Location of the town of லியோன்பெர்கு within Böblingen district
லியோன்பெர்குஇடாய்ச்சுலாந்தின் பாடன் வுயர்ட்டெம்பெர்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது மாநிலத் தலைநகரான இசுடுட்கார்ட்டு நகரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ 45,000 மக்கள் வசிக்கின்றனர். இடாய்ச்சு மொழியில் லியோன் என்றால் சிங்கம் என்று பொருள். பெர்கு என்பது மலையைக் குறிக்கும்.
புவியியல்
லியோன்பெர்கு கிளெம்சு ஆற்றின் கிழக்குக் கரையில் எங்கெல்பெர்கு (எங்கெல்-தேவதை, பெர்கு-மலை) என்னும் மலையின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது. கிளெம்சு ஆறு லியோன்பெர்கின் ஊடாகப் பாய்ந்து எட்லிங்கென் மாவட்டம், ஓபிங்கன் ஆகிய ஊர்களின் வழியாகச் சென்று பின்னர் திட்ச்சிங்கனைச் சேர்கிறது.
திட்ச்சிங்கென், கெர்லிங்கென் ஆகிய ஊர்கள் இவ்வூரின் அண்டை ஊர்களாகும்.