்தில் உள்ள வீரரட்னா ஆய்வகத்தின் தலைவர் ஆவார். விஸ்டார் நிறுவனம் என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். அஷானி வீரரட்னா விஸ்டார் நிறுவனத்தின் முழு நேர பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். மேலும் நுண்சுற்றுசூலியல், நோய்எதிர்பியல், புற்றுநோயின் மெட்டாஸ்டிக் துறையின் இணை நிரல் தலைவராகவும் பணியாற்றுகிறார்.அறிவியல் பல்கலைக்கழத்தில் புற்றுநோய் உயிரியல் துறையின் நிரல் இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.

அசானி வீரரத்தினா
Ashani Weeraratna
பிறப்பு1970/71
தேசியம்இலங்கையர்
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்சென். மேரிசு கல்லூரி, மேரிலாந்து (இளங்கலை)
ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் (MPhil, முனைவர்)

இளமை பருவமும் கல்வியும்

இவர் இலங்கையில் பிறந்த தென் ஆப்பிரிக்காவில் வளர்ந்த பெண்மணி ஆவார். தனது பதினைந்தாம் வயதிலிருந்தே புற்றுநோய் ஆராய்ச்சி மேல் பற்று கொண்டார். 1988 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இன ஒதுக்கலால் அந்நாட்டை விட்டு தன் பதினேழாம் வயதில் அமெரிக்காவின் மேரிலாந்து உள்ள புனித மேரி கல்லூரியில் உயிரியல் பாடம் படிக்க சென்றார்.[1][2] இன ஒதுக்கல் ஆங்கிலத்தில் (Apartheid) என அழைக்கப்படுகிறது. "அப்பர்தீட் " என்றால் "பிரித்து வைக்கப்பட்ட நிலை" என்று அர்த்தம். தென்னாபிரிக்க அரசால் 1948ல் இருந்து 1998 வரை இருந்த சட்டம் மூலமாக இன வேற்றுமை முறை செயல்பாட்டில் இருந்த காலத்திணை "இன ஒதுக்கல் காலம்" எனப்படுகிறது அல்லது ஆங்கிலத்தில் (Apartheid - Era ) என்றழைக்கப்படுகிறது இவர் தன் இளங்கலை பட்ட படிப்பை 1991 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 1997 ஆம் ஆண்டு தத்துவவியலின் முதுகலை பட்டத்தை சார்ஜ் வாசிங்டன் பல்கலைகழகத்தின் மூலம் பெற்றார்.அவரது 1998 ஆம் ஆண்டின் விரிவுரை மெட்டாஸ்ட்டிக் மனித புரோஸ்டேட் புற்றுநோயில் யுட்டிரோ குளோபின் தன்மையின் இழப்பு என பெயரிட்டு வெளியிடப்பட்டது. சார்ஜ் வாசிங்டன் பல்கலைகழகத்தின் மூலம் புற்றுநோயின் மூலக்கூறு மற்றும் செல்லியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.ஸ்டீவன் பட்டிர்னோ என்பவர் அஷானி வீரரட்னாவின் கருத்தியலின் ஆலோசகர் ஆவார்.[3] 1998 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் பரிசோதனை சிகிச்சையியல் மற்றும் மருந்தியல் பயிற்சி பெற்றார்.[4]

தொழில்

அஷானி வீரரட்னா விஸ்டார் நிறுவணத்தின் முலு நேர பேராசிரியராக பணியாற்றிவருகிறார். மேலும் நுண்சுற்றுசூலியல், நோய்எதிர்பியல், புற்றுநோயின் மெட்டாஸ்டிக் துறையின் இணை நிரல் தலைவராகவும் பணியாற்றுகிறார். அறிவியல் பல்கலைக்கழத்தில் புற்றுநோய் உயிரியல் துறையின் நிரல் இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.

புற்றுநோய் ஆராய்ச்சி

  • 2007 ஆம் ஆண்டு மேரிலாந்தில் உள்ள தேசிய வயதுமூப்பு ஆராய்ச்சி நிறுவணத்தின் நோய் எதிர்பியல் ஆராய்ச்சி கூடத்தில் பணிபுரிந்தார்.[5]
  • அஷானி வீரரட்னா விஸ்டார் நிறுவணத்தின் துணை பேராசிரியராக பணியாற்றினார்.[2]
  • 2014 ஆம் ஆண்டு அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவணத்தின் மூலம் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான R01 விருதை பெற்றார்.[6]
  • 2015 ஆம் ஆண்டு வீரரட்னா வயது மூப்பின் தோல் மாற்றம் மற்றும் புற்றுநோய் கட்டி வளர்ச்சி தன்மையை பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டார்.[7]
  • 2016 ஆம் ஆண்டு முதல் ஐரா பிரின்டு இணை பேராசிரியர் என வழங்கப்பட்டார்.[8]
  • 2018 ஆம் ஆண்டு முதல் அஷானி வீரரட்னா விஸ்டார் நிறுவணத்தின் முலு நேர பேராசிரியராக பணியாற்றிவருகிறார். மேலும் நுண்சுற்றுசூலியல், நோய்எதிர்பியல், புற்றுநோயின் மெட்டாஸ்டிக் துறையின் இணை நிரல் தலைவராகவும் பணியாற்றுகிறார்.அறிவியல் பல்கலைக்கழத்தில் புற்றுநோய் உயிரியல் துறையின் நிரல் இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.[9] வீரரட்னா விஸ்டார் நிறுவனத்தில் உள்ள வீரரட்னா ஆய்வகத்தின் தலைவர் ஆவார். விஸ்டார் நிறுவனம் என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள ஒரு சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். விஸ்டார் நிறுவண தலைவரான டேரியோ ஆல்டீரி வீரரட்னாவை சிறந்த விஸ்டார் நிறுவண ஆராச்சியாளர் என பாராட்டியுள்ளார்.[10] இவர் மெலனோமா எனும் ஒரு வகை தோல் புற்றுநோய் பற்றிய பல தெளிவான அறிவியல் பூர்வ ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பெண்மணி ஆவார்.

செயற்பாடுகள்

வீரரட்னா 2018 ஆம் ஆண்டு சூன் மாதம் 30 ஆம் நாள் அமெரிக்காவில் நடைபெற்ற குடும்பங்கள் ஒன்றாக இணைந்து (ஆங்கிலம்-Families Belong Together) என்ற போராட்டத்தில் பென்சில்வேனியா எனும் இடத்தில் உரையாற்றினார். குடும்பத்தைத் தொடரமுடியாத நிலையில் அவர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை அவர் வெளிப்படுத்தினார். வீரரட்னா அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப்ன் ஃபேமிலி செப்ரேட் பாலிசியை கடுமையாக சாடினார். ஏனெனில் குடியேரிகளின் குடும்ப ஒற்றுமையை பாதித்தது. அஷானி வீரரட்னா ஒரு அமெரிக்காவின் வெளிநாட்டு குடியேரியாக தன் குடும்ப பாதிப்பை வெளிப்படுத்தினார்.

தேர்ந்தெடுத்த படைப்புகள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=அசானி_வீரரத்தினா&oldid=3540568" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்