64 – உரோமில் பெரும் தீ பரவி நகரின் வணிக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ (படம்) மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.
1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.
1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
தாலின்எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகவுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920 கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் என அறியப்பட்டது.
இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003-இல் தொடங்கப்பட்டது, தற்போது 1,66,562 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.