கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேத்தி I |
---|
சேத்தி I |
முதலாம் சேத்தியின் உருவம், அபிதோஸ் கோயில் |
எகிப்தின் பாரோ |
---|
ஆட்சிக்காலம் | கிமு 1290–1279, எகிப்தின் பத்தொன்பதாம் வம்சம் |
---|
முன்னவர் | முதலாம் ராமேசஸ் |
---|
பின்னவர் | இரண்டாம் ராமேசஸ் |
---|
- Prenomen: Menmaatre
Eternal is the Strength of Re - Nomen: Seti Merenptah
He of the god Seth, beloved of Ptah [1] - Horus name: Kanakht Khaemwaset-Seankhtawy
The strong bull, rising in Waset, he who makes life in the two lands [2][3] - நெப்டி பெயர்: Wehemmesut Sekhemkhepesh Derpedjetpesdjet
He who renews the births, strong with a sword who subjugates the nine bows - Golden Horus: Wehemkhau Weserpedjutemtawnebu
He who renews the crowns, he who subjugates the nine bows in all lands
|
துணைவி(யர்) | துயா |
---|
பிள்ளைகள் | இரண்டாம் ராமேசஸ் உள்ளிட்ட நால்வர் |
---|
தந்தை | முதலாம் ராமேசஸ் |
---|
தாய் | சித்ரே |
---|
இறப்பு | கிமு 1279 |
---|
அடக்கம் | கேவி17 |
---|
நினைவுச் சின்னங்கள் | சேத்தியின் நினைவுக் கோயில், அபிதோஸ் நகரம் |
---|
முதலாம் சேத்தி (Sethos I) பண்டைய எகிப்தின் புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 19-ஆம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் ஆவார். இவர் முதலாம் ராமேசஸ்-இன் மகனும், இரண்டாம் ராமேசஸ்-இன் தந்தையும் ஆவார். முதலாம் சேத்தி பண்டைய எகிப்தை கிமு 1290 முதல் 1279 முடிய 11 ஆண்டுகள் ஆண்டார்.[4][5] இவரது ஆட்சிக் காலத்தின் போது முதலாம் சேத்தி கட்டிய கோயில் சுவர்களில் பண்டைய எகிப்திய மன்னர்களின் பெயர்கள் குறுங்கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டது. அதனை அபிதோஸ் மன்னர்கள் பட்டியல் என்பர்.
பார்வோன்களின் அணிவகுப்பு
3 ஏப்ரல் 2021 அன்று எகிப்திய அருங்காட்சியகத்திலிருந்த 18 பார்வோன்கள் மற்றும் 4 அரசிகளின் மம்மிகளை எகிப்திய பண்பாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு அழகிய வண்டிகளில் ஏற்றி, அணிவகுப்பாக எடுத்துச் செல்லும் போது பார்வோன் முதலாம் சேத்தி மம்மியும் எடுத்துச் செல்லப்பட்டது. [6][6]
படக்காட்சிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்