அக்மோலா பிராந்தியம் (Akmola Region, காசாக்கு மொழி: Ақмола облысы , اقمولا) என்பது கசக்கஸ்தான் நாட்டின் மையத்தில் அமைந்துள்ள ஒரு பிராந்தியம் ஆகும். இதன் தலைநகரம் கோக்ஷெட்டாவ் நகரம் ஆகும். தேசிய தலைநகரான நூர்-சுல்தான் இப்பிராந்தியத்தால் சூழப்பட்டுள்ளது. என்றாலும் அரசியல் ரீதியாக அக்மோலா பிராந்தியத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் மக்கள் தொகை 715,000 ஆகும். இதில் கோக்ஷெட்டா நகரின் மக்கள் தொகை 157,000 ஆகும். பிராந்தியததின் பரப்பளவு 146,200 சதுர கிலோமீட்டர். இந்த பிராந்தியமும், கராகண்டா பிராந்தியம் மட்டுமே கசக்கஸ்தான் நாட்டின் பன்னாடடு எல்லைகளைத் தொடாதவை ஆகும். அக்மோலா பிராந்தியம் வடக்கில் வடக்கு கசக்கஸ்தான் பிராந்தியத்தையும், கிழக்கில் பாவ்லோடர் பிராந்தியத்தையும், தெற்கில் கராகண்டி பிராந்தியத்தையும், மேற்கில் கோஸ்தானே பிராந்தியத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளன. இப்பகுதியில் தங்கம் மற்றும் நிலக்கரி சுரங்கங்கள் சில உள்ளன.
சொற்பிறப்பியல்
கசாக் மொழியில் அக்மோலா என்றால் வெள்ளை புதைப்பு என்று பொருள்.
அக்மோலா பிராந்தியத்தில் பின்வரும் பத்து வட்டாரங்கள் நகர அந்தஸ்தைக் கொண்டுள்ளன:[4] அவை அக்கோல், அட்பசார், டெர்ஷாவின்ஸ்க், எரிமென்டோ, எசில், கோக்ஷெட்டாவ், மாகின்ஸ்க், சுச்சின்ஸ்க், ஸ்டெப்னோகோர்க் மற்றும் ஸ்டெப்னியாக் ஆகும்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
டேவிட் ரிகர்ட், பளுதூக்குபவர், ஒலிம்பிக் வாகையர், 5 எக்ஸ் உலக வாகையர் (லைட்-ஹெவிவெயிட் மற்றும் ஹெவிவெயிட்), 68 உலக சாதனைகள்.