காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம்
- பக்கம்
- உரையாடல்
கருவிகள்
Actions
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
வேலூர் காட்பாடி சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
![]() காட்பாடி தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கடலூர்- திருவண்ணாமலை - வேலூர்- சித்தூர் நெடுஞ்சாலை, காட்பாடி, வேலூர், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°58′20″N 79°8′18″E / 12.97222°N 79.13833°E / 12.97222; 79.13833 | ||||
ஏற்றம் | 213 மீட்டர்கள் (699 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை சென்ட்ரல் - பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம் | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 9 | ||||
இணைப்புக்கள் | ![]() | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | KPD | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சென்னை | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
வேலூர் காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம் (Katpadi Junction, நிலையக் குறியீடு:KPD) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் நகரிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது சென்னை - பெங்களூரு மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - திருப்பதி வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயில் சுத்தமாகவும் பராமரிக்கப்படும் இரயில் நிலையத்தில் ஒன்றாகும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள 20க்கும் மேற்பட்ட வருவாய் ஈட்டும் இரயில் நிலையங்களில் காட்பாடி இரயில் நிலையமும் ஒன்றாகும். இது கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் நெடுஞ்சாலை ஆந்திரப் பிரதேசத்தை இணைக்கும் சித்தூர் நெடுஞ்சாலையில் நகரின் வடக்கு இறுதியில் அமைந்துள்ளது.
இந்த நிலையத்தில் 5 நடைமேடைகள் உள்ளன. இதில் 4 மற்றும் 5 நடைமேடைகள் வழியாக முதன்மையாக வேலூர் கண்டோன்மென்ட் தொடருந்து நிலையம் வழியாக தெற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கும், ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கும் இயக்கப்படும் இரயில்கள் நின்று செல்கின்றன. ஒவ்வொரு நாளும் 150க்கும் அதிகமான பயணிகள் இரயில்கள் (இருபுறமும்) வேலூர்-காட்பாடி சந்திப்பு வழியாக செல்கின்றன. தளமேடை 1 முதல் 3வரை, சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலங்களுக்கான பயணிகள் இரயில்கள் முதன்மையாக இயக்கப்படுகின்றன.[1][2]
காட்பாடி நிலையத்திலிருந்து 5 முதல் 6 கிலோமீட்டர் தொலைவில் பேருந்து நிலையம் உள்ளது. இரயில் நிலையத்திற்கு வெளியே இரயில் நிலையத்தை இணைக்கும் பஸ் வசதிகள் கிடைக்கின்றன. டாக்சிகள் மற்றும் ஆட்டோ போன்ற மற்ற போக்குவரத்து முறைகள் நகரத்தினை இணைக்கின்றன.
சென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி சந்திப்புக்கு தினமும் சராசரியாக முன்பதிவு செய்யாத 2,280 பயணிகள், வேலூருக்கு வருகை தருகின்றனர்.